Published:Updated:

“ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”

 “ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”

சனா - படங்கள்: கே.ராஜசேகரன்

“ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”

சனா - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
 “ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”

``பிறந்தது நாகர்கோவில். வளர்ந்தது திருச்சி. சென்னைலதான் காலேஜ் படிச்சேன். அப்போதான் எனக்கு போட்டோகிராபி மேல பெரிய இன்ட்ரஸ்ட் வந்துச்சு. அப்போ பிரபலமா இருந்த ஒரு பெரிய போட்டோகிராபர்கிட்ட உதவியாளராகச் சேர அனுமதி கேட்டிருந்தேன். அவர் என் போட்டோவை ஃபேஸ்புக்கில் பார்த்துட்டு `உன்கிட்ட பேசணும், ஆபீஸ் வா’னு கூப்பிட்டார். ‘நமக்கு வேலை கண்டிப்பா கொடுத்துருவார்னு’ நினைச்சுட்டு ஆபீஸ் போனா, என்னை வெச்சு போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டார். `நீ ஒரு மாடல் பீஸ். எதுக்கு போட்டோகிராபர் ஆகணும்னு சுத்திக்கிட்டிருக்க’னு கேட்டார். அப்படித்தாங்க நானே எதிர்பார்க்காம மாடல் ஆனேன்.’’ - மிக மிக அடக்கமாக அறிமுகம் சொல்கிறார் ஆரவ். டிவி டி.ஆர்.பி வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வெற்றியாளரைச் சந்தித்தேன்!    

 “ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”

``பிக் பாஸ் வாய்ப்பு எப்படி வந்தது?”

``விஜய் டி.வி-யிலிருந்து பிரதீப் சார் என்னைக் கூப்பிட்டார். ‘ஆரவ், `பிக் பாஸ்’னு ஒரு நிகழ்ச்சி இருக்கு தெரியுமா’னு கேட்டார். ‘ஆமாம் சார்.  இரண்டு, மூணு இடத்தில் விளம்பரம் பார்த்தேன். கமல் சார்தான் நடத்தப் போறாரு, பதினாலு பிரபலங்கள் கலந்துக்கப் போறாங்க’னு சொன்னேன். ‘அந்தப் பதினாலு பேர்ல நீங்களும் ஒருத்தர்’னு சொன்னார். எனக்கு ஒரே அதிர்ச்சி. பிக் பாஸ் ஆரம்பிக்கிறதுக்கு சரியா மூணு நாளைக்கு முன்னாடிதான் இந்த வாய்ப்பு வந்தது. எல்லோரையும் மாதிரி நானும் எதுவும் தெரியாமத்தான் அந்த வீட்டுக்குள்ள போனேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 “ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”``பிக் பாஸ் ரீச்  இந்த அளவுக்கு இருக்கும்னு எதிர்பார்த்தீங்களா?’’


``சத்தியமா எதிர்பார்க்கலைங்க. நான் மட்டும் இல்ல, விஜய் டிவியே இதை எதிர்பார்க்கல. பிக் பாஸ் வீட்டுக்குள்ள  மூணு வாரம் போனதுக்கு அப்புறம்தான் ‘எத்தனை பேர் இந்த ஷோ பாக்குறாங்கனு நினைக்கிறீங்க?’னு கமல் சார் கேட்டார். நாங்க எல்லோரும் ‘என்ன சார், ஒரு இருபது லட்சம் பேர் பார்ப்பாங்களா’னு கேட்டோம். `ஆறு கோடிப் பேர் பார்க்கிறாங்க’ னு அவர் சொன்னப்போ செம ஷாக். வெளிய ஏதோ பெருசா நடக்குதுனு தோணுச்சு. ஒரு சக்ஸஸ்ஃபுல் ஷோல நாங்க எல்லோருமே ஒரு பகுதியா இருந்திருக்கோம்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’

``நூறு நாள்கள் உள்ள இருக்கணும்னு முடிவு பண்ணித்தான் ஷோக்குள்ள போனீங்களா?’’

``இல்லை. எந்த டார்கெட்டும் வெச்சிக்காமத்தான் உள்ளே போனேன். ஏன்னா, எலிமினேஷன் கன்ட்ரோல் மக்கள்கிட்ட இருக்கு, நாமளும் தெரியாத முகம்கிறதால எதிர்பார்ப்பு எதுவும் வெச்சுக்கல. நம்மளோட பெஸ்ட்டைக் கொடுப்போம்னுதான் நினைச்சேன். ஆனா, பத்தாவது வாரத்துக்குள்ள போக ஆரம்பிச்ச உடனே `சரி, நாம நூறு நாள் முடிச்சுட்டுத்தான் வெளியே போகணும்’னு ஒரு டார்கெட் ஃபிக்ஸ் ஆகிடுச்சு. ஆனா, எந்தவொரு சூழல்லயும் நான் நடிக்கல. வெளியே இப்ப நீங்க பார்க்குற ஆரவ் எப்படி இருக்கானோ அப்படித்தான் உள்ளேயும் இருந்தேன்.’’  

 “ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”

``பிக் பாஸ்ல பிடித்த போட்டியாளர் யார்?’’

``கணேஷ் ப்ரோதான். உண்மையாகவே ஒரு கடுமையான போட்டியாளர். ஒழுக்கமான மனுஷன். யாரைப் பற்றியும் தப்பா பேச மாட்டார். ரொம்ப நியாயமான மனுஷன். அவர்தான் பெரிய போட்டி யாளரா  இருப்பார்னு நினைச்சேன்.’’
 
