கொலை வழக்குகள் என்றாலே பரபரப்புதான். அதுவும் சுவாதி கொலை வழக்கு பரபரப்பின் உச்சத்தைத் தொட்ட வழக்கு. கொலைக் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்ட ராம்குமாரின் பின்னணியை தமிழ்நாடே புலன் விசாரணை செய்ய, திடீரென சிறையில் ராம்குமார் மரணமடைய, அதே நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சுவாதி- ராம்குமார் வழக்கு சத்தமில்லாமல் போனது. ராம்குமார் கைது செய்யப்பட்ட உடனேயே 10 நாள்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என்று சொன்ன போலீஸ், ராம்குமார் இறக்கும்வரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவே இல்லை. இறுதியாக ராம்குமார் இறந்ததால் வழக்கை `சுமுகமாக’ முடித்தது போலீஸ்.

இந்த வழக்கில் நடந்தது என்ன?

``ஜூலை ஒண்ணாந்தேதி நைட்டு பதினொண்ணேகால் மணி இருக்கும். நாங்க வீட்டுக்குள்ள படுத்துக்கிடக்கோம். இங்க உள்ளாற இடம் இருக்காதுன்னு வீட்டுக்குப் பின்னாடி இருக்க இடத்துல எங்க மகன் படுத்துக்கிட்டிருந்தான். திடீர்னு கரன்ட் ஆப் ஆச்சுங்க. கொஞ்ச நேரத்துல கதவு தட்டுற சத்தம். போயி கதவைத் தொறங்கன்னு என் பொண்டாட்டி சொல்லக்கேட்டு தொறந்தேன். ரெண்டு பேர் டீ-சர்ட்ல வந்து நின்னாங்க.

‘அய்யா நீங்க யாரு’ன்னு கேட்டேன்.

அவங்க அதுக்கு பதில் சொல்லல.

‘முத்துக்குமார் வீடு எது’ன்னு கேட்டாங்க.

‘முத்துக்குமார் வீட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லையே சாமி, என்ன விஷயம்’னேன்.

‘உங்க பையன் பேர் என்ன’ன்னு கேட்டாங்க.

‘ராம்குமார்’னு சொன்னதும் அவன் எங்க படுத்திருக்கான்னு கேட்டமானிக்கே கதவத் தொறந்து உள்ள இதே வழியிலே இப்டிகூடிப் போக என்னைக் கீழ தள்ளிட்டாங்கள்ல. பொண்டாட்டி பிள்ளைக எழுந்துடுச்சு. பின்னாடி வேகவேகமா போனவங்க ‘ஏ உம்பிள்ளை பண்ணியிருக்கிற வேலையை வந்து பாருங்க’னு சொன்னாங்க. அவன சுத்தி போலீஸ் நின்னுட்டிருந்தாங்க... என்னத்தனு சொல்றது.. கரன்ட் கட் பண்ணிட்டு ஏற்கெனவே வீட்டுக்குப் பின்கூடி வந்து, தூங்கிட்டிருந்தவனுக்கு மயக்கப்பொடி குடுத்து எம் பிள்ளைய சுத்தி வளைச்சு அவன் கழுத்த அறுக்குறதுக்குனே ஒருத்தரை செட் பண்ணிக் கூட்டியாந்து, அந்த ஆளு அறுத்த பிறகுதான் எங்கள எழுப்பியிருக்காங்க. நாங்க போயி பாக்கயில பிள்ளை கழுத்துல இரத்தம் ஒறஞ்சிபோச்சு. நா அங்கனையே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். ஒரு ஆம்புலன்ஸக்கூட கூப்பிடாம போலீஸ் வண்டியிலேயே பிள்ளைய துள்ளத் துடிக்கக் கூட்டுக்கிட்டுப் போனாங்கள்ல, அப்போ போன எம் மகன் இன்னும் வீடு திரும்பலைங்க” என்றவருக்குக் கண்களில் நீர் திரண்டு நின்றது. கீழுதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார் ராம்குமாரின் அப்பா பரமசிவன்.

