Published:Updated:

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்
பிரீமியம் ஸ்டோரி
சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

சுஜிதா சென் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன், தே.அசோக்குமார், க.பாலாஜி

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

சுஜிதா சென் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன், தே.அசோக்குமார், க.பாலாஜி

Published:Updated:
சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்
பிரீமியம் ஸ்டோரி
சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

சின்னத்திரையில் சிக்ஸர் அடிக்கும் சூப்பர் ஜோடிகள் இவர்கள்.  காதல், ஊடல் என கேமராக்கள் முன் மட்டும் அல்லாமல் ரியலிலும் ஜோடியாக வாழ்ந்துவரும்  சில  ஜோடிகளின்  வீட்டுக்குள்  ஊடுருவிச்  சந்தித்ததிலிருந்து...

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

ஆக்ரோஷம் இல்லை... எப்பவுமே அமைதிதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமித் - ஸ்ரீரஞ்சனி

`` ‘லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்’ இதைத்தான் நான் ஸ்ரீரஞ்சனிகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். எல்லோரும் சொல்ற மாதிரி நாங்க மொதல்ல நண்பர்களாத்தான் இருந்தோம். கொஞ்ச நாளைக்கு அப்பறம் எங்களுக்கே இது வெறும் நட்பு இல்லைன்னு புரிஞ்சிடுச்சு. ஸ்ரீரஞ்சனியை ஒரு ரெஸ்ட்டாரென்ட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்க வச்சு ‘நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமானு? ’கேட்டேன். சிரிச்சுக்கிட்டே தலையாட்டுனா ரஞ்சனி. அவங்க வெட்கப்பட்டதை அன்னிக்குத்தான் முதல் முறையா பார்த்தேன்.” காதல் கதையை சுவாரஸ்யம் குறையாமல் சொல்கிறார் அமித்.

“அப்படியா சார். நான் வெட்கப்பட்டேனா? ம்ம்ம்ம்... நம்பிட்டேன்” என்று அமித்தை நக்கல் அடித்தபடியே தொடர்கிறார் ஸ்ரீரஞ்சனி. “பார்த்த ரெண்டாவது மாசமே காதல். அதுக்கப்புறம் எனக்கு துபாய் எஃப்.எம்-ல வேலை கிடைச்சுருச்சு. இவரும் கன்னட பிக் பாஸுக்குப் போயிட்டாரு. ‘இப்படி பிஸியாவே இருந்தா வாழ்க்கை முழுக்க நமக்குக் கல்யாணமே நடக்காது. சட்டுபுட்டுன்னு ரெண்டு வீட்டையும் மீட் பண்ண வைக்கிறோம். கல்யாண வேலைகளை ஆரம்பிக்கிறோம்’னு முடிவெடுத்தோம். உடனே நிச்சயதார்த்தம் நடந்துச்சு. 2016 ஜனவரில கல்யாணம்.” என்கிறார் ஸ்ரீரஞ்சனி.

“பிக்பாஸ்ல அப்பப்போ, ‘நீங்க கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க’னு ஒரு குரல் கேட்ருப்பீங்கள்ல. இந்த பிக் பாஸோட குரல் கன்னடத்துல என்னுடையதுதான்.” என்று அமித் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிடுகிறார் ஸ்ரீரஞ்சனி.

“ஆமாங்க. இவரு நடிக்கிறதெல்லாம் ராமாயணத்துல ராமன் கதாபாத்திரம், மகாபாரதத்துல கிருஷ்ணர் கதாபாத்திரம். சீரியல்ல அவ்ளோ ஆக்ரோஷமா டயலாக் பேசிட்டிருப்பார். ஆனா, நிஜத்துல அப்படியே நேரெதிர். வீட்ல பூனைக்குட்டி மாதிரி ரொம்ப அமைதியா அடக்கமா இருப்பார்” என்று கலாய்த்தார். “இவங்க எஃப்.எம் ரேடியோ மாதிரியேதாங்க. தொறந்தால் வாயை மூடுறதே இல்ல” என்று சட்டென அமித்திடமிருந்து பதில் தாக்குதல்.

