Published:Updated:

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

சிலிக்கான் ஸ்டார்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சிலிக்கான் ஸ்டார்ஸ்!

ஞா.சுதாகர்

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

ஞா.சுதாகர்

Published:Updated:
சிலிக்கான் ஸ்டார்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சிலிக்கான் ஸ்டார்ஸ்!

சிலிக்கான் வேலி என்றதுமே ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என்றால் நம்மை இனி ஓரங்கட்டிவிடுவார்கள். சின்னச் சின்ன ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்துகூட வலிமையான சி.இ.ஓ-க்கள் உருவெடுக்கத் துவங்கிவிட்டனர். அப்படி சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் சி.இ.ஓ-க்களின் அறிமுகம் இங்கே.

எலான்  மஸ்க்

(ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, தி போரிங்)

``உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” என்ற குறளின் டெக்னிக்கல் வெர்ஷன்தான் எலான் மஸ்க். முடியாத விஷயங்களைச் செய்து முடிப்பதுதான் இவரது ஹாபி.  சென்னையைத் தாண்டி, செங்கல்பட்டில் அபார்ட்மென்ட் கட்டுவது போல, செவ்வாய் கிரகத்தில் காலனி கட்டும் திட்டம் பற்றி அறிவித்து சமீபத்தில் அசால்ட் செய்திருக்கிறார் இந்த 46 வயது ஹீரோ.

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

மற்ற சி.இ.ஓ-க்கள் எல்லாம் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் என வழக்கமான விஷயங்களுடன் டீல் செய்துகொண்டிருக்க, எலான் மஸ்க்கோ, ஹைப்பர்லூப், பிக் ஃபால்கன் ராக்கெட், எலக்ட்ரிக் கார், மரபு சாரா எரிசக்தி என எதிர்கால டெக்னாலஜிகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார். எலக்ட்ரிக் கார்களுக்கான டெஸ்லா நிறுவனத்தில் தொடங்கிய மஸ்க்கின் மாஸ்டர் மைண்ட் தற்போது செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதில் வந்து நிற்கிறது. “2022-ல் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவிருக்கிறேன்” என, கடந்த ஆண்டு அதிரடி காட்டிய மனுஷன், இந்த ஆண்டு கொளுத்தியிருப்பது ஆயிரம் வாலா பட்டாசு. “2024-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு BFR ராக்கெட்டுகளில் மனிதர்கள் அனுப்பப் படுவார்கள். அங்கே ஆராய்ச்சி மேற்கொள்ளப் படும். அனைத்தும் நடந்தபின்னர் அங்கே மனிதர்களுக்கான நகரம் நிர்மாணிக்கப்படும். இந்த ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு மட்டுமல்ல; பூமியிலேயே நகரங்களுக்கிடையே கூடப் பயணிக்க முடியும். இந்த ராக்கெட்மூலம் பூமியில் பயணித்தால், உலகின் எந்தவொரு நகரத்திற்கும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிட முடியும். இவற்றைக் குறுகிய காலத்திற்குள் செய்துமுடிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும் எனக்கு இந்த அவகாசமே அதிகம்” என்கிறார் மஸ்க்.

ஜெஃப் பசாஸ் (அமேசான்)

“உலகின் நம்பர் 1 பணக்காரர் யார்?” என்ற ஒரு மார்க் கேள்வியின் விடையைச் சில மணி நேரத்தில் மாற்றிய மாயக்காரன் ஜெஃப் பசாஸ். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் டாப் 10 பணக்காரர்களின் ரியல் டைம் ரேங்கிங் பட்டியலில் இந்தமுறை பில் கேட்ஸை முந்தி, முதலிடம் பிடித்தார் ஜெஃப். ஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகள், அன்று மாலை கொஞ்சம் சரிவுடன்  முடியவே, பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் பில்கேட்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

அனைத்துத் துறைகளைவிடவும், இன்று பில்லியனர்களுக்கு முதல் சாய்ஸாக இருக்கிறது விண்வெளித்துறை. அதிகரித்துக் கொண்டே செல்லும் மார்க்கெட்தான் அதற்குக் காரணம். இதற்கு ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனத்தின்மூலம் விதை போட்டது ஜெஃப் பசாஸ்தான். எப்படி தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ராக்கெட்டுகளை செவ்வாய்க்கு அனுப்பத் திட்டமிட்டுவருகிறதோ, அதைப்போலவே ப்ளூ ஆரிஜின் நிறுவனமும் 2019-ம் ஆண்டு மக்களை விண்வெளிக்கு அனுப்ப ப்ளூ பிரின்ட் தயார் செய்துவருகிறது. ஜெஃப் பசாஸின் சாதனைகள் வரும் வருடங்களில் இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள் டெக் வல்லுநர்கள்.

கெவின் சிஸ்ட்ரோம் (இன்ஸ்டாகிராம்)


“இவன் ரொம்ப ஓவரா வளர்ரான்ல” என ஃபேஸ்புக் வளைத்துப்போட்ட நிறுவனங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். ஃபேஸ்புக்கின் நம்பிக்கையைக் கொஞ்சமும் ஏமாற்றாமல், சரசரவென மேல ஏறி வந்துகொண்டிருக்கிறது அந்நிறுவனம். 2010-ல் அறிமுகம் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம், கடந்த மாதத்துடன் 800 மில்லியன் பயனாளர்களைக் கடந்துள்ளது. அதுவும் இந்த வருடம் மட்டுமே 200 மில்லியன் பயனாளர்களைப் புதிதாகச் சேர்த்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு ஒரே காரணம் கெவின் சிஸ்ட்ரோம்; இன்ஸ்டாகிராமின் நிறுவனர்.

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

அதிகரிக்கும் பயனாளர்கள், எகிறும் வருமானம் என ஓஹோவென வளர்ந்து வந்தாலும், இன்ஸ்டாகிராம்மீது அடிக்கடி சுமத்தப்படும் குற்றச்சாட்டு, அது ஸ்னாப்சாட்டைப் பார்த்து காப்பியடிக்கிறது என்பதுதான். அது உண்மையும் கூட. அதற்கு கெவினின் பதில் இதுதான்.

“இன்ஸ்டாகிராம் ஃபில்டர் வசதியைப் போல, நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தால் நிச்சயம் அது நல்ல விஷயம்தான். ஆனால், இது ஒரு கண்டுபிடிப்பு அல்ல; இது ஒரு வடிவம்தான். கூகுளின் ஜி-மெயில் உலகின் முதல் மின்னஞ்சல் சேவை அல்ல; கூகுள் மேப்ஸ் உலகின் முதல் மேப்ஸ் வசதியல்ல; ஆப்பிளின் ஐபோன் என்பது உலகின் முதல் போன் அல்ல. இவையெல்லாம் ஏற்கெனவே இருந்த வடிவங்கள்தானே? எனவே நீங்கள் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதால் அது தவறல்ல; சிலிக்கான் வேலியின் பல கண்டுபிடிப்புகள் அப்படித்தான் மக்களுக்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வடிவத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்; அது உங்களுக்கு எப்படிப் பயன்படப்போகிறது என்பதுதான் முக்கியம். இது இன்ஸ்டாவுக்கும் பொருந்தும்; ஸ்னாப்சாட்டிற்கும் பொருந்தும்.”

விட்டலிக் பியூட்டரின் ( எத்தீரியம்) :

நம் காரை, இன்னொருவருக்கு விற்க வேண்டுமென்றால் என்ன செய்வோம்? ஆர்.சி புத்தகத்திலிருந்து சாவி வரைக்கும் அனைத்தையும் விற்க வேண்டிய நபரிடம் ஒப்படைத்துவிட்டு, பணம் பெற்றுக்கொள்வோம். இதுவே டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார் என்றால் என்ன ஆகும்? வழக்கம்போல ஆர்.சி புக்கை மட்டும் மாற்றிக்கொண்டு டிரைவரை மாற்றிவிட முடியாது. காரணம், அந்த காருக்கும்,  ‘தான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்கப்படுகிறோம்’ என்பது தெரிய வேண்டும். புதிய உரிமையாளரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இதற்காகப் போடப்படுவதுதான் ஸ்மார்ட் கான்ட்ராக்ட். பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படும் இந்த ஒப்பந்தம், இணையம் மூலம் இணைந்திருக்கும் கருவிகளுக்கு இடையே போடப்படுவது. இந்த ஒப்பந்தம் போடுவதற்கான ஒரு தளம்தான் எத்தீரியம். இதன் தலைவர்தான் விட்டலிக் பியூட்டரின்.

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

முழுக்க முழுக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் இந்த எத்தீரியம், மேலே சொன்ன உதாரணம் போல பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தின் நம்பிக்கைக்குரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்துவருகிறது எத்தீரியம். `விசா நிறுவனம் தற்போது செய்யும் அளவிற்கு, எதிர்காலத்தில் எத்தீரியம் மூலம் பணப்பரிவர்த்தனை  நடக்கும்’ என்கிறார் பியூட்டரின்.

சாந்தனு நாராயண் (அடோப்)

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

இந்திய சி.இ.ஓ-க்கள் என்றாலே கூகுளின் சுந்தர்பிச்சை அல்லது மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெள்ளாதான் நமக்கு நினைவில் வருவார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கெல்லாம் சீனியர் அடோப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு. 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துவருகிறார். வெறும் டெஸ்க்டாப்பில் மட்டுமே இருந்துவந்த அடோபின் ராஜ்ஜியம், தற்போது மொபைல் போன் வரை விரிவடைந்துவிட்டது. கூடிய விரைவில் காரிலும் இடம்பெறவிருக்கிறது அடோப். பயனாளர்களின் டேட்டாவைக் கொண்டு ஆடியோ விளம்பரங்களை காரில் ஒலிக்கச் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதுதவிர, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்டட் ரியாலிட்டி புராஜெக்ட்களையும் சேர்த்துக்கொண்டு இன்னும் இன்னும் ட்ரெண்ட்டியாக உருமாறிவருகிறது அடோப். எல்லாவற்றுக்கும் அச்சாரமாக இருக்கிறார் சாந்தனு.

இவான் ஸ்பீகல் (ஸ்னாப்சாட்)

உலகளவில் வலிமையான சி.இ.ஓ-க்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கிறார் இவான். “3 பில்லியன் டாலர் ஓகேவா?” என பேஸ்புக் பேரம் பேசியபோதும், “30 பில்லியன் டாலர் தர்றோம்” என கூகுள் கூப்பிட்டபோதும் வேண்டாம் என மறுத்த கெத்து பிசினஸ்மேன் இவர்.

சிலிக்கான் ஸ்டார்ஸ்!

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றைவிடவும், இளவட்டங்களின் பல்ஸ் புரிந்து ட்ரெண்ட்டியாக இருப்பதுதான் ஸ்னாப்பின் ஸ்டைல். அதனை அப்படியே தூக்கி, தன்னுடைய சேவைகளில் வைத்துக்கொள்வது  இன்ஸ்ட்ராகிராமின்  ஸ்டைல். இது பலமுறை நடந்திருந்தாலும்கூட, இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்வதில்லை இவர். “யாஹூவில் சின்னதாக ஒரு சர்ச் பாக்ஸ் இருப்பதால், அது கூகுளாகிவிட முடியாது” என காப்பி பேஸ்ட் பற்றி ஜஸ்ட் லைக் தட் கமென்ட் தட்டியிருக்கிறார் இவான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism