வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (30/08/2018)

கடைசி தொடர்பு:15:47 (30/08/2018)

ஹேர் டிரையர், ஹேர் அயனிங், ஹேர் டாங்... வீட்டிலேயே செய்து கொள்ளும் முன் கவனிக்கவேண்டியவை!

எலக்ட்ரிக் பொருள்களைக் கூந்தலில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போதும் கூந்தல் வலிமை இழந்து உடையத் தொடங்கும்.

ஹேர் டிரையர், ஹேர் அயனிங், ஹேர் டாங்... வீட்டிலேயே செய்து கொள்ளும் முன் கவனிக்கவேண்டியவை!

ல்லாமே வேகம், ஓட்டம் என்றாகிவிட்ட சூழலில், எண்ணெய் தேய்த்து, பின்னல் இட்டுக்கொள்ளவும் நேரமில்லை. அது தற்போதைய ட்ரெண்டும் இல்லை. எனவே, ஷார்ட் ஹேர், வேவி ஹேர், ஸ்ட்ரெயிட்டனிங், ஹேர் அயர்னிங், ஹேர் டிரையர், ஸ்மூத்தனிங் என மாற ஆரம்பித்துவிட்டார்கள் இன்றைய பெண்கள். ஆனால், இத்தகைய கூந்தல் சிகிச்சைகளின்போது கவனம் தேவை என்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

``எலக்ட்ரிக் பொருள்களைக் கூந்தலில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போதும் கூந்தல் வலிமை இழந்து உடையத் தொடங்கும். அவசர சூழலுக்காக அழகுசாதன கடைகளில் கிடைக்கும் பொருள்களை தானே வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதுபோன்ற சாதனங்களைத்  தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, முடியின் வேர்க்கால்கள் வரை பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும். பின்னர், இதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும். அதற்காக, சின்னச் சின்ன விஷயத்துக்கும் பார்லரை நாட வேண்டும் என்பதில்லை. சரியான முறையைக் கையாள தெரிந்திருந்தாலே போதுமானது'' எனத் தொடர்கிறார் வசுந்தரா.

ஹேர் டிரையர்:

ஹேர் டிரையர்

ஹேர் வாஷ் செய்த பிறகு முடியை உலரவைக்க, ஹேர் டிரையர் பயன்படுகிறது. ஹேர் டிரையரில் நாம் செட் செய்யும் வாட்ஸ்களின் அளவில் கவனம் தேவை. குறைந்தது 400 வாட்ஸ், அதிகபட்சம் 2000 வாட்ஸ் என உங்கள் கூந்தலின் அடர்த்தியைப் பொறுத்து செட் செய்ய வேண்டும். முடிந்த வரை கூந்தலை வெயிலில் உலர்த்துவதே நல்லது. வாரம் இரண்டு முறை மட்டும் ஹேர் டிரையரைப் பயன்படுத்துங்கள். ஸ்கால்ப்பிலிருந்து 5 இன்ச் தள்ளியே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை டிரையரின் பிளக் கனெக்‌ஷனை செக் செய்துவிட்டு, பயன்படுத்துவது முக்கியம். சில சமயம், கவனக்குறைவால் கூந்தல் கருகும் நிலைக்கு ஆளாகலாம். எச்சரிக்கை.

ஹேர் அயர்னிங்:

உங்கள் கூந்தலை ஸ்ட்ரைட் லுக்கில் காண்பிக்க, அயர்னிங் செய்துகொள்ளலாம். இதற்கான மின்சாரம் 100 டிகிரியிலிருந்து, அதிகபட்சம் 220 டிகிரி இருக்கலாம். உங்களுக்கு மிக மெல்லிய கூந்தல் எனில், 100 டிகிரிக்கு அயர்ன் செய்ய வேண்டும். நார்மல் ஹேர் எனில் 150 டிகிரியும், மிக அடர்ந்த கூந்தல் எனில் 220 டிகிரியிலும் பயன்படுத்த வேண்டும். தினமும் ஹேர்அயனரைப் பயன்படுத்தினால் மின்சாரத்தினால் வேர்க்கால்கள் நிச்சயம் பாதிக்கும். எப்போதும் ஹேர் அயர் செய்த லுக் வேண்டுமெனில், பார்லரில் செய்யப்படும் ஸ்மூத்னிங் அல்லது ஸ்ட்ரைடெனிங் செய்துகொள்ளலாம்.

கூந்தல் பராமரிப்பு

ஹேர் டாங்:

தங்கள் கூந்தலுக்கு கர்லி லுக் வேண்டும் என்பவர்களுக்கான தேர்வு, ஹேர் டாங். இதுவும் அயனர் போன்றதே. ஆனால், கூந்தலுக்கு ஸ்ட்ரைக் லுக் கொடுப்பதற்குப் பதிலாகச் சுருட்டை முடியுடன் காண்பிக்கும். கூந்தலை கர்ல் செய்யவேண்டிய இடத்தை மட்டும் டாங்க்கில் நுழைத்து, 100 டிகிரியில் முடியை இழுத்துச் சுருட்டிவிட்டால், கர்லி லுக் கிடைக்கும். மீண்டும் ஹேர் வாஷ் செய்தால், கூந்தல் பழைய நிலைக்கு வந்துவிடும். சில பெண்கள், அதிக கர்லி கிடைக்கும் என டாங்கை அதிக நேரம் கூந்தலில் பயன்படுத்துவர். இது மிகவும் ஆபத்தானது.

இன்ஸ்டா கர்ல்:

கர்ல் செய்யவேண்டிய கூந்தலைச் சிறிது சிறிதாக இன்ஸ்டா கர்ல் என்ற மெஷினுக்குள் நுழைத்து, கர்ல் செய்து கொள்ள முடியும். இதைப் பயன்படுத்தினால், கூந்தல் எல்லாப் பக்கமும் ஒரே மாதிரியான லுக்கில் இருக்கும். கர்ல் செய்யவேண்டிய மெஷினுக்குள் கூந்தலை நுழைத்து, செய்துமுடித்ததும், அதில் உள்ள க்ளியர் பட்டனை அழுத்தினால், கற்றையான கர்லி ஹேர் கிடைக்கும். இதை, நிபுணர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்லது.

ஹேர் கலரிங்:

கலரிங்கை தற்காலிகமானது, நிரந்தரமானது என இரண்டு வகையில் செய்து கொள்ளலாம். தற்காலிக கலரிங், சில ஹேர்வாஷ்கள் வரை நீடிக்கும். ஃபேஷனுக்கா கலரிங் செய்துகொள்பவர்கள், தற்காலிக ஹேர் கலரிங்கைத் தேர்வுசெய்யலாம். விதவிதமாக நியூ லுக் கொடுக்க இது உங்களுக்கு உதவும். ஒரே நிறம் செட்டாகிவிட்டது எனில், நிரந்தர கலரிங் தேர்வுசெய்யலாம். ஹேர் கலரிங்கைப் பொறுத்தவரை, பர்கண்டி கலர், இன்டர்மீடியேட் கலர் என பேஸிக் கலர்களில் ஆரம்பித்து, மிக்ஸிங் கலர்கள் வரை நூற்றுக்கும் அதிகமான ஷேடுகள் உள்ளன. அதில், உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வுசெய்யலாம். தற்காலிக ஹேர் கலரிங்கை வீட்டிலே செய்துகொள்ளலாம். ஆனால், நிரந்தர மாற்றத்துக்கு அவசியம் பார்லரின் உதவி தேவை.


டிரெண்டிங் @ விகடன்