``மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தை, மத்தியப் பட்டியலுக்கோ அல்லது மாநில மற்றும் மத்திய அரசு இரண்டுக்கும் உரிய பொதுப்பட்டியலுக்கோ மாற்றவேண்டும்’’ என்று `நிதி ஆயோக்’ அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் சமீபத்தில் கூறியிருப்பது, கடும் எதிர்ப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

‘பஞ்சாபில் பயிரிடப்படும் அரிசி, வெவ்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது; ஒரு மாநிலத்திலிருந்து தானியத்தைக் கொள்முதல் செய்யவும், வேறு ஒரு மாநிலத்தில் அதற்கான பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்கவும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் விரும்பக்கூடும். இப்படிப் பல்வேறு வகைகளிலும் மாநிலங்களைக் கடந்தும் விவசாயம் கைகோக்க வேண்டியிருக்கிறது. இதற்குத் தடையாக மாநில அரசுகளின் அதிகாரம் அமைந்துவிடக்கூடாது’ என்பதுதான் ரமேஷ் சந்த் முன் வைக்கும் கருத்து.

நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதைகள், விவசாயத்தை

மாநிலப்பட்டியலில் வைத்துள்ளனர். `விவசாயத்தின் தன்மை என்பது மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமல்ல, ஊருக்கு ஊர் மட்டுமல்ல, நன்செய், புன்செய், கரிசல் என்று மண்ணுக்கு மண்ணேகூட மாறக்கூடியது; தட்பவெப்பநிலை, விதை, நீர்ப்பாசனம், உரம் என எல்லாமே மாறும்; அதனால், அந்தந்தப் பகுதிகளில் முடிவெடுப்பதுதான் சரியானதாக இருக்கும்’ என்பதுதான் அதற்குக் காரணம். ஆனால், மாநில அரசின் கைகளில் இருக்கும்போதேகூட விவசாயிகளுக்குப் போதுமான ஆதரவோ, ஆதாயங்களோ இல்லை என்பதுதான் உண்மை. சொட்டுநீர்ப்பாசன மானியம், வறட்சி நிவாரணம், விதைத்தேவை என்று எதுவுமே சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கும், அவர்களின் நிலங்களுக்கும் நீதி சமைப்பவையாக இருப்பதில்லை. எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு சட்டங்களை இயற்றி நிறைவேற்றுபவர்களால் முழுமையாகக் கண்காணிக்க முடியவில்லை, கைகொடுக்க முடியவில்லை என்பதுதான் பிரச்னையின் அடிநாதம்.

விவசாயம் மாநிலப்பட்டியலில் இருந்தாலும், முக்கிய விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசுதான் இப்போதும் நிர்ணயிக்கிறது. அதுமட்டுமே கட்டுப்படியாகாது என்பதால், ஊக்கத்தொகையைச் சேர்த்துக்கொடுக்கின்றன மாநில அரசுகள். அதேசமயம், `ஊக்கத்தொகை, விவசாய மானியங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்’ என்கிற உலக வர்த்தக நிறுவனத்தின் வற்புறுத்தலுக்கு காங்கிரஸ் காலத்திலிருந்தே தலையாட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், `விவசாயத்தையே மத்திய அரசின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்’ என்கிற கருத்து முன்வைக்கப்படுவதுதான் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது.

விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவும், அவர்களுடைய வருமானத்தை இரண்டுமடங்காகப் பெருக்கவும், இந்தியாவின் விவசாய வருமானத்தை வளப்படுத்தவும் தற்போதைய பிஜேபி அரசு நினைப்பதில் தவறில்லை. அதற்காக அதிகார மையம் விவசாயிகளிடமிருந்து இன்னும் பல மைல் தூரம் தள்ளிச்செல்ல நினைப்பது தவறு. எப்படி பஞ்சாயத்ராஜ் சட்டம் மூலமாக, அதிகாரங்கள் மக்களின் கைகளுக்கு மடைமாற்றப்பட்டதோ... அதேபோல, விவசாயத்தையும் கொண்டு செல்லவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பஞ்சாயத்ராஜ் சட்டத்தின் அதிகாரங்கள் இன்னமும் முழுமையாக மக்களிடம் கொடுக்கப்படவில்லை. சூட்டோடுசூடாக அதையெல்லாம் சரிப்படுத்தி, விவசாய உரிமைகளையும் மக்களின் கைகளுக்குக் கொண்டுசெல்வதுதான் இந்த இக்கட்டான சூழலில் செய்துமுடிக்கவேண்டிய அதிஅவசியமான பணி. மாநில அரசுகள் அதைச் சரிவர நிறைவேற்றுகின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கும் கடமை மற்றும் பொறுப்பை மட்டும் மத்திய அரசு தன் கையில் வைத்துக்கொண்டாலே போதும்... நிஜ பசுமைப்புரட்சி நிச்சயம்!