“கூடிய சீக்கிரமே பெரிய ரியாலிட்டி ஷோவில் ஸ்ரீரஞ்சனியைத் தொகுப்பாளரா பார்க்கலாம்” என டிவி பிரேக்கிங் நியூஸ் கொடுக்கிறார் அமித்!

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

ப்ரீத்திதான் ஸ்கிரிப்ட் ரைட்டர்!

சஞ்சீவ் - ப்ரீத்தி

``அட்வைஸ் பண்ணியே ஆளை மடக்கிட்டேன்.  இவரோட ஒரு பிறந்தநாள் அன்னிக்கு நடுராத்திரில தனியா ஊர்சுத்தக் கிளம்பிட்டார். அந்த விஷயம் தெரிஞ்சதுமே நான் போன் பண்ணி நிறைய அறிவுரைகள் சொல்ல ஆரம்பிச்சுட்டேன். கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம். பிறகு ரெண்டுநாள் நாங்க பேசிக்கவே இல்ல. மூணாவது நாள் என்னைப் பார்க்க வந்தவர், ‘இவ்வளவு அட்வைஸ் பண்றியே. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?னு டக்குனு கேட்டுட்டார். நானும் சட்டுனு, ‘எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்க’னு சொல்லிட்டேன்” ப்ரீத்தி ஃப்ளாஷ்பேக் சொல்ல சஞ்சீவ் வெட்கப்பட... அந்தப் புன்னகையில் காதலைப் புதுப்பிக்கின்றனர் இருவரும்.

``சிவகார்த்திகேயன், மா.க.பா எல்லாரும் ஹியூமரா செமையா ஆங்கரிங் பண்றாங்க. நானும் அவங்களை மாதிரி ஒரு காலத்துல காமெடியா பேச முயற்சி பண்ணிட்டிருந்தேன். பிறகு, ‘நாம ஏன் மத்தவங்களை ஃபாலோ பண்ணணும்’னு எனக்குள் ஒரு கேள்வி. ரொம்ப வேகமாகப்பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குற பாணியைப் பிடிச்சுப்போம்னு முடிவெடுத்தேன். ஒரு தடவை கலைஞர்கூட, வேகமா பேசுற அந்த ஸ்டைலை கவனிச்சுட்டுப் பாராட்டினார். ஆனா, அந்தப் பாராட்டுக்கெல்லாம் நான் சொந்தக்காரன் இல்லை. என் ஸ்கிரிப்ட் ரைட்டர் ப்ரீத்திதான் அதுக்குக் காரணம்...” என்று மனைவியைக் கைகாட்ட, அந்தப் பாராட்டைத் தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறார் ப்ரீத்தி.

 ``நடிகர் விஜய் என் நண்பன். 24 வருஷ நட்பு. அப்போ இருந்த அதே விஜய்கிட்டதான், இப்பயும் பழகிட்டிருக்கேன்” என்கிற சஞ்சீவை இடைமறித்த ப்ரீத்தி, “விஜய் அண்ணா வீட்டுக்குப் போனா அவர்தான் எங்களுக்கு டீ போட்டுத்தருவார். அதெல்லாம் பார்க்கும்போது நமக்கே கொஞ்சம் நெருடலா இருக்கும். எங்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம்னா முதல்ல ஓடிவர்றது விஜய் அண்ணாவாதான் இருக்கும்” என நெகிழ்கிறார் ப்ரீத்தி.

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

பாலசந்தர் சார்தான் எங்கள் குருநாதர்!