ராம்குமார் இறந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. ஆனால், ராம்குமார் குடும்பமோ, ஸ்வாதி கொலை செய்யப்பட்ட அன்று ராம்குமார் மீனாட்சிபுரம் வீட்டில்தான் இருந்தான் என்கிறார்கள்.

ராம்குமார் குடும்பத்தைச் சந்திப்பதற்காகச் சென்றேன். தென்காசி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து பத்து கிலோமீட்டர் சென்றால் இடதுபுறம் திரும்புகிற சிறிய மண்சாலையை ஒட்டித் துவங்குகிறது மீனாட்சிபுரம் கிராமம். இரண்டு பேர்க்கு மேல் கால் நீட்டிப் படுக்க முடியாத சிறிய வீடு. நான் சென்ற நேரம் ராம்குமாரின் தந்தை, தாய், சகோதரிகள் என நான்கு பேருமே வீட்டுக்குள் இருந்தனர்.

``எங்க அண்ணனைப்பத்தி இந்த ஊருக்குள்ள போயி நீங்க யார வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. ஒருத்தங்களை கொலை செய்ற அளவுக்கு அது கொடூரமானவனும் கிடையாது. அதுவா தற்கொலை செஞ்சுக்கிடுற அளவுக்குக் கோழையும் கிடையாது. பிரகாஷ் மூலமாத்தான் ராம்குமார் சுவாதிக்கு ஃப்ரெண்ட் ஆனான்னு சொன்னாங்க. ஆனா அந்த பிரகாஷ் யாருன்னு வெளிய கொண்டு வரல, அவங்களக் கூப்ட்டு விசாரிக்கச் சொல்லி எத்தனையோ முறை சொல்லிட்டோம். எங்க பேச்சையே காதுல வாங்கிக்கல. சாமி சத்தியத்துக்கு எங்கண்ணன் கொலை செய்யலங்கண்ணா” என்று தழுதழுத்த மதுபாலாவை “ம்மா, அதெல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்மா” என பரமசிவன் சமாதானப்படுத்துகிறார்.

``குற்றவாளி இன்னும் உயிரோடதாங்க இருக்கான். அவன யாரும் கண்டுக்கிடவே மாட்டுறீங்க. அவங்களை விசாரிங்க. அந்தப் பொண்ணு இறந்த உடனே, சில பேரெல்லாம் அடிபட்டுச்சு. அப்புறம் அவங்க எல்லாம் என்ன ஆனாங்க? ஆனா எம் புள்ளை விஷயத்துல மட்டும் தடயங்களை வெளியிட்டுட்டே இருந்தாங்க’’ என்ற பரமசிவத்தை ஆவேசமாக இடைமறித்தது மதுபாலாவின் குரல். ``ரொம்பத் திட்டமிட்டு, ஆதாரங்கள போலீஸ் உருவாக்குனாங்க. வீட்ல இருந்த என்னோட துணிப்பையைத் தூக்கிட்டுப் போயி அது சுவாதியோட பேக், ராம்குமார் வீட்ல இருந்ததுன்னு கதைகட்டி, திரும்பவும் எங்க வீட்லயே அதக் கொண்டு வந்து வெச்சாங்க. போலீஸ்காரங்க ரொம்ப அநியாயம் பண்ணாங்கண்ணா. மத்தவங்க எல்லாம் பணத்தக் கொண்டு தப்பிக்கவும் எங்க அண்ணன் மாட்டிக்கிடுச்சு” என்ற மதுபாலாவின் பேச்சில் தன் அண்ணனைப் பறிகொடுத்த துயரம் பீடித்திருந்தது.

மதுபாலா பி.பி.ஏவும், இரண்டாவது தங்கை காளீஸ்வரி பி.காமும் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். ஐன்ஸ்டின் கல்லூரியில் பி.இ எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு அரியர் இருந்ததால் கோச்சிங் க்ளாஸில் படிப்பதற்காக சென்னைக்கு மூன்று மாதம் சென்றதாகச் சொல்கிறார்கள் குடும்பத்தினர்.

