Published:Updated:

மதுரை மல்லி, பத்தமடை பாய் உள்ளிட்ட 6 தமிழக பொருட்களுக்கு புவி சார் குறியீடு!

புதுடெல்லி: மதுரை மல்லி, தஞ்சாவூர் வீணை, பத்தமடை பாய் உள்ளிட்ட 6  தமிழக உற்பத்தி பொருட்களுக்கு  புவி சார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஒரு உற்பத்திப் பொருளின் சிறப்பினையும், விற்பனை வாய்ப்பினையும் அது தயாரிக்கப்படும் இடத்தின் சிறப்பை காட்ட உதவும் வகையில், மத்திய அரசின் வணிகவியல் துறையின்கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமைக் கழகம், அப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்குகின்றன.

அதன்படி இந்த ஆண்டு, இந்தியாவை சேர்ந்த மொத்தம் 193 பொருட்களுக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

##~~##
இதில் மதுரை மல்லி, பத்தமடை பாய், நாச்சியார் கோயில் விளக்கு, தஞ்சாவூர் வீணை, செட்டி நாடு கொட்டான் மற்றும் தோடர்களின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் ஆக உள்ளிட்ட  தமிழகத்தை சேர்ந்த 6 உற்பத்தி பொருட்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
 
பின் செல்ல