Published:Updated:

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

தமிழ்ப்பிரபா - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

தமிழ்ப்பிரபா - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

``சங்கர், என்னை விட்டுப் போனதும், பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்துச்சு. என் தலையில இருக்கிற வெட்டுக் காயங்கள் ஒருபுறம். மனசுல இருக்கிற காயங்கள் ஒருபுறம்னு என்ன பண்றதுனே தெரியாம விஷம் குடிச்சு சாகப் போயிட்டேன். ஆனா, அப்புறம்தான் தெரிஞ்சுது அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு. ஒருவேளை நானும் இறந்து போயிருந்தா, எங்க குடும்பம் சந்தோஷமாத்தான் இருந்துருப்பாங்க. அவங்க விருப்பமும் அதுதானே.  ஆனா, நான் சாக மாட்டேன். சாதியைப் பெருமையா நினைக்கிற அவங்களுக்கு முன்னாலே சாதி ஒழியணும்னு போராடுற ஒரு பொண்ணா மாறணும்னு முடிவு பண்ணி என்னை நானே உறுதியாக்கிக்கிட்டேன்’’ கம்பீரமாகப் பேசுகிறார் உடுமலைப்பேட்டை கெளசல்யா. ஆணவப் படுகொலைக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் கெளசல்யாவைச் சந்தித்தேன்.    

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

கெளசல்யா, உடுமலைப்பேட்டைக் கல்லூரியில் படிப்பதால் குமரலிங்கம் கிராமத்துக்கு வாரம் ஒருமுறைதான் வருகிறார். அவரைப் பார்த்ததும் கிராமமே உற்சாகமாகிறது. ஊர்க்காரர்கள் “என்னம்மா எப்போ வந்த...” என்று அன்போடு நலம் விசாரிக்கிறார்கள். இரண்டு சிறுபிள்ளைகள் ஓடிவந்து “அக்கா இந்த டிரெஸ் சூப்பர்” என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் ஓடுகிறார்கள்.  ``யார் அந்தப் பிள்ளைங்க?’’ என்கிற கேள்வியிலேயே அவருடனான உரையாடலைத் துவங்கினேன்.

“ `சங்கர் தனிப்பயிற்சி மையம்’ ஆரம்பிச்சிருக்கோம். அவங்க எல்லாம் பக்கத்துல இருக்கிற பசங்க. சாயங்காலத்துல அவங்களுக்குப் பள்ளிப்பாடங்கள் சொல்லித் தருவோம். விடுமுறை நாள்கள்ல இந்தப் பிள்ளைகளுக்குப் பறை, சிலம்பம் சொல்லித் தர்றோம். அதுமட்டுமில்லாம இந்தப் பிள்ளைகளுக்கு அம்பேத்கர் பற்றியும் பெரியார் பற்றியும் சொல்லித் தர்றோம். இந்தச் சுற்று வட்டாரப் பகுதிகள்ல சாதிப் பிரிவினை அதிகம். இங்கேயே வளர்ற இந்தப் பசங்களாவது சாதிக்கு எதிராக வளரணும்னு விரும்புறேன். இப்போதைக்கு இருபது பசங்க படிக்கிறாங்க.

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”சுற்று வட்டாரத்துல இன்னும் நிறைய குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் தேவைப்படுது. ஆனால், எங்கிட்ட தலித் பசங்க அதிமாக படிக்கிறதால மத்தவங்க பிள்ளளைகளை இங்கே கொண்டு சேர்த்துவிடத் தயங்குகிறாங்க. அவ்வளவு ஏன்... தலித் குழந்தைங்கன்னா பாடம் எடுக்க வரலைனு சொன்ன ஆசியரைக்கூட சமீபத்துல சந்திச்சேன். ஆனா, இந்த மாதிரி புறக்கணிப்புகள்தான் இன்னும் என்னை வலிமையாக்குது.  

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

சங்கர், கொலை ஆகுறதுக்கு முன்னாடி எனக்கு இவங்கள்லாம் தெரியாது. ஆனா, சாதிதான் அவனை எங்கிட்ட இருந்து பிரிச்சதுன்னு உணர்ந்தப்போ, அந்தச் சாதிக்கு எதிராகப் பேசியிருக்கிற இவங்களோட அரசியல் கருத்துகளைத் தேடித் தேடித் தீவிரமா வாசிக்க ஆரம்பிச்சேன். பெண்ணா பிறந்த ஒவ்வொருவரும் பெரியாரைப் படிக்கணும்னு விரும்புறேன். அம்பேத் கருடைய சாதியொழிப்பு நூல்களை வாசிக்க வாசிக்கத்தான் சாதிங்கிறது ரொம்ப வருஷமா இருக்கிற நோய்னு எனக்குப் புரிஞ்சது. இவ்ளோ நாள் ஆகியும் அதை ஒழிக்க முடியலைன்னு சொல்றதைவிட ஒழிக்க யாரும் விரும்பல. ஆனா, என்னைப்போல இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்தா நிச்சயம் முடியும். நான் ஏதோ ஆர்வத்துலேயும் ஆவேசத்துலேயும் பேசுறேன்னு நினைக்காதீங்க. அடுத்த தலைமுறை சாதிக்கு எதிரானதாதான் இருக்கும். அதுக்கு என்னாலே முடிஞ்ச பங்கைச் செய்வேன்.’’  

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே வந்த சிறுவனை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் சங்கரின் இரண்டாவது தம்பி. சங்கரின் இரண்டு தம்பிகளும் படித்துப் பெரிய ஆளாக வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருக்கும் கௌசல்யா தற்போது  பி.எஸ்சி. படித்து வருவதோடு, அடுத்ததாக எம்.எஸ்.டபிள்யு படிப்பதற்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறார். சங்கரின் குடும்பத்திற்குத் தலைமகளாக இருந்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

இதுவரை இருபத்தைந்து கூட்டங்களுக்கு மேலாகச் சென்று சாதிக்கு எதிரான தன் முழக்கத்தைக் கொண்டு சேர்த்திருக்கிருக்கும் கௌசல்யா, தன் கணவர் சங்கர் குறித்த நினைவலைகள் எழும்பும்போது மட்டும் குரல் தழுதழுக்கிறதே தவிர, சாதியைக் குறித்த அவரது புரிதல்களைப் பற்றியும் சாதி ஏன் ஒழிய வேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கும்போதும் உணர்ச்சிவயப்படாமல் சிறந்த பேச்சாளருக்கே உரிய நிதானத்துடன் பேசுகிறார்.  

“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்!”

`‘என் அப்பா அம்மா எங்க உறவினர்கள் போல இல்லாம என் வயதுடைய அடுத்த தலைமுறை இளைஞர்களாவது சாதியை நம்பாமல் மானுடச் சமத்துவத்தை ஏற்றுக் கொள்வதற்கு தொடர்ந்து பாடுபடுவேன். எந்தச் சாதி என் கணவனை என்னிடமிருந்து பிரித்ததோ அந்தச் சாதியால் மேற்கொண்டு எந்த உயிரும் போகக் கூடாது. அதனாலேயே சாதி ஒழிய வேண்டும் என்கிற களத்தில் நின்று நான் போராட ஆரம்பித்திருக்கிறேன். சாதி ஆணவத்தின் கடைசி சாட்சியமாக நான் இருப்பேன். கடைசியாக நடந்த ஆணவக்கொலை என் கணவருடையதாக இருக்கட்டும். இருக்கும். சாதிக்கு எதிரான என்னோட எழுச்சி நிச்சயம் சாதியோட வீழ்ச்சியாத்தான் இருக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் கெளசல்யா!