காந்தி தனது இடது காதுக்கு மேலே துப்பாக்கியை அழுத்திப் பிடித்திருக்கிறார். ஏற்கெனவே ஒருமுறை பதித்து எடுத்த வளையம் ஒன்று அருகில் குழிந்திருக்கிறது. அவரின் கைகளில் நடுக்கமில்லை. முகத்தில் குழந்தைத்தனமான சிரிப்பும் புரிந்துகொள்ள இயலாத ஒரு மர்மமும் நிறைந்திருக்கிறது. சற்று தொலைவில் சில கறுத்த குழந்தைகள் ஒரு மரச் சிலுவையின் மீது விளையாடிக் கொண்டிருக்கின்றன. யாரோ ஒருவரின் பெருமூச்சால் காட்சியின் மீது நீராவி படர்ந்து படிகிறது. அம்பேத்கர் அதைத் துடைக்க முயல்கிறார். காட்சி தெளியவில்லை. பதறி அழுத்தித் துடைக்கிறார். ஒரு தோட்டா சத்தமாக வெடிக்கிறது.

அம்பேத்கர் விழித்துக்கொள்கிறார். மொத்த உடலும் வியர்வையில் நனைந்துபோயிருந்தது. அதற்குமேல் அவரால் தூங்க முடியவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்துகொள்கிறார். சுவர்க்கடிகாரத்தில் நேரம் 11.30 மணி. மும்பை நகர சீதோஷ்ணம் முன்பைப் போலில்லை. வழக்கத்துக்கும் அதிகமான குளிரைக் கொண்டிருக்கிறது. சற்றுமுன் நேர்ந்த கனவை நினைவுகூர அவர் விரும்பவில்லை. ஆனால், மனம் அதில் பெரிதும் சலனமுற்றிருந்தது. மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாக உணர்ந்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்றாண்டுக்கால உழைப்பு. எண்களும் சொற்களுமாக மூளை நிரம்பி வழிந்தபடியிருந்தது. மாலையில் தன் உதவியாளர் நானக் சந்த் ராட்டுவிடம் தனது மனவேதனைகளைப் பகிர்ந்துகொண்டது நினைவுக்கு வந்தது. “என் பணி இன்னும் முழுமையடையவில்லை ராட்டு. உடலோ என்னை ஒரு எல்லைக்குமேல் உழைப் பதற்கு அனுமதிக்க மறுக்கிறது. என் மக்களின் உரிமைகளுக்காகச் சுழலும் ஒரு ‘தேரை’ என்னால் இயன்றமட்டும் இதுவரை இழுத்துவந்துவிட்டேன். இதை இன்னும் முன்னோக்கி இழுக்க ஒருவர் வேண்டும். வருத்தமாக இருக்கிறது! இது பின்னோக்கி இழுக்கப் பட்டுவிடக் கூடாது.” அவருக்கு இந்த வார்த்தைகளும் நினைவும் ஒரு ஆழமான அச்ச உணர்வைத் தந்தன. அந்த கணம் அவர் எல்லாவித உணர்வுகளிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் விடுபட விரும்பினார். ஓர் ஆழ்ந்த அமைதிக்கும் இசைக்கும் அவரது மனம் ஏங்கியது.

எழுந்து சென்று ஒரு ரகசிய அறையைத் திறப்பதுபோல, அந்தப் பேழையைத் திறந்தார். கடுந்தவத்தில் மெலிந்து இறுகிப்போன புத்தனின் உடல் போன்றிருந்த வயலினைப் பேழைக்குள்ளிருந்து எடுத்தார். அதன் கருஞ்சிவப்பு நிறத்தின் வசீகரத்தை ஒருமுறை ஆழமாக அனுபவித்தார். அதேசமயம், இதுவரை வரலாற்றில் அதிகாரத்தால் நசுக்கப் பட்டவர்களின், கொல்லப்பட்டவர்களின் உறைந்த குருதியை அது நினைவூட்டவும், அந்த அழகியல் உணர்விலிருந்து நிதானமானார். வில்லின் நூலிழைகளுக்கு மெழுகு பூசினார். அவரது உடல்மொழியில் ஒரு குழந்தைக்கு மருந்திடும் பாவமிருந்தது. லாகவமாக வயலினை ஏந்திக்கொண்டவர், மெள்ள தன் மனவெளியை இசையாக வாசிக்கத் தொடங்கினார். கைவிரல்கள், நரம்புகளைத் தன்னியல்பில் லயப்படுத்தின. அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த இரண்டு மாதகாலப் பயிற்சியில் இவ்வளவு உற்சாகத்தை விரல்களில் அவர் இதுவரை கண்டதில்லை. அவரது வயலின் ஆசிரியர் பல்வந்த் சாத்தே இந்தக் காட்சியைக் கண்டால் மிகவும் சந்தோஷப்படுவார்.

