Published:Updated:

இது ஆன்லைன் சினிமா!

இது ஆன்லைன் சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
இது ஆன்லைன் சினிமா!

கார்த்தி

இது ஆன்லைன் சினிமா!

கார்த்தி

Published:Updated:
இது ஆன்லைன் சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
இது ஆன்லைன் சினிமா!

சூப்பர் ஹிட் படங்கள் முதல் சுமார் படங்கள் வரை சினிமாவுக்கு ஆன்லைனில் ஆதரவு அமோகம். தியேட்டர்களைவிட ஆன்லைனில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில பல கோடிகளைத் தாண்டிக்கொண்டிருக்க, ஆன்லைனுக்காகவே படம் எடுக்கும் கலாசாரம் தொடங்கிவிட்டது. `வெப் சீரிஸ்’ என அடையாளப்படுத்தப்படும் இந்த வகைப்படங்கள்தாம்  இப்போது மோஸ்ட் ட்ரெண்டிங். இந்தியாவில் இப்போது ஹிட் அடிக்கும் சில வெப் சீரிஸ் இங்கே!

Baahubali: The Lost Legends

வெள்ளித்திரையில் எந்த அளவுக்கு வெறித்தன வெற்றியோ அதைவிடவும் பல மடங்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது `பாகுபலி : தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்’. அமேசான் ப்ரைமில் வெளியாகிறது இந்த வெப் சீரிஸ். பாகுபலி முதல் பாகத்தில் வரும் காலகேயர்களின் சண்டைக்கு முன், இரு இளவரசர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த அனிமேஷன் தொடர். அதிரடி, ஆக்‌ஷன், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல், அடுத்து என்ன என்கிற ஆர்வத்தைத் தக்கவைக்கிறது ஒவ்வொரு எபிசோடும். இந்தத் தொடரை இயக்குவது ராஜமெளலி டீம்தான். 

இது ஆன்லைன் சினிமா!

தேவசேனாவுக்கு முன்னரும், அமரேந்திர பாகுபலிக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள். அப்போதும் பல்வாள்தேவன் சிங்கிள்தான். ஒவ்வொரு எபிசோடும் 20 நிமிடங்கள் மட்டுமே.  சினிமாவுக்கும் தொடருக்கும் பங்கம் வராமல் காட்சிகளை கனெக்ட் செய்திருக்கும் விதம் எனப் பல இடங்களில் மென்திரையில் கைதட்டல் வாங்குகிறது `தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்’. ஆனால், ராஜமௌலி சார், `காலகேயர்தான் இதுலயே வர்றாங்களே, அப்புறம் எப்படி முதல் பாகத்துல புதுசா வர்ற மாதிரி காட்டினீங்க?’ என்கிற லாஜிக்கல் கேள்வி, தொடர் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் எழுகிறது. எது எப்படியோ, அடுத்த சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் பாகுபலியின் அனிமேஷன் ரசிகர்கள்!

Narcos

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஆன்லைன் சினிமா!

