Published:Updated:

தானேயில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 45 பேர் பலி

தானேயில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 45  பேர் பலி
தானேயில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 45 பேர் பலி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் தானேயில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 45 பேர் பலியாயினர், 65க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். 

##~~##
இந்த நிலையில், அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 45 பேர் பலியாயினர். 65க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த போது 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டில் இருந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த 12 தீயணைப்புக்குழுவினரும், 24க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.