Published:Updated:

நோய் நாடி... நோய் முதல் நாடி!

நோய் நாடி... நோய் முதல் நாடி!
பிரீமியம் ஸ்டோரி
நோய் நாடி... நோய் முதல் நாடி!

நோய் நாடி... நோய் முதல் நாடி!

நோய் நாடி... நோய் முதல் நாடி!

நோய் நாடி... நோய் முதல் நாடி!

Published:Updated:
நோய் நாடி... நோய் முதல் நாடி!
பிரீமியம் ஸ்டோரி
நோய் நாடி... நோய் முதல் நாடி!

செயல்படாத  அரசு மாநிலத்தை ஆளும்போது சிறு பிரச்னைகூட பிரமாண்டமான பிரச்னையாக உருவெடுத்துவிடும் என்பதற்கு உதாரணம், தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்கு பிரச்னை. அலுவலகம், சுற்று வட்டாரம்,  உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீடு என்று எந்த இடத்துக்குப் போனாலும் டெங்குக் காய்ச்சல் பற்றிய பேச்சுகளையும் விசாரிப்புகளையும் கேட்க முடிகிறது. தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் குறித்த துயரச்செய்திகளும் நம்மை வந்தடைகின்றன.

நோய் நாடி... நோய் முதல் நாடி!


ஆனால், ஆரம்பத்தில் ‘டெங்குக் காய்ச்சலே தமிழகத்தில் இல்லை’ என்று பிடிவாதமாக அடம்பிடித்துவந்த தமிழக அரசு, நிலைமை மோசமானதும் ‘இனி வேறு வழியில்லை’ என்ற நிலையில் அதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தமிழகம் முழுதும் 85 பேர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்பு என்ற செய்திகள் வந்தபிறகுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘காய்ச்சல் காரணமாக மாநிலம் முழுதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்குத் தடுப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’ என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

முதல் கோணல், தமிழக அரசு உண்மை நிலையை மறைப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. நோய் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டால்தான், அதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்க முடியும். மக்கள்நலன்மீது அக்கறை கொண்ட அரசு, மக்களின் பிரச்னைகளைத் தன் பிரச்னையாகவே கருதித் தீர்க்கத்தொடங்கும். ஆனால், தமிழக அரசுக்கு அந்த விஷயத்தில் துளியும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

டெங்குக் காய்ச்சல் வராமல் தடுப்பதும் சுலபம். மீறி வந்துவிட்டாலும் பாதிக்கப்பட்டவரை அதிலிருந்து மீட்பதும் சுலபமே. ஆனாலும், டெங்குவால் தமிழகத்தில் இதுவரை 85 பேர் இறந்திருக்கிறார்கள் என்றால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழக்கமாக ஆற்ற வேண்டிய பணிகளையே தமிழக அரசின் சுகாதாரத்துறை ஆற்றவில்லை என்பதுதானே உண்மை?

நிலைமை கைமீறிப் போகும்போது, மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாதே என்ற அச்சத்தில், எங்கெல்லாம் டெங்குக் காய்ச்சல் தீவிரம் காட்டுகிறதோ அங்கெல்லாம் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் கேமரா முன்பு நின்று பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, நிலவேம்புக் கஷாயம் கொடுப்பது என்று விளம்பரம் மட்டும் தேடிக்கொள்கிறார்கள்.

டெங்குவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொசு ஒழிப்பு, டெங்கு விழிப்புஉணர்வுப் பிரசாரம் போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இந்த அரசு இனியாவது முழுமையான கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம் இருப்பதால் திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் எல்லாம்கூட டெங்கு ஒழிப்புப் பணி நடைபெற வேண்டும். மருத்துவ அவசர நிலையைத் தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும். ஏனெனில், இது மக்களின் உயிர்ப்பிரச்னை. `நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’படுவதுதான்   தமிழக அரசின் இன்றைய அத்தியாவசியக் கடமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!