சன்னல் வழியே வரும் குளிர்காற்றில் திரைச்சீலை ஆடுவது அவருக்குப் பிடித்திருந்தது. மேஜையிலிருந்த ‘தி வயலின் - ஹௌ டு மாஸ்டர் இட்’ புத்தகத்தின் பக்கங்கள் படபடப்பதை அவர் ரசித்தார். உடலெங்கும் புதிய உற்சாகம் பற்றிக்கொள்ள, அவரது அறிவின் கால்கள் இதுவரை நடந்து பார்த்திராத, இசையின் பாதைக்குள் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கினார். தந்திகளிலும் வில்லின் இழைகளிலும் உயிர்மையின் சூடேறுவதை உணர்ந்தார். அவருக்குள் ஏதோ ஒன்று சட்டெனத் திறந்துகொண்டது. அவர் விழிகள் தன்னையறியாமல் மூடிக்கொண்டன. இசையின் பெருவெளியில் ஒரு கனவுத்துண்டமாக அவர் மிதந்தார்.

பாதை மறுக்கப்பட்ட வீதிகளில் கம்பீரமாய் நுழைந்து செல்கிறது இசை... அது குரலற்றவர்களின் குரலாய் பிரபஞ்சமெங்கும் எதிரொலிக்கிறது... சவுதார் குளத்து நீரில் தாமரைகள் பூக்கின்றன, மலவாளிகளைச் சுமந்து சிவந்த உள்ளங்கைகளைப் போலிருக்கின்றன அதன் இதழ்கள்... கடலில் ஆடும் ‘விக்டோரியா’ கப்பல், அதிலிருந்து இறங்கி வருகிறது அவரின் ஆன்மாவின் ஊன்றுகோலைப் போன்ற F எனும் ஆங்கில எழுத்து... மநுவின் லிபிகளைப் பற்றிக்கொண்டு தீ களிநடமாடுகிறது... குழந்தைப் பருவத்திலேயே இறந்துபோன அவருடைய பிள்ளைகளின் சாயல் கொண்டிருக்கின்றன உன்னத சங்கீதத்தின் இரண்டு வரிகள்... நெருப்பை ஏந்தி வரும் ஒரு கோடிப் பெண்களுக்கு நடுவே மங்கலாகத் தெரியும் ராமாபாயின் புன்னகை... ஐம்பது காளைகள் பூட்டப்பட்ட தேரில் பாராளு மன்றத்துக்குள் நுழையும் கறுப்பர்கள்... எதிர்த்திசையில் சுழலும் ராட்டைச் சக்கரம்... அறுபடும் வர்ண நூல்கள்... நிம்மதியாக உறங்கும் ஒரு நாடோடியின் ஓவியம்... மழையில் தனது தூரிகை வண்ணங்களைக் கழுவும் அம்பேத்கர்.

மெல்ல விழித்தார். மனதின் எடை முழுமையாகக் குறைந்துவிட்டது போன்ற உணர்வு. எங்கிருந்தோ மீண்டும் பூமிக்குத் திரும்பிவிட்டதாக நினைத்தார். இரண்டு தோள்பட்டைகளிலும் கடுமையான வலி. இன்னும் அந்த இசையின் அதிர்வலைகள் காற்றிலிருந்தன. நீரருந்தும்போது இது நிச்சயமாகக் கனவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். அதிகாலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளானது அவரது உடல். ‘ராட்டு’விடம் தனது மனம் வயலின் இசைக்கருவியின் உள்வடிவத்தைப் போல வெறுமையாகியிருப்பதைச் சொன்னார். ராட்டு சிரித்துக்கொண்டார். அம்பேத்கர் பகலில் கொஞ்சம் ஓய்வெடுத்தார். மாலையில் வந்த சாத்தே, அம்பேத்கரின் உடல்நிலை குறித்து வருத்தமடைந்தார். அவருக்கு அம்பேத்கரை உரிமையோடு கடிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. நாற்காலியின் மீதிருந்த வயலினைப் பேழைக்குள் எடுத்துவைத்து மூடினார். ஏதோ தோன்றியவராக மீண்டும் திறந்தார். வயலின் நரம்புகளைக் கூர்ந்து கவனித்தார். கண்களைத் துடைத்துக்கொண்டு ஆழமாகப் பார்த்தவர், வாய்விட்டுச் சொன்னார், “நரம்புகள் அதிர்ந்துகொண்டிருக்கின்றன!”