ராம்குமாரின் அம்மா புஷ்பம் பேசும்போதே அழத் தொடங்கினார். ``தப்பு செய்யாதவனுக்கு தண்டனை கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க சாமி. அவனை உயிரோடவாவது வெச்சிருந்தா மாசத்துக்கு ஒருநாள் பிள்ளை முகத்த பாத்துட்டிருந்தாவது நிம்மதிப்பட்டு இருந்திருப்போமே. எதுவுமே செய்யாத எம் புள்ளைய எல்லாரும் சேர்ந்து சாவடிச்சிட்டாங் களய்யா” விம்மலைக் கட்டுப்படுத்தி, தீர்க்கமான குரலில் பேசத் துவங்கினார்.

“ஒரு பிள்ள அப்டியே தப்பு பண்ணிட்டு வந்தாலும், அவன் முகத்தைப்பாத்து பெத்த தாய்க்குக் கண்டறிய வழி இல்லையா? அப்டியே அவன் பண்ணீருந்தாலும் அவன் எதுக்குய்யா சொந்த வீட்டுக்கே வந்து தங்கிட்டு இருக்கப் போறான். அவன் தப்பு செஞ்சவன்னு தெரிஞ்சிருந்தா, நாங்க எதுக்கு அவனை எங்க வீட்ல வெச்சு அழகுபாத்துட்டு இருக்கப் போறோம். அந்த சுவாதிப்புள்ள இறக்குறதுக்கு ஒருநாள் முன்கூட்டியே வீட்டுக்கு வந்தவனைக் கழுத்தறுத்துட்டுத் தூக்கிட்டுப் போனாங்களே. எம் பிள்ளைய நெனச்சாலே எனக்கு மண்டையெல்லாம் கொடாயுது” என்று சொல்லி தலையைப் பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்துவிட்டார்.

சுவாதி கொல்லப்பட்ட அந்தக் காலை ராம்குமார் இங்குதான் இருந்தாரா என்று உறுதிப்படுத்துவதற்காக பரமசிவனிடம் இன்னொருமுறை கேட்டேன். அவர் காயப்பட்டுவிட்டார் என்பதை உடைந்த குரல் தெரியப்படுத்தியது. ``என்ன தம்பி, எங்க புள்ளையவே பறிகொடுத்துட்டோம். இனி யாரைக் காப்பாத்த நாங்க பொய் சொல்லணும்” என்றார்.

“எதுக்கு ராம்குமார் சென்னையிலிருந்து திடீர்னு ஊருக்கு வந்தார்?”

“இவன் ஃப்ரெண்ட்ஸுகளோட தங்கியிருந்த மேன்ஷன்க்குப் பக்கத்துல சாப்பாட்டுக்குப் பைசா செட்டில் பண்ணலை. அவங்க ஏதும் வசமா திட்டியிருக்காங்களோ என்னவோ...போன் பண்ணி ஆயிரத்து ஐந்நூறு ரூபா போட்டு விடச்சொல்லிக் கேட்டான். என் அக்கவுன்ட்ல பணமில்ல. இங்க வா ஏற்பாடு பண்ணிடலாம்னு சொன்ன மறுநா கெளம்பி வந்துட்டான்” என்று கண்களைத் துடைத்தார்.

வீட்டில் கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. ராம்குமார் பெரியப்பாவின் மகள் அம்மு மெளனத்தை உடைத்தார்.

“ `லே, தம்பி ஆடுகளுக்கு கொலையறுத்துட்டு வாடா’ன்னாகூட அருவா புடிக்கத் தெரியாம போகமாட்டாங்க அவன். அந்தப் புள்ளையை அவன் அப்டி வெட்டி சாச்சிருப்பானா... எவனையோ பணக்காரன காப்பாத்த... பணக்காரனுங்க ஒண்ணு சேர்ந்து எங்க பிள்ளைய கொன்னுட்டாங்கல. எவ்ளோ நாளுக்கு நல்லா இருந்துடுவாங்க” என்றவரின் குரல் உயர்ந்ததில் அவ்வீட்டில் இருந்தவர்களிடம் ஆவேசம் கூடியது.

