Published:Updated:

மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!

மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!
பிரீமியம் ஸ்டோரி
மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!

மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!

மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!

மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!

Published:Updated:
மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!
பிரீமியம் ஸ்டோரி
மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!

‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!’ என்று மழையைப் போற்றி இளங்கோவடிகள் வாழ்த்தியதும்,

மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!

‘வான் சிறப்பு’ என்று தனி அத்தியாயத்தின் மூலம் மழையைச் சிறப்பித்து வான்புகழ் வள்ளுவன் எழுதியதும் நம் தமிழ் மரபு. ஆனால் இப்போதோ, மழை என்ற இரண்டெழுத்துச் சொல்லைக் கேட்டாலே சென்னைவாசிகளுக்கு உதறல் ஆரம்பித்துவிடுகிறது.

 2015 சென்னைப் பெருவெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பும் அது ஏற்படுத்திச் சென்ற தாக்கமும் சென்னை மக்களின் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. உண்மையில், அந்த வெள்ளத்துக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல, அன்றைய அரசும்தான். செம்பரம்பாக்கம் ஏரியை முழுவதுமாக நிரம்பவிட்டுக் கடைசிநேரத்தில் திறந்துவிட்டதும், நிவாரணப் பணிகளை உடனடியாகத் தொடங்காததும், வெள்ளப் பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்த்ததும், மக்களின் தன்னார்வ முயற்சிகளை ஸ்டிக்கர் ஒட்டிக் கேவலப்படுத்தியதும்தான் கடந்தகால `சாதனை’ நிகழ்வுகள். ஆனால், கடந்தகாலத்தின் கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அரசு, பல முன்னேற்பாடுகளைச் செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

மழை தொடங்குவதற்கு முன்பாக மண்டலவாரியாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிடுகிறார்கள்.  ‘`தகுந்த முன்னெச்சரிக்கையின்றி ஏரிகள் திறந்துவிடப்படாது” என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர். தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 23,325 முதல்நிலை மீட்பாளர்களைக் கொண்ட 4,399 முதல்நிலை மீட்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கத்தகுந்தவை; பாராட்டுக்குரியவை. அதேநேரத்தில், பெருமழையையும் வெள்ளத்தையும் எப்போதும் ‘போர்க்கால அடிப்படையில்’ மட்டுமே அணுகுவது சரியான செயல்பாடாகாது. ‘போர்க்கால நடவடிக்கை’ என்பது நாம் எதிர்பாராத சூழல் ஏற்படும்போது தேவைப்படுவது. ஆனால், சென்னையில் மழை பெய்தாலே மழைநீர் தேங்கி வெள்ளமாகிவிடுகிறது என்பதும், அதற்கான காரணங்கள் நமக்குத் திட்டவட்டமாகத் தெரிந்திருக்கும்போது, அவற்றிற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுப்பதுதான் சிறந்த அரசுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் சான்றாக அமையும்.

வெள்ளம் வந்தாலும் ‘வரலாறு காணாத வெள்ளம்’, வறட்சி வந்தாலும் ‘வரலாறு காணாத வறட்சி’ என்றால், கோளாறு வரலாற்றிலோ இயற்கையிலோ இல்லை; அரசிடமும் மக்களிடமும்தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.

அரசுக்கு அறிவுரை கூறுவதோடு முடிந்துவிடுவதோ முடங்கிவிடுவதோ அறமல்ல. நாமும் மழைப்பாதிப்புகளுக்கான காரணங்களை அறிந்து அதைச் சரிசெய்யும் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது, வடிகால் வசதிகளுக்கு இடம் தராமல் வளைத்து வளைத்துக் கட்டடங்கள் எழுப்புவது, குப்பைகளை அவற்றிற்குரிய இடத்தில் போடாமல் தெருவில் போடுவது, பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தித் தூக்கியெறிவது, மழைநீரைச் சேகரிக்காமல் வீணாக்குவது... இவை எல்லாமே வெள்ளம் உருவாவதற்கான காரணங்கள். இவற்றையெல்லாம் மக்கள் தவிர்த்துவிட்டால், அரசு தடுத்துவிட்டால் மீண்டும் நாம் மகிழ்ச்சியுடன் கூறலாம்... ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism