வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (28/08/2018)

கடைசி தொடர்பு:18:09 (28/08/2018)

ஏ.பி.எஸ் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு சிக்னல்ஸ்

கிளாசிக் சிக்னல்ஸ் (Signals) 350 எனும் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பைக்கை வடிவமைத்துள்ளதாகக் கூறுகிறது இந்நிறுவனம். சாதாரண கிளாசிக் 350 பைக்கைவிட 15,000 ரூபாய் கூடுதல் விலையோடு இருக்கும் இந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக்கில் முதல் முறையாக ஏ.பி.எஸ் வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு சிக்னல்ஸ்

கிளாசிக் சிக்னல்ஸ் பைக் இரண்டு நிறங்களில் மட்டுமே வருகின்றன. மேட் ஃபினிஷ் பெயின்டில் மட்டுமே வருகிறது. பைக்குடன் சேர்த்து அக்சஸரியாக சேடல் பேக், கிராஷ் கார்டு, பெரிய விண்டு ஸ்கிரீன் போன்ற ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.  Pegasus எடிஷன்போல இந்த பைக்கிலும் ஒரு யுனிக் சீரியல் நம்பர் டேங்கில் எழுதப்பட்டுள்ளது. ரெட்ரோ டிசைனில் இருந்தாலும் மாடர்ன் டச் இருக்க வேண்டும் என்பதற்காக கிளாசிக் ரெட்டிச் போல எக்ஸாஸ்ட், இன்ஜின், ரிம், ஹேண்டல்பார், ஹெட்லைட் என கிரோம் வரும் இடங்களில் எல்லாம் கறுப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. டேங்க் மீது வழக்கமான ராயல் என்ஃபீல்டு எழுத்துக்குப் பதிலாக தங்கம்-பச்சை நிற காம்பினேஷனில் மெட்டல் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. 

மெக்கானிக்கலாக பைக்கில் பெரிய மாற்றங்கள் இல்லை. 19.8 bhp பவரும் 28 Nm டார்க்கும் தரும் 346 cc இன்ஜின்தான் இதில் உள்ளது. பின் பக்கம் வரும் 153 மி.மீ டிரம் பிரேக்குக்குப் பதிலாக ரியர் டிஸ்க் பிரேக் வருகிறது.  Pegasus போல ஸ்பெஷல் எடிஷன் மாடலாக இல்லாமல் வழக்கமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் போல ஷோரூமிலேயே இதை வாங்கலாம். இதன் சென்னை ஆன்-ரோடு விலை 1,77,000 ரூபாய்.