நெட்ஃபிளிக்ஸில் வரும் `நார்கோஸ்’தான் அகில உலக வெப்சீரிஸ் ஹிட். இந்த செப்டம்பரில் மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் `நார்கோஸ்’ போதை மருந்து மாஃபியாவான பாப்லோ எஸ்கோபாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. `நாயகன்’ தொடங்கி வீரப்பன் வரை எல்லோருக்கும் இருக்கும் அதே, ஏழைகளின் பங்காளன் என்னும் அடைமொழியோடு கள்ள மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்கிறான் பாப்லோ எஸ்கோபார். மாஃபியா கொலைகள் செய்துகொண்டு, போதை மருந்து ராஜாவாக கொலம்பியா, மெக்ஸிகன் பகுதிகளில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருப்பவனுக்கு அரசியல் ஆசையும் துளிர் விடுகிறது. அரசியலில்  இருக்கும் சிலர் இவனைப் பந்தாட நினைக்க... அரசியலோ மாஃபியாவோ, உயிர் ஒன்றுதானே என்று, அரசியல் கொலைகள் செய்ய ஆரம்பிக்கிறான். மேற்கு கொலம்பியாவில் இருக்கும் பல கட்டடங்கள் உருவானதற்குக் காரணம் பாப்லோதான். ஆனால், அந்தக் கட்டடங்களுக்கு அஸ்திவாரம் போட்டவை பாப்லோ செய்த எண்ணிலடங்கா கொலைகள். வித்தியாசமான முறையில் வீட்டுச்சிறையில் வைக்கப்படுகிறான் பாப்லோ. `இனி நான் யாரையும் கொல்ல மாட்டேன். இந்த ஏரியாவைத் தாண்டி வர மாட்டேன்’ என உறுதியளிக்கும் பாப்லோ, தனக்கென ஒரு வீட்டை வடிவமைக்கிறான். அதுதான் அவனது சிறை. ஆனாலும், எல்லாவிதமான ரவுடித்தனங்களும், அவனது பார்வையில் தொடர்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு என்பதைப் போல், 44 வயதில் தன் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் சுட்டுக்கொல்லப்படுகிறான் பாப்லோ.  அவன் கொல்லப்ப்பட்டபின், நடக்கும் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கிப் பயணிக்கிறது நார்கோஸ் 3.

As I am suffering from kadhal

இது ஆன்லைன் சினிமா!

குறும்படத்தில் தன் கனவு வாழ்க்கையை ஆரம்பித்து, `காதலில் சொதப்புவது எப்படி’ எனப் பெரிய திரையில் காலடி எடுத்துவைத்து, `மாரி’யில் `செஞ்சிடுவேன்’ என்ற பாலாஜி மோகன் வெப்சீரிஸில்  `As I am suffering from kadhal’ என வந்துநிற்கிறார்.  விவாகரத்து பெற்ற ஒருவன்; லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஒரு ஜோடி, திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஒரு ஜோடி, தங்களின் கசப்பான அனுபவத்தால் தங்களுக்குள்ளேயே பழிவாங்கிக்கொள்ள  ஒன்றாக இருக்கும் ஒரு ஜோடி எனக் கதைகளும் கிளைக்கதைகளுமே இந்த வெப்சீரிஸ். ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த வெப்சீரிஸில் `காதலில் சொதப்புவது எப்படி’யைப் போலவே, கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை நோக்கிப் பேசுவதுபோல் பல காட்சிகளை அமைத்திருக்கிறார் பாலாஜி.  நட்சத்திரா, தன்யா பாலகிருஷ்ணா, போட்டோகிராபர் சுந்தர் ராமு என எல்லோருக்கும் பரிச்சயமான முகங்கள் பல இருப்பது இந்த வெப் சீரிஸின் ப்ளஸ்.

Inside Edge

கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டங்களை மையப்படுத்தி ஹைடெக்காக எடுக்கப்பட்டிருக்கும் தொடர்தான் இன்சைடு எட்ஜ். ‘மேக் இட் சிம்பிள்’ என தல அஜித் பாணியில் சொல்வதானால், ‘மங்காத்தா’தான் சீரிஸே. முழுக்க முழுக்க ஐபிஎல்லை மையப்படுத்தி, அதில் நடப்பதாகச் சொல்லப்படும் பண விளையாட்டுகளை உண்மைக்கு மிக அருகில் கொண்டுவந்து சொல்லியிருக்கிறார்கள். தொடரில் வரும் பெயர்களை மட்டும் எடுத்துவிட்டுக் கற்பனை செய்து பார்த்தால்,  `அட இது அதுல்ல?’ என வடிவேலு பாணியில் நம்மால் பல விஷயங்களை கனெக்ட் செய்ய முடியும்.

இது ஆன்லைன் சினிமா!