விக்னேஷ் - ஹரிப்ரியா

`` எங்க காதலை எங்களுக்குள்ள வெளிப்படுத்தாம ஒருத்தர் மனசுல இருந்ததை இன்னொருத்தர் புரிஞ்சுகிட்டோம்.  நாங்க லவ் பண்றதை முதல்ல வீட்லதான் சொன்னோம். எங்களுக்குள்ள லவ் ப்ரபோசல் எதுவும் நடக்கவே இல்லை. நேரடியா அவங்க வீட்ல நானும், என் வீட்ல அவரும் கல்யாணத்துக்காகப் பேசினோம். காதலுக்கு வீட்ல உள்ளவங்களும் சம்மதிச்சாங்க. உடனடியா  ஒரு மாசத்துல கல்யாணமும் பண்ணி வச்சுட்டாங்க. அதனால அந்தக் காதல் தின நாள்களை நாங்க அனுபவிக்கவே இல்லை...’’ என்கிற ஹரிப்ரியாவின் வார்த்தைகளுக்கு லைக்ஸ் தட்டுகிறார் விக்னேஷ்.

``எங்க கல்யாணத்துக்கு வந்தவங்கள்ல கே.பி சார் மிக முக்கியமான மனிதர். எங்களுக்கு அவர் சொல்லாத அறிவுரைகளே இல்லை. ‘தம்பி, காதலிச்சுக் கல்யாணம் பண்ணா மட்டும் போதாது. கடைசிவரை அந்தக் காதல் இருக்கணும். வேலை - வாழ்க்கை இரண்டையும் சமமா நினைக்கணும். முக்கியமா, இணையோட நட்பு பாராட்டணும்’... இப்படி நிறைய சொல்லியிருக்கார். அந்த வார்த்தைகளை இன்னமும் ஞாபகத்துல வெச்சு ஃபாலோ பண்றோம்” என்கிறார் விக்னேஷ்.

“மீடியால நம்மைப்பற்றி வர்ற கிசுகிசுக்கள், தவறான செய்திகள், ஏமாற்றங்கள்... எல்லாத்தையும் நேர்மறையா எடுத்துக்கணும். அதேசமயம் யாராவது நம்மைத் தலையில் தூக்கிவெச்சுப் பேசினால் அந்தப் புகழ்ச்சிக்கு மயங்காம தெளிவா இருக்கணும்னு பல விஷயங்களை நான் ஹரிப்ரியாகிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். அதேசமயம் ப்ரியாகிட்ட குழந்தைத்தனத்தையும் பார்க்கலாம். அப்பெல்லாம் ‘என் மனைவியா, மகளா...’னு நினைச்சு சிரிச்சுக்குவேன்” என்று ஹரிப்ரியாவைத் தழுவிக்கொள்கிறார் விக்னேஷ்.

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

மலையாளமும் தமிழும் நல்லா சண்டை போடும்!

செந்தில் - ஸ்ரீஜா

“நாமெல்லாம் காலேஜ் படிக்கும் போது, ‘டேய் மச்சான், இந்தப் பொண்ணு பார்க்க நல்லா இருக்குது. லவ் பண்ணுடா’னு சொல்லி ஏத்தி விடுறது ஒரு ரகம். ஆனா, நாம லவ்வே பண்ணாம, ‘இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாய்ங்க. கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறாய்ங்க’னு பல வதந்திகளைப் பரப்பிவிட்டுக் காதலைத் தூண்டிவிடுறது இன்னொரு ரகம். அதுல ரெண்டாவது ரகத்துலதான் நாங்க மாட்டிக்கிட்டோம். எங்களுக்குள்ள சூப்பர் கெமிஸ்ட்ரி இருக்குனு சொல்லிச் சொல்லியே எங்களைக் கல்யாணம் பண்ண வெச்சிட்டாங்க. எங்களுக்குள்ள சொல்லிக்கிற அளவுக்கு ‘லவ் ப்ரபோசல் மொமென்ட்’னு ஒண்ணு இல்லவே இல்லைங்க’’ சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிக்கிறார் செந்தில்!

