* கோஹ்லியின் ஜெர்ஸிக்குப் பின்னால் பெரிய சென்ட்டிமென்ட் இருக்கிறது. தொடர்ந்து 18-ம் எண் ஜெர்ஸியைப் பயன்படுத்திவருகிறார் கோஹ்லி. சச்சின், தோனி ஆகியோர் தங்களது ராசியான எண்களை ஜெர்ஸியாகப் பயன்படுத்த கோஹ்லி தனது அப்பா இறந்தநாளான 18-ம் தேதியை நினைவுப்படுத்தும்விதமாக அதை பயன்படுத்துகிறார். சென்ட்டிமென்ட் கேப்டன்!

* பஞ்சாப், கேரளா என இரு மாநிலங்களிலும் இடைத்தேர்தலில் கிடைத்தவெற்றியில் செம உற்சாகத்தில் இருக்கிறார் ராகுல்காந்தி. வெற்றிப் பரிசாக விரைவில் காங்கிரஸ் தலைவராகப் பதவி உயர்வும் பெற இருக்கிறார். ``கடந்த மூன்று மாதங்களில் ராகுல் காந்தியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தில் இருந்து 38 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதில் இருந்தே இளைஞர்களுக்கான ஆதரவு ராகுலுக்கு உயர்ந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்’’ என காங்கிரஸ் உற்சாகம் பொங்கச் சொல்ல, ``மோடிக்கு மூன்றரை கோடி ஃபாலோயர்ஸ் இருக்காங்கப்பா’’ எனக் கலாய்க்கிறது பாஜக! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

* பிரபல ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது ஏஞ்சலீனா ஜோலி துவங்க பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் சொன்னதுதான் கடந்தவாரத்தின் வைரல். ஆனால் ஹார்வி மாதிரி இந்தியாவில் பலர் இருக்கிறார்கள் என அதிரவைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. ‘’செக்ஸ் என்பதைவிட பெண்களை அடக்கும் பவரைத்தான் ஆண்கள் இதன்மூலம் சாதிக்க விரும்புகிறார்கள். சினிமாத்துறையில் வாய்ப்புத்தேடிவரும் நடிகைகளிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வது இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபற்றி புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் பிரியங்கா. உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்!

* டாஸ்மாக் வருமானம் குறைந்ததே இந்த ஆண்டு தீபாவளின் நல்ல செய்தி. ஒவ்வொரு ஆண்டும் டார்கெட் வைத்து கோடிகளைக் குவிக்கும் டாஸ்மாக்கின் விற்பனை இந்த ஆண்டு 8 சதவிகிதம் குறைந்துள்ளது. அக்டோபர் 17, 18 தேதிகளில் மட்டும் தமிழகம் முழுக்க டாஸ்மாக் மூலம் 244 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது தமிழக அரசு. இது கடந்த ஆண்டைவிட 21 கோடி ரூபாய் குறைவு என்பதே ஆறுதல் செய்தி. குடியை மறப்போம்!

* திருமணமான நடிகை களிலேயே முதல்முறையாக கையில் ஐந்து படங்களுடன் செம பிஸியாக இருக்கிறார் சமந்தா. சாவித்ரியின் பயோபிக்கான `மஹாநதி’, `ரங்கஸ்தலம் 1985’, `இரும்புதிரை’, தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’, சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் என சமந்தாவைச் சுற்றிலும் ஷூட்டிங்தான். ‘’எக்காரணத்தைக் கொண்டும் நடிப்பை விட்டுவிடாதே என சொல்வதே என் கணவர்தான். அதனால் சினிமாவுக்கு எப்போதுமே பிரேக் இல்லை.’’ என்கிறார் சமந்தா! சூப்பர் ஜோடி!