தன் சினிமா கரியரின் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் நடிகை ஜரினா மாலிக் அவரது கிரிக்கெட் அணியான மும்பை மேவரிக்ஸைக் காப்பாற்ற முடியாமல், குறைவான தொகைக்கு ஸ்போர்ட்ஸ் கம்பெனி ஓனரான விக்ராந்த் தவனுக்கு (விவேக் ஓபராய்) விற்கிறார். அந்த அணியை வைத்து மொத்தமாக சூதாட்டத்தில் ஈடுபடுகிறார் விக்ராந்த். நடிகை நடத்தும் அணி, குறைவான தொகைக்கு அணியை வாங்குவது, மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்து கிரிக்கெட் ஆட வரும் பிரசாந்த் கனுஜாவின் வாழ்க்கையுடன்  விளையாடுவது,  சியர்லீடர்ஸ் சர்ச்சை, நிறவெறி நக்கல், உயர்ஜாதித் திமிர் என கிரிக்கெட்டில் காலம்தொட்டு நடக்கும் பல விஷயங்களை மிகவும் ஓப்பனாகப் பேசுகிறது இன்சைடு எட்ஜ். வெப் சீரிஸுக்கு சென்சார் இல்லை என்பதற்காகவே அத்தனை 18 ப்ளஸ் காட்சிகளையும் வார்த்தைகளையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் கரண் அன்ஷுமான். கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவோடு ஓடிக்கொண்டிருக்கிறது  `இன்சைடு எட்ஜ்’.
   
Livin’

`ஓ காதல் கண்மணி’யில் மணிரத்னம், காதல் கசிய எடுத்த லிவ்விங் டு கெதர் கான்செப்ட்தான் தற்போது தமிழக வெப் சீரிஸாக ரொமான்ஸுகிறது. மெட்ராஸ் சென்ட்ரலின் யூட்யூப் சேனலில் வாரம் ஒரு எபிசோடு என ஹிட் அடித்தது `லிவ்வின்’ வெப் சீரிஸ்.       
    
கல்யாணம் எல்லாம் வேண்டாம் என ஒன்றாக வாழத்துவங்கும் ஜோடி, அவர்களின் ஏடாகூட விசித்திர நண்பன், அந்த நண்பனின் ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டலிஜென்ட் காதலி,  ஜோடிகளுக்குள்  வரும் ஈகோ, காதல், கல்யாணம், லொட்டு லொசுக்கு என ஒரு மெகா சீரியலுக்கே உரிய அத்தனை அம்சங்களையும் கொண்ட வெப் சீரிஸ் இது. ஆனால், டெக்னாலஜியும், கதை சொல்லலும் வேற லெவல்.

இது ஆன்லைன் சினிமா!

கதையின் ஆரம்பத்தில் வரும் `எந்த மனிதர்களும் துன்புறுத்தப்படவில்லை’ என்னும் `பொறுப்புத் துறப்பு’ கார்ட்டிலிருந்தே கவனம் பெற வைக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.

ஹரிஷ், ஹரித்தா இருவரும் லிவ்வின் கான்செப்ட்டில் காதலிக்கிறார்கள். ஹரிஷுடன் ஜாலியாக அறையை ஓசி ஷேரிங் செய்யும் நண்பன் சாம் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறான். எந்நேரமும் எதையாவது வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டே இருப்பது, குளிக்காமல் கொள்ளாமல்  அழுக்குமூட்டையாகவே திரிவது, கண்டபடி கேம் விளையாடுவது என சாம் செய்யும் அலப்பறைகள் அதிகம்.  `கப்ராக்கா டப்ரா’ என ஹோட்டல் மெனு கார்டுகளுக்கு வித்தியாசப் பெயர் வைக்கும் ஹீரோயின் ஹரித்தாவின் கதாபாத்திரமும் செம.

`லிவ்வின்’ கான்செப்ட் பிரச்னைகள் இல்லாமல் முடிந்ததா, சாம் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை, செம ஜாலியாகவும் எதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கதை முழுக்க கெட்டவார்த்தைகள்தான் வகைதொகையில்லாமல் வந்துவிழுகின்றன.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism