Published:Updated:

நேரடி மானியம் வழங்கும் திட்டம்: மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்!

நேரடி மானியம் வழங்கும் திட்டம்: மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்!
நேரடி மானியம் வழங்கும் திட்டம்: மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்!
நேரடி மானியம் வழங்கும் திட்டம்: மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்!

புதுடெல்லி: நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில் இது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஏற்கனவே 63 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டத்தை, தற்போது மேலும் 78 மாவட்டங்களில் விரிவுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி அளித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை 20 மாவட்டங்களில் நேரடியாக வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டை வழங்குதல், ஆதார் எண் வழங்குதல் ,பயனீட்டாளர்களை ஒருங்கிணைத்தல் என பல நிலைகளில் குளறுபடிகள் நடப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த குளறுபடிகள் அரசின் மோசமான செயல்பாட்டையே காட்டுவதாக தெரிவித்தார்.

இதனைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேரடி மானிய பயனீட்டாளர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஆதார் அட்டையைக் கொண்டு வங்கி கணக்கு துவங்கி பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புரட்சிகரமான திட்டம்: ப.சிதம்பரம்

நேரடி மானியம் வழங்கும் திட்டம்: மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்!



இதனிடையே டெல்லியிலமின்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்," நேரடி பணபரிமாற்றத் திட்டம், மத்திய அரசின் புரட்சிகரமான திட்டம் என்று கூறினார்.2013-14-ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவோம். பயணாளிகளுக்கு நேரடி பணபரிமாற்ற திட்டம் மேலும் 78 மாவட்டங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

2012 -13 ஆம் நிதியாண்டில் ரூ.10,38,037 கோடி வரிவருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை காட்டிலும் வரிவருவாய் 15.7% கூடுதலாகும். போலி பெயரில் உள்ள சமையல் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும்" என்றார்.