Published:Updated:

ரோபோ தீபாவளி!

ரோபோ தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
ரோபோ தீபாவளி!

கார்க்கிபவா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ரோபோ தீபாவளி!

கார்க்கிபவா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ரோபோ தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
ரோபோ தீபாவளி!

புத்தாடை உடுத்தி, பட்டாசுக் கொளுத்தி, பலகாரம் தின்று, படங்கள்பார்த்து... தீபாவளி இப்படித்தானே நமக்கு இருந்திருக்கிறது! எதிர்கால தீபாவளி எப்படி இருக்கும்? ஒரு ஃபிப்டி இயர்ஸை ஃபார்வர்டு பண்ணுவோமா?

2017.... 2027... 2037... .... ... 2067.

`எழுந்திரு மேன்’ என்று அதிகாலை ஐந்து மணிக்கு `அமேசான் எக்கோ’ என்னும் வாய்ஸ் அசிஸ்டென்ட் அலறும். வீட்டில் எந்த மூலையில் இருந்தாலும் “இன்று தீபாவளி. எழுந்திருங்கள். ஹேப்பி தீபாவளி. வேறு தகவல் வேண்டுமா?” என்ற சத்தம் கேட்டே தீரும். கூடுதலாக ஐந்து நிமிடங்கள் தூங்க நினைத்தால் அதனிடம், “தீபாவளி வரலாறு என்ன?” என்ற கேள்வியைக் கேட்கலாம். அதுவும் கூகுளைத் துழாவி ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம், ஏ கிங் கால்ட் நரகாசுரா...’ என்று கதை சொல்லும்!

ரோபோ தீபாவளி!

நெக்ஸ்ட் குளியல்

எண்ணெய் தேய்த்து விட பாட்டியையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கையில் கவர் பிரிக்காத தேங்காய் எண்ணெயுடன் ரோபோ ஒன்று உங்கள் அருகில் வரும். குளியல் அறைக்குள் குற்றாலத்தையே காட்டும் அந்த ரோபோ. சரியான அழுத்தத்தில், வலிக்காமல் தலையில் எண்ணெய் தேய்த்துவிடும். அன்றைய நாளின் வெப்பநிலை, உங்கள் உடல் எந்த அளவுக்கு சூடு தாங்கும் என்பதெல்லாம் ரோபோவுக்குள் ஸ்டோர் ஆகியிருக்கும். அதற்கேற்ற வெப்பநிலையில் வெந்நீரை உங்களுக்காக எடுத்துவைக்கும். குளித்துவிட்டு வரவேண்டியது தான். புத்தாடைகள் இல்லாமல் தீபாவளி எந்தக் காலத்திலும் இருக்க முடியாது. அதையும் நம்ம ரோபோ தயாராக வைத்திருக்கும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரோபோ தீபாவளி!

கிச்சன் கில்லாடி

சமையலுக்கும் ரோபோக்கள் உதவும். இந்த கிச்சன் ரோபோவிடம் மெனுவைக் கேட்க வேண்டியதுதான் நம் வேலை. நாம் சொல்லும் இனிப்புகளை கிச்சனில் நுழைந்து சில மணித்துளிகளில் செய்துவிடும் கிச்சன் ரோபோ. கைமுறுக்கு தெரியும். ரோபோ முறுக்கு எல்லாம் இனிமேல்தான் நாம் சாப்பிடவேண்டியிருக்கும். சமைப்பது மட்டுமல்ல; அழகாக பேக் செய்து பக்கத்து வீட்டுக்குப் போய் டெலிவரியும் செய்துவிடும் கிச்சன் ரோபோ.

சினிமா இல்லாம தீபாவளியா?

தீபாவளி அன்று சினிமாவுக்குப் போகாமல் இருக்க முடியுமா? ஆனால், 2050-ம் ஆண்டில் தியேட்டர்கள் எல்லாம் வீட்டுக்குள்ளேதான் இருக்கும். அதனால், டிக்கெட் பஞ்சாயத்தில்லை. ஆனால், எந்தப் படம் பார்ப்பது? Bot எனப்படும் ரோபோவைக் கேட்டால் போதும். ட்விட்டரையும், ஃபேஸ்புக்கையும் அப்போது ஹாட் ஆக இருக்கும் மற்ற சமூக வலைதளங்களையும் இந்த பாட் மேயும். எந்தப் படத்துக்கு அதிக ஹார்ட் சிம்பல் விழுந்திருக்கிறதோ அதை உங்களிடம் சொல்லும். அந்தப் படத்தை நம் வீட்டு ஹோம் தியேட்டரிலேயே பார்க்கலாம். டிக்கெட்டுக்குப் பதிலாக, புரொஜெக் ஷனுக்கு கீ ஒன்று வாங்க வேண்டியிருக்கும். அதையும் ஆன்லைனிலே வாங்கிவிட்டால், குடும்பத்துடன் படம் பார்க்கலாம். இடைவேளையில் பாப்கார்ன் கொண்டுவரும் வேலையை கிச்சன் ரோபோ பார்த்துக்கொள்ளும்.

ரோபோ தீபாவளி!

பட பட பட்டாசு

பட்டாசு வெடிக்க பலவகையான ரோபோக்கள் கடைகளில் கிடைக்கும். நாம் வாங்கவேண்டியது பட்டாசை அல்ல; ரோபோக்களைத்தான். `கிரீன் தீபாவளி’ கொண்டாடுபவர்களுக்கு ஒரு ரோபோ உண்டு. அது உங்கள் வீட்டுக்குள்ளேயே விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் பட்டாசு வெடிக்கும். டி.வி-யின் மேல் புஸ்வாணம் விடலாம். ஃப்ரிட்ஜுக்குள் ராக்கெட் விடலாம். ரிசப்ஷன் பகுதியில் 1,000 வாலா கொளுத்தலாம். சத்தம் கேட்கும்; ஒளி வரும். ஆனால், எல்லாமே மாயை. பட்டாசு வெடித்த திருப்தியும் கிடைக்கும். சுற்றுப்புறமும் பாதிக்கப்படாது.

இன்னொரு வகை ரோபோ வரலாம். அது கொஞ்சம் வீரமான ரோபோ. தெருவில் பட்டாசை வைத்துவிட்டு, ரோபோவை ஆன் செய்துவிட வேண்டியதுதான். அதுவே பட்டாசை நெருங்கிப் பற்றவைத்துவிடும். நாம் வேடிக்கை பார்த்தால் போதும். எல்லா தீபாவளிக்கும் ஒரு சண்டை நடக்கும். யார் வீட்டின் முன்பு அதிக பட்டாசுக் காகிதம் இருக்கிறதென்பதுதான் அந்தச் சண்டை. அதையும் இந்த ரோபோவிடம் சொல்லிவிட்டால் போதும். நாம் வெடிக்கும் பட்டாசின் ஒரு காகிதம்கூட பக்கத்து வீட்டு வாசலுக்குப் போகாமல் பார்த்துக்கொள்ளும் ‘க்ராக்கர் ரோபோ.’