Published:Updated:

போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா?

போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா?
பிரீமியம் ஸ்டோரி
போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா?

ர.சீனிவாசன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா?

ர.சீனிவாசன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா?
பிரீமியம் ஸ்டோரி
போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா?

ணையம் நம்மை எப்படியெல்லாம் இணைக்கிறது என்று கேள்வி கேட்டால் படம் வரைந்து பாகங்கள் குறிக்கும் அளவிற்கு நமக்கு  விவரங்கள் தெரியும். தோராயமாக விளக்கிவிட்டு, இதற்கெல்லாம் மென்பொருள் பொறியியல் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். உண்மைதான். ஆனால், மென்பொருள் பொறியியலிலும் கரைகண்டவர்களுக்குக்கூடத் தெரியாத இணையத் தகிடுதிட்டங்கள் நிறைய. அவை, அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவதுண்டு. அப்படி ஒரு சர்ச்சையான தியரிதான் இந்த ‘உளவாளி ஃபேஸ்புக் ஆப்’ கூற்றும்.

இதுவும் மேலே கூறிய மேஜிக்கைப் போலத்தான். யூட்யூப் பயனாளி நெவில் என்பவருக்கு ஒரு சந்தேகம். தனது ஸ்மார் ட்போனில் ஒரு பரிசோதனையை மேற்கொள்ள... அவருக்கு மிகப்பெரிய ஷாக். அப்படியே அதை யூட்யூபில் வீடியோவாகப் போட, செம வைரல் ஹிட். நெட்டிசன்கள் அனைவரும் வெலவெலத்துப்போய் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நபரின் அப்சர்வேஷன் இதுதான். 

நம்  ஸ்மார்ட்போன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக்கின் அதிகாரபூர்வ ஆப் ஒரு ரகசிய உளவாளி. அந்த ஆப்பை நாம் இன்ஸ்டால் செய்யும்போதே ஒரு சில விஷயங்களைத் தன்னிச்சையாகச் செய்துகொள்ள அது அனுமதி கேட்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று, நம் போனின் மைக்ரோபோனைப் பயன்படுத்துவது. நாம்தான் ‘டேர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ்’ என்பதைப் பார்த்தவுடனேயே ‘நெக்ஸ்ட்’ பட்டனை ஐந்து முறை அழுத்தும் ஆட்கள் ஆயிற்றே?

போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா?

``இன்ஸ்டால் செய்தவுடன் நம் போனின் மைக்கில் நாம் பேசும் ஒவ்வொரு விஷயத்தையும் ஃபேஸ்புக் ஆப் உள்வாங்கிக் கொள்கிறது. அதாவது, நாம் பேசும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் அது கண்காணிக்கிறது. அதிலிருந்து முக்கியமான கீ-வேர்ட்ஸ் எனப்படும் தரவுச் சொற்களை இனம் கண்டறிந்து பதிவு செய்துகொள்கிறது. இப்படிப் பதிவு செய்த சொற்களுக்கு ஏற்ற அல்லது இணையான விளம்பரங்களை இணையம் முழுவதும் நீங்கள் பார்க்கும் வெப்சைட்களில், மேற்கூறிய வழியில் வெளியிடுகிறது” என்று கிலியூட்டுகிறார் நெவில்.

அவர் செய்த அந்தப் பரிசோதனையில், தன் மனைவியின் போனில், கேட் ஃபுட் (Cat Food) என்ற வார்த்தையை ஒரு தொலைபேசி அழைப்பில் பேசும்போது அடிக்கடி பயன்படுத்துகிறார். பின்னர், ஃபேஸ்புக் சென்றபோது கேட் ஃபுட் குறித்த விளம்பரங்கள் தட்டுப்பட்டதாகக் காட்டியுள்ளார். அவ்வகை விளம்பரங்கள் இரண்டு நாள்களுக்குப் பின்னர் தோன்றியதாகவும், யதேச்சையாகவே இருந்தாலும், சம்பந்தமே இல்லாமல் கேட் ஃபுட் குறித்த விளம்பரங்கள் மட்டும் தனக்கு ஏன் வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஃபேஸ்புக் ஆப் இன்ஸ்டால் செய்யும்போது அது கேட்கும் அனுமதி நம் போனின் மைக்ரோபோனைப் பயன்படுத்துவதற்காகத்தான். ஆனால், அது நீங்கள் நினைப்பதுபோல் எப்போதும் ஒட்டுக்கேட்பதற்கு இல்லை. ஃபேஸ்புக் ஆப் மூலம், நீங்கள் ஒரு வீடியோ எடுக்கிறீர்கள் என்றால், அப்போது அந்த ஆப் மைக்கைப் பயன்படுத்தித்தானே ஆக வேண்டும்.’’ என்பது இணையப் பயன்பாட்டாளர்கள் பலரும் எழுப்பியிருக்கும் வாதம்.
 
  என்ன சொல்கிறது ஃபேஸ்புக்?

 ``ஃபேஸ்புக் ஆப் ஒட்டுக்கேட்கிறது’’ என்று சொல்வதெல்லாம் அபத்தம் என்கிறார் அதன் விளம்பரப் பிரிவுத் தலைவர் ராப் கோல்ட்மேன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் ஒருபோதும், மைக்ரோபோன் கொண்டு யார் பேசுவதையும் கேட்டதில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.

உண்மையிலேயே ஃபேஸ்புக் ஒட்டுக்கேட்பதில்லை என்றால் அதற்கு இதுபோல் ஒற்றை வரி பதில் இல்லாமல் முழுமையான விளக்கம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள் இணைய ஆர்வலர்கள்.

இலவசமாகச் சேவைகள் வழங்கும் அனைத்து இணையச் சேவைகளும் விளம்பரங்கள் மூலம்தான் பணம் பார்க்க முடியும். அதற்கு அவர்களுக்குத் தேவை, நம்மைப் பற்றிய தகவல்கள். அதை எடுக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். அதை யாரும் மறுக்கமுடியாது என்பதே இணையம் சொல்லும் உண்மை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism