வெளிநாட்டுத் தம்பதியின் சென்டிமென்ட்: ஊட்டி மலை ரயிலில் தேனிலவுக் கொண்டாட்டம்!

ஊட்டி மலை ரயிலை முழுவதுமாக, வெளிநாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி, பதிவு செய்து இருவர் மட்டும் பயணம் செய்தனர். 

நீலகிரி மலை ரயில்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரகாம், போலந்து நாட்டைச் சேர்ந்த சில்வியா இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள், இருவரும் தேனிலவு கொண்டாட்டத்துக்காக ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர். மலை ரயிலில் இருவர் மட்டும் தனியாகப் பயணிக்க விரும்பிய அவர்கள் 2,85,000 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி முழு ரயிலையும் முன்பதிவு செய்தனர்.

எனவே, மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9 மணிக்கு மூன்று பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் தயாராக நிறுத்தப்பட்டது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்த கிரகாம் தம்பதி, மலை ரயில் முழுவதையும் பார்வையிட்டு, அதன் சிறப்புகளை ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். 

நீராவி மூலம் இயங்கும் மலை ரயிலில் இருவர் மட்டும் ஜோடியாகப் பயணம் செய்தனர். இங்கிலாந்து நாட்டில் பொறியாளராகப் பணியாற்றும் கிரகாம், தன் காதலி சில்வியாவை முதன்முதலில் ஒரு நீராவி ரயிலில் பயணம் செய்யும்போது கண்டதால், தேனிலவுக்காக மலை ரயிலைத் தேர்வு செய்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மலை ரயில் பேக்கேஜ் முறையில் சிறப்பு மலை ரயிலை இயக்கி வருவதாகவும், முறையாக முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும், மலை ரயிலில் தனியாகப் பயணிக்கலாம் என்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!