ராம்குமாரின் நினைவாக அந்த வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. அவர் பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்கள் அனைத்தையும் போலீஸ் வாங்கிப் போய்விட்டதாகச் சொன்னார்கள்.

“எம் மகன் ஒயரக் கடிச்சு செத்தாம்னு சொன்னா லூசுப்பயகூட நம்ப மாட்டான் கேட்டீங்களா. அப்படி அவன் கடிச்சிருந்தாம்னா உதடல்லாம் வெந்திருக்கணும்ல. அப்டி ஒண்ணுமில்ல. ஆனா வலதுகைல ஊசிபோட்ட தழும்பு இருந்திருக்கு. எதுக்கு அவனுக்கு ஊசி போடணும்? பொடிக் கம்பிய வெச்சு நெஞ்சுல இடதுபுறத்துல சூடு வெச்ச தழும்பு இருக்கு. அவன் சங்கைப் பிடிச்சிருக்காங்க. பிடிச்ச இடத்துல நகத்தோட அடையாளங்கள் இருந்திருக்கு. அவன் சாவுல சந்தேகம் வந்துதான் நாங்க சொல்ற டாக்டர வெச்சு போஸ்ட்மார்ட்டம் பண்ணணும்னு எவ்வளவோ போராடினோம். டெல்லிவரைக்கும் போயி வக்கீலுக்கு ஒரு லட்சத்தி முப்பதாயிரம் வரைக்கும் பீஸ் கட்டிட்டு வந்தேன். ஒண்ணும் நடக்கல. பதினாலு நாள் எம் புள்ள உடம்ப வெச்சு அவங்க இஷ்டத்துக்கு டாக்டர கூட்டிட்டு வந்துதான் பாத்தாங்க. சரி, அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டாவது கொடுத்தாங்களான்னா இதுவரைக்கும் கொடுக்கல. தமிழ்செல்வின்னு ஒரு ஜட்ஜம்மா நா வாங்கித்தரேன்னு சொல்லி அனுப்புனாங்க. இன்னும் கைக்கு வரலைங்க. என் மகன் சாவு ஊர் அறிஞ்சிபோச்சுங்க. ஆனா, சத்தங்கொட்டாம எத்தனை அப்பாவிகள அரசாங்கம் இந்த மாதிரி கொன்னிருக்கும்னு நெனைக்கவே பயமா இருக்கு” என்று தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்.

உண்மையிலேயே சுவாதியைக் கொன்றது யார்? சுவாதியை ராம்குமார் கொலைசெய்திருந்தால் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் போலீஸ் ஏன் காலதாமதம் செய்தது? புழல் சிறை வரலாற்றிலேயே நடக்காதவகையில் ராம்குமார் ஒயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா? எளிய மக்களிடம் ஓராயிரம் கேள்விகள் இருக்கின்றன. ஆனால், பதில் சொல்லத்தான் அதிகார பீடங்கள் தயாராக இல்லை!

“எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன!”

சுவாதி கொலை வழக்கில் போலீஸ் தரப்பு என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வழக்கை விசாரித்த நுங்கம்பாக்கம் காவலர்களைச் சந்திக்க ஒருவாரமாக முயற்சி செய்தேன். பேசுவதற்கு அவர்கள் மறுத்துவந்த நிலையில் தீபாவளிக்கு முன்னிரவு வெடிச்சத்தங்களுக்கு இடையே அவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

``ஏன் ஒரு வருஷம் கழிச்சு இப்போ இதைப் பத்தி கேக்குறீங்க?’’ எனப் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்கள்.

``எதன் அடிப்படையில் ராம்குமார் குற்றவாளி என்று உறுதிப்படுத்தினீர்கள்?’’

`` நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றி பக்கத்துல இருந்த அப்பார்ட்மென்ட்கள்ல இருந்த கேமராக்கள் மூலம் கொலையாளியோட வீடியோஸ் எடுத்தோம். முகம் மட்டும் கேமராவில் சரியா பதிவாகல. அந்த வீடியோவை வெச்சு சுவாதி கொல்லப்பட்ட நாள்ல இருந்து நுங்கம்பாக்கம் சுற்று வட்டாரத்தில் இருக்கிற மேன்ஷன்கள்ல ஒரு தனி டீம் விசாரிச்சுட்டு வந்தாங்க. சுவாதி கொல்லப்பட்டது ஜூன் 24. சரியா ஜூலை ஒண்ணாந்தேதி ஒரு மேன்ஷன்ல ராம்குமாரோட வீடியோ க்ளிப்பிங்ஸைக் காட்டினப்போ, அங்க வேலை செய்ற தாத்தா `இதே மாதிரி டிரெஸ் எங்க மேன்ஷன்லயும் ஒரு பையன் போட்டுப் பாத்திருக்கேன்’னு சொன்னார். அந்தப் பையன் ரூம் எதுன்னு விசாரிச்சுப் போனா, கதவு பூட்டியிருந்தது. உடைச்சு உள்ளபோனா சுவாதியைக் கொல்லும்போது அவன் போட்டிருந்த டிரெஸ் ரத்தக்கறையோட அந்த ரூம்ல அப்படியே இருந்துச்சு. மேன்ஷன் ரெஜிஸ்டர்ல இருந்த அவன் போட்டோவை எடுத்துட்டுப்போய் கொலையை நேர்ல பார்த்த, ரயில்வே கேன்டீன்ல வேலை செய்றவர்கிட்ட காண்பிச்சோம். `ஆமாம் சார். இதே பையன்தான்’னு அவர் சொன்ன அப்புறம்தான் குற்றவாளியைத் தேட ஆரம்பிச்சோம்.”

``சுவாதி இறந்த ஒருநாள் முன்பாகவே ராம்குமார் சொந்த ஊருக்கு வந்துவிட்டதாக அவங்க பெற்றோர் சொல்கிறார்களே?’’

``நீங்ககூடத்தான் ஒரு கொலை பண்ணுனா உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா என்ன? அந்தப் பொண்ணைக் கொலை பண்ணிட்டு அவன் அன்னிக்கு நைட்டுதான் ஊருக்குப் போயிருக்கான். அவன் அன்னிக்கு நைட்டு எடுத்த பஸ் டிக்கெட், ட்ரெய்ன் டிக்கெட் எல்லாமே எங்ககிட்ட இருக்கு. அன்னிக்கு ஊருக்கு போறதுக்காகப் பக்கத்துல இருக்கிற ஏ.டி.எம்-ல காசு எடுத்த வீடியோ கூட இருக்கு.’’

``எதற்காக ராம்குமார் சுவாதியைக் கொல்ல வேண்டும்?’’

``அந்தப் பொண்ணு, வேலைக்குப் போகும்போதும் வரும்போதும் ஒரு மாசமா ஃபாலோ பண்ணியிருக்கான். இவன் ஏதோ செயின் திருடுறவன் போலன்னு நெனச்சுக்கிட்டு பயந்து ஃப்ரெண்ட்ஸ்க்கு அந்தப் பொண்ணு மெசேஜ்லாம் அனுப்பியிருக்கா. அந்த ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு. ஒருநாள் சாயங்காலம் நுங்கம்பாக்கத்துல ஒரு கோயில்ல வெச்சி, இந்தப் பையன் அந்தப் பொண்ணுகிட்ட `ஐ லவ் யூ’னு சொல்லியிருக்கான். அந்தப் பொண்ணு இவன் கன்னத்துலயே அறைஞ்சி, `உன் முகத்தைக் கண்ணாடில பாத்திருக்கியா’ன்னு கேட்டதும் இவனுக்குக் கடுப்பாகிப் போச்சு. இவளைப் பழி வாங்கணும்னு சொந்த ஊருக்கு வந்து பக்கத்து வீட்ல அரிவாளைத் திருடி சென்னைக்குக் கொண்டு வந்து அந்தப் பொண்ணை வெட்டியிருக்கான்.”