``பிக் பாஸ்ல ஜெயித்தவுடன் கிடைத்த பெரிய பாராட்டுகள் பற்றிச் சொல்லுங்க?’’

``மணிரத்னம் சார் மனைவி சுஹாசினி போன் பண்ணாங்க. `ஆரவ் நீ ஜெயிச்சுட்டடா’னு உற்சாகமா பேசுனாங்க. ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. அடுத்த போன்கால் சிம்புகிட்ட இருந்து வந்துச்சு. ‘ஆரவ், நான் நீங்கதான் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டேன்’னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.’’

`` `மருத்துவ முத்தம்’னு சொல்லி நம்மளை அசிங்கப்படுத்திட்டாரேனு கமல்ஹாசன் மேல் எதுவும் கோபம் இருக்கா?’’

``ஐயோ, இல்லைங்க. கமல் சார் எந்த உள் நோக்கத்தோடும் அதைச் செய்யல. ஒரு குடும்பத் தலைவனா, ஒரு அப்பாவாத்தான் அவர் எங்களுக்கு இருந்தார். அந்த நோக்கத்தில்தான் எல்லோருக்கும் எல்லாமே பண்ணியிருக்கார். அந்த விதத்தில் அவர்மேல மரியாதைதான் ஏறுச்சு. உள்ளே போகும்போது கமல் சாரை ஒரு பிரபலமாத்தான் தெரியும். ஆனா, வெளியே வரும்போது கமல் சார் எவ்வளவு நல்ல மனுஷன்னு தெரிஞ்சுக்கிட்டேன். மிகப்பெரிய மனிதர் அவர்.’’

``பிக் பாஸ் வீட்டுல நடந்த எல்லாமே ஸ்க்ரிப்ட்னு ஒரு பேச்சு இருந்துச்சே?’’

``கமல் சார் பண்ற ஒரு ரியாலிட்டி ஷோ. அதுவும் ஜனநாயக முறையில் நடக்கிற ஒரு ஷோ. அதுல ஸ்க்ரிப்ட்னு ஒரு விஷயம் இருந்து, கொஞ்சமா வெளியே கசிஞ்சாலும் பெரிய பிரச்னையாகும். 100 சதவிகிதம் ஸ்க்ரிப்ட் இல்லைங்க. உள்ளே என்ன நடந்துச்சோ அதேதான் வெளியே காட்டுனாங்க.’’

``ஓவியாவுக்கு எல்லா நேரத்திலும் ஆதரவாக இருந்த நீங்கள், கடைசி நேரத்தில் கைவிட்டது ஏன்?’’

``அந்த நேரத்தில் நான் செஞ்சது தப்புதான். சாதாரணமா மனுஷங்க செய்யக்கூடிய தப்புதான் அது. ஆரம்பத்துல நான் ஓவியாவை அவ்ளோ சப்போர்ட் பண்ணியிருக்கேன். திடீர்னு `அவ ரொம்ப கடுப்பேத்துறா’னு தோண ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, அது தப்புனு லேட்டா புரிஞ்சுக்கிட்டேன். ஓவியாகிட்ட போய் ஸாரியும் கேட்டேன்.’’   

 “ஓவியாவுக்கு என் மேல் லவ் இல்லை!”

``வெளியே வந்த பிறகு ஓவியாகிட்ட பேசுனீங்களா?’’

``இல்லை, இதுவரைக்கும் பேசலை. ஒரு மெசேஜ்கூட இதுவரைக்கும் பண்ணல.’’

``ஓவியாவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும்னு எதிர்பார்த்தீங்களா?’’

``மூன்றாவது, நான்காவது வாரம் அப்ப கமல் சார் எங்ககிட்ட பேசும் போது, ஓவியாவுக்கு வர்ற கைதட்டல் சத்தம் அதிகம் கேட்கும். அதைக் கேட்குறப்பதான், ஓவியாவுக்கு மக்கள் ஆதரவு நிறைய இருக்குன்னு புரிஞ்சது. இப்போ, வெளியே வந்த பிறகு பார்த்தா மிகப்பெரிய க்ரேஸ் அவங்க மேல இருக்கிறது தெரியுது. ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்குன்னு சொன்னாங்க.  ரொம்ப ஹாப்பியா இருக்கு.’’

``ஓவியா உண்மையிலேயே உங்களைக் காதலித்ததாக நினைக்குறீங்களா?’’

``எனக்குத் தெரியல. அதை அவங்ககிட்டதான்  கேட்கணும். ஆனா, எனக்கு எதுவுமே ஃபீல் ஆகல.’’

``இப்போது மீண்டும்  ஓவியா லவ்வைச் சொன்னால்?’’

``இல்லை, ஓவியாவுக்கு என்மேல் இப்ப லவ் இல்லைனுதான் நினைக்குறேன். ஓவியா அவங்க வேலையில் கவனமா இருக்காங்க. நான் என் வேலையில் கவனமா இருக்கேன். நல்ல ஸ்க்ரிப்ட் வந்தா, ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலாம். அவங்களும் ஒண்ணா என்கூட நடிப்பேன்னு சொல்லியிருக்காங்க. அதனால கண்டிப்பா பண்ணுவேன்.’’

``ஆரவ்க்கு வேற கேர்ள் ஃப்ரெண்ட் இருக்காங்களா?

``இல்லைங்க.  யாரும் இல்லை.’’