செவ்வாய்க்கிரகத்தைத் தொடர்ந்து வியாழனிலும் தண்ணீர் - நாசா கண்டுபிடிப்பு

வியாழன் கிரகத்தில் அடர்த்தியான மேகங்கள் இருப்பதையும் இதனால் அங்கு அதிகளவில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

வியாழன்

சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய கோளான வியாழனில் தண்ணீர் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வியாழன் கிரகத்தில் கடந்த 350 வருடங்களாகப் புயல் தாக்கி வருகிறது. இதை நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் சிகப்பு நிற பகுதி ஒன்றை உற்றுநோக்கி மேலும் ஆய்வு செய்தபோது அடர்ந்த மேகங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மேகங்களில் ஆக்ஸிஜன், கார்பன் மோனாக்சைடு ஆகியவை இருப்பதாகவும் சூரியனைவிட 2 முதல் 9 மடங்கு அதிகமான அளவு ஆக்ஸிஜன் வியாழனில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நாசாவின் ஜுனோ என்ற விண்கலம் ஒவ்வொரு 53 நாளுக்கும் ஒருமுறை வியாழனின் வடக்கு முதல் தெற்கு வரை ஆய்வு செய்யும். இந்த ஜுனோ விண்கலத்தில் உள்ள அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோ மீட்டர் மற்றும் மைக்ரோவேவ் ரேடியோ மீட்டர் மிகவும் ஆழமாக உற்று நோக்கி தண்ணீர் கண்டறியும் தன்மை கொண்டது. இதன் மூலமே மேகக் கூட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஜுனோ விண்கலம் மீண்டும் வியாழனில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்து இந்தச் சோதனை முற்றிலும் உறுதி செய்யப்பட்டால் ஜுனோ விண்கலத்தை சனி, யுரேனஸ், ரெப்டியூன் போன்ற பிற கோள்களுக்கும் அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாகக் கோல்டர் பிஜோரகெர் என்ற நாசாவின் வான் அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!