Published:Updated:

``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’

``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’
பிரீமியம் ஸ்டோரி
``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’

வேல்ஸ்

``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’

வேல்ஸ்

Published:Updated:
``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’
பிரீமியம் ஸ்டோரி
``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’

‘` ‘வயலின் வாங்கிவிட்டால் வயலினிஸ்ட் ஆகிவிட முடியாது என்பதில் இருக்கும் தெளிவு, பிள்ளை பெற்றுவிட்டால் பெற்றோர் ஆகிவிட முடியாது என்பதில் இல்லை - இதை நானும் என் மனைவி வைதேஹியும் அடிக்கடி எங்களுக்குச் சொல்லிக்கொள்வோம். அதேபோல எங்கள் மகனிடமும், மகளிடமும், ‘நீங்க ரெண்டு பேரும் User Manual இல்லாமத்தானே பிறந்தீங்க?  அதனால் எல்லாவற்றையும் சுயமாகத்தான் கத்துக்கணும்’ என்று அடிக்கடிச் சொல்வது மட்டுமல்ல. அவர்களை அப்படித்தான் வளர்த்தோம்’’ - தாய்வான் தலைநகர் தாய்பெயில் இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஸ்ரீதரன் எதையுமே சும்மாப் பேச்சுக்காகச் சொல்பவர் இல்லை. உண்மையிலேயே இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். சரி, ரிசல்ட்? இப்போது ஸ்ரீதரன், அவரது மனைவி வைதேஹி, மகன் அபி, மகள் கீர்த்தனா ஆகிய நான்கு பேருமே தங்களைச் சுற்றியிருக்கும் வட்டத்தில் கவனம் ஈர்க்கும் முக்கியப் புள்ளிகள்.

``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’

இவர்களின் மகன் அபிக்கு 24 வயது. அதற்குள் அவர் இசையில் தொட்டிருக்கும் உயரம் அதிகம். இசை உலகில் கொடிகட்டிப் பறக்கும் முதல் மூன்று கம்பெனிகளில் ஒன்றான வார்னர் மியூசிக் குழுவின் ஒரு பிரிவான ‘டாமி பாய்’ என்ற இசைக்குழுவில் இணைந்து இசைப் படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் அபி.

சும்மாப் பொழுதுபோக்கிற்காகக் கதைகள் படிக்க ஆரம்பித்தவர் மகள் கீர்த்தனா. இப்போது எழுத்தாளர். பள்ளியில் படிக்கும்போதே India America Today இதழில் பத்திகள் எழுதும் அளவுக்கு எழுத்து அவருக்கு வசப்பட்டது. அதன்பிறகு Whimper bang, Fluorescent femme என்ற ஆங்கில இலக்கிய இணையதளங்களில் கவிதை பிரசுரிக்கும் அளவுக்கு இளம் கவிஞராகவும் உயர்ந்தார். அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் இருக்கும் ஒபர்லின் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் கீர்த்தனா, இப்போது உண்பது உறங்குவது எல்லாமே ஷேக்‌ஸ்பியரின் படைப்புகளோடுதான்.

கீர்த்தனாவுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்டியது அப்பா என்றால், இசையின் ருசியை ஊட்டியது அம்மா வைதேஹி. அம்மா இசைக்கும் பாடல்களினால் தன்னையும் அறியாமல் கீர்த்தனாவும் சிறு வயதிலேயே இசைக்கு அடிமையாகிவிட்டார். ஆனால், பிறந்தது வளர்ந்தது என்று எல்லாமே சீனா, ஃபீஜித் தீவு, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் என்பதால், ஒருகட்டத்தில்  இவரை ஆங்கில இசை ஆட்கொண்டது. கீர்த்தனாவுக்கு பியானோ என்பது சிறகுகளைப் போல. அதன் துணைகொண்டு அவர் இசை வானத்தில் நிறைய பறந்திருக்கிறார். சவுண்ட் க்ளவுடில் இவரது All These Empty Hearts, Slow Hands போன்ற  இசைப்படைப்புகள் பலராலும் ரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஃபீஜித் தீவுகளில் இருந்தபோது கீர்த்தனா நாடகங்கள்மீதும் மிகுந்த நாட்டம்கொண்டிருந்தார். நாடகங்களில் நடிப்பது, துணை இயக்குநராகப் பணியாற்றுவது, இயக்குவது என்று அவர் தானாகவே தேடித் தேடி வேலை பார்த்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’

``குடும்பம் என்றால் பிரச்னையே இருக்காதா... பெற்றோர்கள் நினைப்பதை எல்லாம் பிள்ளைகள் செய்து விடுவார்களா?’’ என்றால்,

‘`சத்தியமாகக் கிடையாது” என்று சொல்லும் ஸ்ரீதரனின் முகத்தில் ஏமாற்றம் சிறிதும் இல்லை.

‘` `குடும்பத்தில் அதிகாரம் செய்வதில்லை’ என்பதுதான் துவக்கத்திலேயே  நான் எடுத்த முடிவு. மனைவியாக இருந்தாலும், பெற்ற பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்கள் மீது எனக்கு அன்பு செலுத்த மட்டுமே உரிமை இருக்கிறது.

‘இன்ஜினீயரிங் படி, மெடிக்கல் படி’ என்றெல்லாம் அபியையும், கீர்த்தனாவையும் நாங்கள் சொன்னதே இல்லை. பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அபி இசை பற்றிப் படிக்கப் போகிறேன் என்றான். கிளாஸிகல் இசையாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவன் தேர்ந்தெடுத்திருந்ததோ ஹிப்-ஹாப் எனும் இசை வடிவம். ஆனால், அவனின் முடிவில் நாங்கள் தலையிடவில்லை. அதே சமயம். ‘உன் இஷ்டம்’ என்று சொல்லி முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு ஒதுங்கிவிடவும் இல்லை. ஊரில் இருக்கும் அத்தனை இசைப்பள்ளிகளின் பட்டியலையும் எடுத்து, அதிலிருந்து சுமார், ஓகே போன்ற பள்ளிகளை எல்லாம் வடிகட்டிவிட்டு மிகச் சிறந்த  இசைப்பள்ளியில் அவன் சேர நாங்கள் துணை நின்றோம்’’ என்ற ஸ்ரீதரனைத் தொடர்கிறார் வைதேஹி. 

``எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை... அன்பு மட்டுமே!’’

``எதுக்குப் பணம் செலவழிக்கணும். செலவழிக்கக் கூடாது என்பதை எங்கள் வாழ்க்கையின் வாயிலாக அவர்களுக்குத் தெளிவாகக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகிவிட்டாலும் ஒருநாள்கூட நான் கடைக்குச் சென்று ஒரு குண்டுமணித் தங்கம்கூட வாங்கியதில்லை. ஆனால், அதுவே படிப்பு என்று வந்தால் எங்கள் சேமிப்பில் இருக்கும் கடைசி ஐந்நூறு ரூபாயை மட்டும் விட்டுவிட்டு மீதி எல்லாப் பணத்தையும் படிப்புக்காகச் செலவு செய்திருக்கிறோம்’’ பூரிப்போடு சொல்கிறார் வைதேஹி.

``படிக்கும் காலத்தில் நான் சுமாரான மாணவன்தான். பத்து ஆண்டுகள் ரயில்வே துறையில் சாதாரண குமாஸ்தாவாக வேலை செய்துவிட்டு பிறகு சிவில் சர்வீஸ் பரீட்சை எழுதி ஐ.எஃப்.எஸ். பாஸ் செய்துவிட்டுத்தான் இந்த வேலைக்கு வந்தேன்’’ என்கிறார் ஸ்ரீதரன்.

அபிக்கும் கீர்த்தனாவுக்கும் அம்மா வைதேஹி சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடமும் மிகப் பெரியது. எளிமையான குடும்பச் சூழலில் பிறந்து, எதிர்நீச்சல் போட்ட அவர் திருமணத்துக்குப் பிறகு கல்வியில் பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார். கணவர் ஸ்ரீதரன் எந்த ஊருக்கு மாற்றலாகிப் போனாலும் அங்கு பணியாற்றும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அந்த ஊரில் ஒரு பட்டப்படிப்பை முடித்துவிடுவது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த ஆங்கில ஆசிரியை.

‘`வாழ்க்கையில் பசங்க சம்பாதிச்சுப் பெரிய பணக்காரங்க ஆகணும்னு நாங்க நினைக்கலை. அவங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அவங்க பணம் சம்பாதிச்சா போதும். ஆனால், எது செய்தாலும் வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாக இருக்கணும்.’’ பிள்ளைகளைப் பற்றி ஸ்ரீதரன் - வைதேஹிக்கு இருக்கும் எதிர்பார்ப்பே இவ்வளவுதான் என்பதும் குடும்பத்தில் நிலவும் சந்தோஷத்துக்கு முக்கியக் காரணம்!