வீட்டில் ஹேர் ஸ்பா செய்யக் கூடாது... ஏன்..?

`ஸ்பா' என்றால், `லக்‌ஸரி ட்ரீட்மென்ட்'. லத்தீன் மொழி வார்த்தையான 'Sanus Per Aquam' என்பதன் சுருக்கமே Spa. சுத்தமான தண்ணீரில் செய்யப்படும் ட்ரீட்மென்ட் என்பது பொருள். இந்த வகை ட்ரீட்மென்ட் 1990-களில் ஐரோப்பாவில் அதிகமாகச் செய்ய ஆரம்பித்தார்கள்.

வீட்டில் ஹேர் ஸ்பா செய்யக் கூடாது... ஏன்..?

டீனேஜ் பெண்களின் ஃபேவரைட் டிரீட்மென்ட்களில் ஒன்று, `ஸ்பா' ட்ரீட்மென்ட். எண்ணெய் தேய்த்துக் குளித்து, முடியை ஆரோக்கியமாக்க நேரமில்லை என்பவர்கள், ஸ்பா முறையில் செய்வார்கள். அப்படி இந்த `ஹேர் ஸ்பா'வில் என்ன இருக்கிறது, ஹேர் ஸ்பா என்றால் என்ன, சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

ஹேர் ஸ்பா

`ஸ்பா' என்றால், `லக்‌ஸரி ட்ரீட்மென்ட்'. லத்தீன் மொழி வார்த்தையான 'Sanus Per Aquam' என்பதன் சுருக்கமே Spa. சுத்தமான தண்ணீரில் செய்யப்படும் ட்ரீட்மென்ட் என்பது பொருள். இந்த வகை ட்ரீட்மென்ட் 1990-களில் ஐரோப்பாவில் அதிகமாகச் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் பூமிக்கு அடியில் உள்ள சுத்தமான நீரைப் பயன்படுத்தி சருமம் மற்றும் முடியைப் பராமரித்து வந்தார்கள். பலருக்கும் அந்த நீரைப் பயன்படுத்தி ட்ரீட்மென்ட் செய்துவந்தார்கள். அந்த இடத்துக்கு `ஸ்பா' என்று பெயர் இருந்ததாகவும், அந்தப் பெயரையே இந்த ட்ரீட்மென்டுக்கு வைத்ததாகவும் கூறுகிறார்கள். தற்போது, `ஸ்பா ட்ரீட்மென்ட்' பல்வேறு பார்லர்களில் பரவலாகச் செய்யப்படுகிறது. இந்த ஸ்பாவில், இரண்டு வகை இருக்கிறது.

1. பாடி ஸ்பா

2. ஹேர் ஸ்பா

வசுந்தராபாடி ஸ்பாவைவிட, ஹேர் ஸ்பாவையே பலரும் விரும்புகிறார்கள். ஹேர் ஸ்பா என்பது, அவரவரின் ஸ்கால்ப் அல்லது முடிக்கு ஏற்ப செய்யப்படுவது.

முதலில் எந்த இடத்தில் பிரச்னை உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்னரே, ஸ்பா ட்ரீட்மென்டை ஆரம்பிக்க வேண்டும்.

முடி வளரவே இல்லை எனச் சிலர் சொல்வார்கள். எதனால் முடி வளரவில்லை என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, பொடுகினால் பிரச்னை ஏற்படலாம். அல்லது ஸ்கால்பில் வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கலாம். இன்னும் சிலருக்கு, முடி டிரையாக இருக்கும். ஷைனிங் இல்லாமல் இருக்கலாம். அல்லது முடி பிளவு இருக்கலாம். பிரச்னையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செய்ய வேண்டும்.

ஹேர் வாஷ் செய்ய, அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பு வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. பியூரிஃபையிங் ஷாம்பு (Purifying Shampoo)

2. டீடாக்ஸ் ஷாம்பு (detox shampoo)

 

பியூரிஃபையிங் ஷாம்பு என்பது, அதிகம் பொடுகு இருப்பவர்களுக்குப் பயன்படுத்துவது. டீடாக்ஸ் ஷாம்பு என்பது, மற்ற அனைத்து முடிப் பிரச்னைக்குமானது.

ஹேர் ஸ்பா

ஷாம்புவைப் பயன்படுத்தி முடியை அலசியதும், அவர்களுக்குத் தேவையான கிரீம் மற்றும் கான்சென்ட்ரேட் (concentrate) இரண்டையும் கலந்து மசாஜ் செய்ய வேண்டும். கிரீம் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் அவசியம்.

நரேஷிங் கிரீம் பாத் (nourishing cream bath), ஹைடிரேட்டிங் கிரீம் பாத்  hydrating cream bath) போன்ற பல கிரீம் பாத்கள் இருக்கின்றன. அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.

முடி கடினமா இருக்கிறதா, அதிகமாகச் சிதைவடைந்து இருக்கிறதா, அல்லது ஹேர் டிரையாக இருக்கிறதா, இதையெல்லாம் கவனித்து, கிரீமைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் ஸ்கெல்ப்பில், பொடுகு இருக்கிறதா, ஸ்கெல்ப் காய்ந்து அரிப்பு ஏற்படுதா, அல்லது நீர்ச்சத்து குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஹேர் ஸ்பா

ஸ்கேனரைப் பயன்படுத்தியோ அல்லது மேக்னிஃபையிங் மிரர் ( magnifying mirror) பயன்படுத்தியோ ஸ்கால்ப் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இவை அனைத்தையும் பரிசோதித்துவிட்டு, பிரச்னைகளுக்கு ஏற்ப ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும். இது புரொபஷனல் ட்ரீட்மென்ட். இதை வீட்டில் செய்யவே கூடாது. பார்லரில் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். 

கடைகளில் ஸ்பா ஷாம்பு, கண்டிஷனர் கிடைக்கும். அவற்றை வீட்டில் பயன்படுத்தலாம். ஆனால், புரொபஷனல் ட்ரீட்மென்ட் செய்தால் தீர்வு கிடைக்கும் எனில், நிச்சயம் புரொபஷனலையே அணுக வேண்டும்.

ஹேர் ஸ்பா எடுத்த பின்னர், அவர்கள் பரிந்துரைக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால், தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அவரவர் பிரச்னைக்கு ஏற்ப, இரண்டு வாரத்துக்கு ஒருமுறையோ, நான்கு வாரத்துக்கு ஒருமுறையோ, ஸ்பா ட்ரீட்மென்ட் செய்துகொள்ள வேண்டும். அன்றாட பராமரிப்புக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை ஸ்பா ட்ரீட்மென்ட் மேற்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!