``கூலிப்படையினரால்தானே எப்படி வெட்டினால் உயிர்போகும்னு தெரிஞ்சி ஸ்பாட்லயே கொல்ல முடியும்... எப்படி சார், ராம்குமார் மாதிரி சாதாரண ஒருத்தரால் அது முடியும்னு நினைக்கிறீங்க?’’

``அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதுங்க. ஊர்க்காரப்பசங்கன்னா என்ன விளையாட்டுன்னு நெனைச்சுட்டீங்களா? யார் வீட்ல அரிவாளைத் திருடிட்டுப் போனானோ அவனே எங்ககிட்ட சொன்ன ஆதாரம் இருக்கு. கொலை பண்ண அன்னிக்கு இவன் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட்கிட்ட மெசேஜ் பண்ணியிருக்கான். சிம்கார்ட் மாத்துனா நாமயிருக்கிற இடத்தைக் கண்டுபுடிக்க முடியுமான்னு கேட்டிருக்கான். எதுக்குக் கேட்கணும்? அந்த ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு.’’

``உங்கள் தரப்புப்படி, கொலை செய்த ராம்குமார் ஏன் சொந்த ஊருக்குப் போய் தங்க வேண்டும்?’’

``கண்டுபிடிக்க மாட்டாங்கன்ற நினைப்புதான். அதனாலதான் சரியா போலீஸ் தேடி வந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் பதற்றத்துலயும் பயத்துலயும் கழுத்தை அறுத்துக்கிட்டான். அந்தப் பொண்ணு இறந்த ஒருவாரம் பேப்பர்ல வந்த அந்தப் பொண்ணோட புகைப்படங்களையெல்லாம் அவன் படுத்திருந்த தலைகாணி கீழ வெச்சியிருந்தான். அந்தப் பொண்ணோட செல்போன் வெச்சியிருந்தான். எல்லா ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு.”

``எப்படி சார், இந்த வழக்கில் எல்லா ஆதாரங்களும் அவ்வளவு துல்லியமாக உங்ககிட்ட இருக்கு?’’

“அவனோட நேரம் அவ்ளோதான். ராம்குமார்தான் கொலை செய்தான்னு 2,400 பக்கத்துக்கு ஆதாரங்களோட கோர்ட்ல சப்மிட் பண்ணியிருக்கோம். `சிபிஐ விசாரணையே இதுக்கு வேண்டாம். ரொம்ப சூப்பரா நீங்க தகவல்களை சப்மிட் பண்ணியிருக்கீங்க’ன்னு நீதிபதியே எங்களைப் பாராட்டினார்.

``ராம்குமார் பிடிபட்டவுடன் 10 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என்று சொன்னீர்கள். ஆனால் ராம்குமார் சிறையில் கிட்டத்தட்ட 70 நாள்கள் வரை இருந்தபோதும் ஏன் தாக்கல் செய்யவில்லை?’’

``நாங்க சீக்கிரமாகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சிருந்தோம்னா அவனுக்கு பெயில் கிடைச்சிருக்கும். அதுமட்டுமல்ல, 90 நாள் டைம் இருக்கும்போது நாங்க ஏன் அவசரப்படணும். எல்லா ஆவணங்களையும் எடுத்துவெச்சு சரியான நேரத்தில் தாக்கல் பண்ணலாம்னு இருந்தோம். அதுக்குள்ள அவன் தற்கொலை பண்ணிக்கிட்டான்.’’

``ராம்குமார் சிறையில எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும்?’’

`` `அந்தப் பையனுக்கு மனநிலை சரியில்லை. கவனமா பாத்துக்கங்க’ன்னு அவனைச் சிறைச்சாலையில ஒப்படைக்கிறப்பவே சொல்லிட்டுத்தான் வந்தோம்.’’