“ஸ்ரீஜாவுக்கு சமயத்துல தமிழ் சரியா வராது. சீரியல்ல கத்துக்கிட்ட அத்தனை டயலாக்கையும் சொல்லித் திட்டுவாங்க. ‘நீ அழிஞ்சு போய்டுவ, ஒழிஞ்சு போய்டுவ’ன்னு ஒரே சீரியல் டயலாக்ஸ் மயம்தான். செம காமெடியா இருக்கும். இந்த டயலாக்கெல்லாம் முடிஞ்ச உடனே மலையாளத்துல திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. எனக்கு ஒண்ணுமே புரியாது. ரொம்ப கூலா இருப்பேன். சமையல்லகூட, கேரளா ஸ்டைலும் தமிழ்நாட்டு ஸ்டைலும் கலந்தேதான் இருக்கும்” என்று ஸ்ரீஜாவைச் செல்லமாக முறைத்தபடி, அவர் தோள்மீது இடிக்கிறார் செந்தில்.

“கணவன் மனைவி உறவுல ஈகோ எட்டிப் பார்க்கறதுக்கு அந்தந்தச் சூழ்நிலைகள்தான் காரணமா இருக்கும். எங்களுக்குள்ள அப்படியொரு சூழ்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. எல்லா நேரமும் ஒண்ணா இருக்கறதுதான் இதுக்குக் காரணம். அதுக்கும்மேல எங்களுக்குள்ள இருக்குற இந்த அன்பு, புரிதல் எல்லாம் சேர்ந்த உறவுதான் பல சிக்கல்களுக்கு நடுவுல எங்களை இப்படி சந்தோஷமா வாழ வைக்குது.” செந்திலை அன்போடு அணைக்கிறார் ஸ்ரீஜா.

வாழ்த்துகள் மக்களே!

சின்னத்திரை - ரியல் சூப்பர் ஜோடிகள்

குடும்பம்தான் எல்லாம்!

லதா - ராஜ் கமல்

``என் பெயரின் முதல் எழுத்தான `ல’வையும், ராஜ் கமல் என்ற பெயரின் முதல் எழுத்தான `ரா’வையும் எடுத்து எங்களோட முதல் குழந்தைக்கு `லாரா’னு பெயர் சூட்டினோம். ரெண்டாவது குழந்தைக்கும் `ராவ்’ல இருந்து `ரா’வையும் `கமல்’ல இருந்து `க’வையும் எடுத்து `ராகா’னு பெயர் வெச்சோம். அடுத்த குழந்தை பிறந்தா `தாஜ்’னு வைக்கணும். நாங்க எடுக்கிற இந்த மாதிரியான சின்னச் சின்ன முடிவுகள்லகூட காதல் நிறைஞ்சிருக்கும்” என உற்சாகமாகப் பேசுகிறார் லதா ராவ்.

``2003-ல `றெக்கை கட்டிய மனசு’ சீரியல்ல சேர்ந்து நடிச்சோம். அதுல நான் ஹீரோ, இவங்க வில்லி. அப்போ இருந்து ஒரே லவ்வுதான். சீரியல்ல மட்டும்தான் லதா வில்லி. நிஜ வாழ்க்கையில் டம்மி பீஸுங்க! ஸாரி, ஸாரி... இவங்க பொறுப்புள்ள குடும்பத் தலைவி, பக்திமான், வீட்ல அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யும் தெய்வம்’’ எனக் கமல் சமாளிக்க, தலையில் ஒரு தட்டு தட்டுகிறார் லதா.

``அடுத்ததா சினிமாவில் கேரக்டர் ரோலில் நடிக்கும் முயற்சிகள்ல இருக்கேன்’’ எனக் கமல் சொல்ல, ``நான் குடும்பத் தலைவிங்கிற ரோலை கரெக்ட்டா பண்றேன். ஒரு நடிகையா எப்போ வேணும்னாலும் இருக்கலாம். ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா இருக்க இதுதான் சரியான டைம். நாளைக்குக்கூட குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு குற்றாலம் வரைக்கும் போறோம். ஃபேமிலிதான் முக்கியம்!”

சூப்பர் மாம்!