Published:Updated:

வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!

வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!

வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!

வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!

வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!

Published:Updated:
வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!

``தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மையான,  சுகாதாரமான

வேண்டாம் இந்த வீண் விளம்பரம்!

சுற்றுச்சூழலைப் பராமரிப்பது தமிழக அரசின் கடமை. தேவையில்லாமல் சாலைகள், கட்டடங்கள், பொது இடங்களில் விளம்பரம் செய்து அவற்றின் அழகைச் சீர்குலைக்கக் கூடாது. ஒருவேளை, பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் அனுமதி பெற்று வைக்கப்பட்டாலும், அவற்றில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் இடம்பெறக்கூடாது’’ எனத் தீர்ப்பளித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன். உண்மையில் அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்க வேண்டிய, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இது.

பாதையை மறைக்கும் பேனர்கள் மற்றும் வானைத் தொட முயற்சி செய்யும் கட்-அவுட்களால் பொதுமக்கள் தினம் தினம் சந்திக்கும் சோதனைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அதுவும் அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்குழு, தலைவர்களின் பிறந்த நாள் என்று வந்துவிட்டால் இன்னும் மோசம். நடைபாதைகளை அடைத்து நடுச்சாலை வரை வைக்கப்படும் பேனர்களால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு அளவேயில்லை. நட்சத்திர நடிகர்களின் புதுப்படங்கள் வெளிவரும்போதும் அவர்களது ரசிகர்களால் வைக்கப்படும் பேனர்களும் பொதுமக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன.

உள்ளூரில் செல்வாக்கோடு இருப்பவர்களையும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையும் குளிர்விக்க, தங்களை அவர்களின் விசுவாசிகளாகக் காட்டிக்கொள்ள மட்டுமே இத்தகைய பேனர், கட் அவுட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் பலன் அடைவதற்காகப் பொதுமக்கள் ஏன் துன்பப்பட வேண்டும்? ‘எங்கள் இயக்கத்தின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பேனர்கள் வைக்கிறோம்’ என்று எந்த அரசியல் கட்சியாவது சொன்னால், அதில் உண்மையில்லை. ஏனெனில், காலம் மாறிவிட்ட சூழலில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என அரசியல் கட்சிகள் மக்களைச் சென்றடைவதற்கு ஏராளமான ஊடகங்கள் இருக்கின்றன.

நல்ல தீர்ப்பை நீதிமன்றம் அளித்தபோதும் அதை நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை என்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பிறகு திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் வைக்கப்பட்ட பேனர்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. `நீதிமன்றம் சொன்னபடி மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமே இருந்தன; நாங்கள் பெயரோடு நிறுத்திக்கொண்டோம்’ எனச் சமாளிக்கிறது தமிழக அரசு.

 சாலைப்போக்குவரத்துக்கு இடையூறாகப் பேனர்களே இருக்கக் கூடாது என்ற நிலையை நோக்கித்தான் தமிழக அரசு செல்ல வேண்டுமே தவிர, இத்தகைய விநோதமான பேனர்களை வைத்துப் புகழ்பரப்ப நினைக்கக் கூடாது. திருமணம், காதணி விழா, குழந்தைகளின் பிறந்தநாள் விழா எனக் குடும்பக்கொண்டாட்டங்களுக்குப் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை பொதுமக்களும் விட்டொழிக்க வேண்டும்.
 
பேனர்களும், கட்-அவுட்களும் இல்லாத தமிழகம் உருவாகவேண்டும். அதுதான் எழில்மிக்க நகரங்களையும் விபத்தில்லாத் தமிழகத்தையும் உருவாக்கும். இதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism