பீட்டர் பேன், போட் நெக், கவுல் நெக் எந்த உடல்வாகுக்கு எதை தேர்வு செய்யலாம்! #Tips

பீட்டர் பேன், போட் நெக், கவுல் நெக் எந்த உடல்வாகுக்கு எதை தேர்வு செய்யலாம்!  #Tips

வித்தியாச வித்தியாசமாக பிளவுஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்வதுதான் இப்போதைய ஹாட் டிரெண்ட். எந்த கலர் புடவைக்கும் எந்த கலர் பிளவுஸையும் அணியலாம். வழக்கமான பிளவுஸ் ஸ்டைலில் இல்லாமல் சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன், வித்தியாசமான லுக் எனக் கெத்து காட்டுகிறார்கள் பெண்கள். ஆரி வொர்க், எம்பிராய்டரி வொர்க், ஸ்டோன் வொர்க் என கிராண்டி வொர்க்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டிரடிஷனல் பிளவுஸ் ஒரு பக்கம் டிரெண்ட் இருக்கிறது. ஹை காலர், போட் நெக், பீட்டர் பேன், டீப் நெக் என வித்தியாசமான லுக்கில் பேட்டர்ன் பிளவுஸ்கள் லேட்டஸ்ட் டிரெண்ட். 'ஆனால், இது எல்லாருக்கும் பொருத்தமாக இருக்குமா? நடிகைகள் அணிந்து வந்தால் கெத்தா இருக்கும். நமக்கு மேட்ச் ஆவதற்கு எப்படித்தான் தேர்வுசெய்வது?' என்கிற பெண்களுக்காக, டிரெண்டியான பிளவுஸ் தேர்வு பற்றிய அடிப்படைத் தகவலைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட், ஜோத்ஸானா.டிசைனர்

போட் நெக் (Boat neck)

ஒல்லி- பெல்லி பெண்களுக்குத் தோள்பட்டை குறுகலாக இருக்கும் என்பதால், போட் நெக் பர்ஃபெக்ட் மேட்ச்சாக இருக்கும். முழுக்கை அல்லது எல்போ வரை என ஸ்லீவை வடிவமைத்துக்கொள்ளலாம். உடல் பருமனான பெண்கள், போட் நெக் அணிய விரும்பினால், ஹாஃப் ஸ்லீவ் பொருத்தமாக இருக்கும். போட் நெக் பிளவுஸுக்கு நெக் பீஸ் அவசியமில்லை. இயரிங்ஸ் மட்டும் கிராண்டாக தேர்வுசெய்து அணியலாம். டிரடிஷனல், டிரெண்டி என எந்த அவுட்ஃபிட்டுக்கும் மிக்ஸ் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆபீஸ் பயன்பாட்டுக்கு, ஸ்லீவ் மற்றும் கழுத்துப் பகுதியில் பைப்பிங் செய்துகொள்ளலாம். டிரடிசனலான பட்டுப்புடவைக்கு எனில், ஸ்லீவில் மெஷின் எம்பிராய்டரி செய்துகொள்ளலாம். டிரெண்டியான காட்டன் புடவைக்கு, சிங்கிள் ஃப்ளீட்டும், பட்டுப்புடவைகளுக்கு மல்டிபிள் ஃப்ளீட்டும் தேர்வுசெய்யலாம். பிரின்சஸ் கட், பேக் ஓப்பன் தேர்வுசெய்தால் மட்டுமே நீட் லுக் கிடைக்கும்.

போட் நெக்

பீட்டர் பேன் (Peter pan)

காலரில் சிறிய ஃப்ரில் போன்ற அமைப்புடன் வடிவமைக்கப்படுவது, பீட்டர் பேன் பிளவுஸ்கள். நெட்டட், காட்டன், சிந்தடிக் போன்ற மெட்டீரியலில் ஃப்ளோரல் டிசைன்கள் பொறிக்கப்பட்ட புடவைகளுக்கு இவ்வகையான பிளவுஸ்களை மேட்ச் செய்தால், போல்டு லுக்கில் கலக்கலாம். உயரம் மற்றும் ஒல்லியான பெண்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். ஷார்ட் ஸ்லீவ்தான் இவ்வகை பிளவுஸ்க்குப் பொருத்தமான தேர்வு. நெக் பீஸ் தவிர்ப்பது நல்லது. டிரடிஷனல், டிரெண்டி என எந்த அவுட்ஃபுட்டுக்கும் இதனை மேட்ச் செய்யலாம். டிரெண்டி லுக் வேண்டும் எனில், ஸ்லீவில் பேட்டர்ன் வொர்க் செய்துகொள்ளலாம். டிரடிஷனல் லுக் வேண்டும் எனில், பிளைன் பட்டுப்புடவைகளை மேட்ச் செய்யலாம். எல்போ ஸ்லீவ்வைத்து பீட்டர் பேன் பிளவுஸ்கள் வடிவமைத்தால், விண்டேஜ் ரெட்ரோ லுக்கில் கலக்கலாம். மல்டிபிள் ஃப்ளீட் வைத்து புடவை கட்டினால்தான் பிளவுஸ் டிசைன் ஹைலைட் ஆகும். பிரின்சஸ் கட், பேக் ஓப்பன்தான் பொருத்தமாக இருக்கும். ரிஷப்சன் போன்ற நிகழ்வுகளுக்கு அணிந்துசென்றால், நியூ லுக்கில் கலக்கலாம்.

குயின் அனே (Queen anne)

பருமனான உடல்வாகும் அகன்ற முதுகும் உடையப் பெண்களுக்கு பர்ஃபெக்ட் மேட்ச்சாக இருப்பது குயின் அனே. மெகா ஸ்லீவ், நெட்டட் ஸ்லீவில் பிளவுஸ்களை வடிவமைத்துக்கொள்ளலாம். நெட் சாரிஸ்களுக்குப் பொருத்தமாக இருக்கும். ஸ்லீவில் மட்டும் பேட்டர்ன் வொர்க் செய்தால், டிரெண்டி லுக்கில் கலக்கலாம். டிரடிசனல் லுக் வேண்டும் எனில், ஸ்லீவில் ஆரி ஒர்க் செய்துகொள்ளலாம். சிம்பிளான நெக்லஸ், சிங்கிள் ஃப்ளீட் புடவை போன்றவை சிறப்பான தேர்வாக இருக்கும். பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்குத்தான் இது பொருத்தமாக இருக்கும்.

கவுல் (cowl)

கழுத்து பகுதியிலிருந்து லேயர் லேயராக நெட் மெட்டீரியலிலோ, டிஸ்யூ மெட்டீரியலிலோ ஃப்ரீல் போன்று வடிவமைத்துக்கொள்வதே கவுல் பிளவுஸ்கள். மீடியம் மற்றும் அதிக எடையுள்ள பெண்களுக்குப் பொருத்தமாக இது இருக்கும். டிசைனர் புடவைகளுக்கும் நெட்டட் புடவைகளுக்கும் சரியான தேர்வு. ரஃவுல் ஸ்லீவ் அல்லது ஸ்லீவ்லஸ் என வடிவமைத்துக்கொள்ளலாம். இயரிங்ஸ் மட்டும் அணிந்துகொள்ளலாம்.

ஹை காலர் (High collar)

ஹை காலரைப் பொருத்தவரை, பிரின்டட் மெட்டீரியல் வடிவமைத்தால் மட்டுமே நீட் லுக்கில் இருக்கும். டிரடிசனல், டிசைனர் என எந்தப் புடவைக்கும் இந்த லுக் சரியான தேர்வாக இருக்கும். நார்மல் ஸ்லீவில் வடிவமைக்கலாம். உடல் பருமனான பெண்களுக்கு நீட் லுக் கொடுக்கும். லினன் அல்லது ஷிபான் புடவைகள் அணிந்து, சிங்கிள் ஃப்ளீட்வைத்து புடவை கட்டலாம். ஒல்லியான பெண்கள் ஹை காலர் வைக்க விரும்பினால், சில்க் அல்லது ஜூட் புடவைகளைத் தேர்வுசெய்யவும். புரபசனல் லுக் வேண்டுபவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

க்ளோஸ் நெக்

க்ளோஸ் நெக்

ஒல்லியான பெண்கள், க்ளோஸ் நெக்கில் எல்போ ஸ்லீவ்வைத்து, பிளவுஸ்களை வடிவமைத்தால் நீட்டாக இருக்கும். ஜூட் சேலைகளுடன் மிக்ஸ் மேட்ச் செய்யலாம். டிரடிஷனல் லுக் வேண்டும் எனில்,  பட்டுப்புடவை தேர்வுசெய்து, மல்டிபிள் ப்ளீட்வைத்து கட்டலாம். டிரெண்டி எனில், சிங்கிள் ஃப்ளீட்டே நீட் லுக் கொடுக்கும். சிம்பிளான சோக்கர் சிறந்தத் தேர்வு.

டீப் நெக் (Deep neck)

பருமனாக இருக்கும் பெண்கள், ஸ்லீவ் ரஃபில் டிசைனில் வடிவமைத்து டிரடிசனல் புடவையுடன் மிக்ஸ் மேட்ச் செய்தால், ரெட்ரோ லுக் கொடுக்கும். கட்டோரி கட்டிங் (katori cuttin) மட்டுமே பொருத்தமாக இருக்கும். எல்லா வகையான நகைகளும் இதற்கு சூட் ஆகும். எல்லா நிகழ்வுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். காட்டன், சிந்தடிக் புடவைகள் எனில், பிளவுஸின் கை மற்றும் முதுகுப் பகுதியில் பைப்பிங் வைத்தால் டிரெண்டியாக இருக்கும். பட்டுப்புடவை எனில், ஆரி ஓர்க் செய்துகொள்ளலாம். ஜூட் புடவைகளுக்கு மேட்ச் செய்தால், பிளைன் பிளவுஸ்தான் அழகாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!