Published:Updated:

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

பி.ஆரோக்கியவேல்

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

பி.ஆரோக்கியவேல்

Published:Updated:
மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடி, ‘மாற்றம்’ என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லித்தான் மக்களிடம் வாக்குக் கேட்டார். அவர் சொல்லியபடி மாற்றத்துக்காக நாடு வாக்களித்தது. பாஜக தலைமையிலான கூட்டணி  336 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 282 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டி பெற்றது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத வேறு எந்தக் கட்சிக்கும்  இப்படி ஒரு தனிப்பெரும் வெற்றியை மக்கள் கொடுத்ததேயில்லை.

`வறுமை, வேலைவாய்ப்பின்மை, ஊழல்... என்று நாட்டைப் பீடித்திருந்த அனைத்துப் பிணிகளையும் மோடி விரட்டி அடிப்பார், நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வார்’ என்று பெரும்பான்மை வாக்காளர்கள், இளைஞர்கள், தொழில்செய்வோர்... என்று பலரும் மோடியின் மீது அபராமான நம்பிக்கை கொண்டார்கள். மோடி ஆட்சிக்கட்டிலில் ஏறி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி சொன்னதைச் செய்தாரா?

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

ஊழல் என்னும் பூதம்!

2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல்... என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப்போல மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை.. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை மோடி தலைமையிலான அரசுக்கு இப்படி ஒரு பெருமை இருந்தது. ஆனால், அமித்ஷா மகனின் நிறுவனம் தொடர்பான புகார்கள் தற்போது வெளிப்பட்டிருப்பதால், அந்த நற்பெயர் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

காரணம் - ஊழல் ஒழிப்புதான் மோடியின் யு.எஸ்.பி. அதாவது தனி அடையாளம். அந்த அடையாளத்தை அவர் இழக்ககூடாது என்பதில் அவர் குறியாக இருக்கிறார் என்பதற்கு இன்னொரு உதாரணம் அரசுக்கு ஊழியர்களை வேலைக்கு எடுக்க மோடி கொண்டுவந்திருக்கும் சீர்திருத்தங்கள்.

ஊழலை வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஏற்றுக்கொள்ளும் அளவுக்குப் போய்விட்ட அதிகார வர்க்கத்தை உடனடியாக மாற்றுவது சுலபமல்ல என்பதால்... குரூப் சி, டி மற்றும் பி வேலைகளுக்கு நேர்முகத்தேர்வை மோடியின் அரசு ரத்து செய்திருப்பது பரவலாகப் பாராட்டப் பட்டிருக்கிறது.

மன்மோகன் சிங் ஆட்சி, தி.மு.க போன்ற கூட்டணிக் கட்சிகளின் பலத்தை நம்பி இருந்தது. அதனால் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் என்ன முறைகேடு  செய்தாலும், மன்மோகன் சிங் தட்டிக் கேட்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது.  ஒவ்வொரு அமைச்சருமே அந்தந்தத் துறையின் பிரதம மந்திரி மாதிரி சர்வ அதிகாரத்தோடு செயல்பட்டார். மோடியின் ஆட்சியோ அதற்கு நேரெதிர்.

தன் அனுமதியின்றி எந்த அமைச்சரும் பெரிய  முடிவுகளை எடுத்துவிடமுடியாத அளவுக்கு மோடி ஆட்சியை  முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொருளாதாரம் வளர்கிறதா?

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றைப் பேசுவதற்கு முன்பு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பணவீக்கம் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறை பற்றிச் சொல்லியாகவேண்டும்.

ஜிடிபி, ஜிஎன்பி என்று பொருளாதாரத்தில் இருக்கும் எல்லாக் குறியீடுகளையும் கடைவீதிக்குச் செல்லக்கூடிய ஒரு சாதாரணக் குடிமகன் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் விலைவாசி மட்டும்தான்.  Consumer price inflation எனப்படும் பணவீக்கம் 3 சதவிகிதத்தைத் தாண்டவில்லை என்பது சந்தோஷச் செய்தி.

‘அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது’ என்பதுதான் நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த பொருளாதாரப் பாடம். ஆனால், கடன் வாங்கிச் செலவு செய்வது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிட்டுச் சமாளிப்பது என்று நமது நாடு பழகிவிட்டது. பழக்கத்தை மாற்றுவது மிக மிகக் கடினம் என்றாலும் மோடி பதவியேற்றதற்குப் பிறகு நிதிப்பற்றாக்குறை 3.2 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 7.8 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்ந்து, காங்கிரஸ் ஆட்சியிலிருந்து விலகிய போது 4.9 சதவிகிதமாகக் குறைந்திருந்தது. மோடி சர்க்காரின் இந்தச் சாதனைக்கு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியும் ஒரு முக்கியக் காரணம்!

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?
மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

பெருகியதா வேலைவாய்ப்பு?

`ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்று சொல்லித்தான் 2014-ம் ஆண்டு இளைஞர்களிடம் வாக்குக் கேட்டார் மோடி. காங்கிரஸ் ஆட்சியை விட்டு இறங்கியபோது, அதாவது 2013-ம் ஆண்டு நாட்டில் 4.19 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை தகவல்களின்படி, 2015-ல் வேலைவாய்ப்பு 1.55 லட்சமாகக் குறைந்து, 2016-ல்  2.31 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்!

இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற மூன்றரை ஆண்டுகளில் மோடி 32  முறை வெளிநாட்டுப் பயணம் செய்துள்ளார். பயணம் செய்த நாடுகளோ அரை சதத்தைத் தாண்டுகின்றன. மன்மோகன் சிங்கின் முதல் மூன்றரை ஆண்டு வெளிநாட்டுப் பயண எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு.

FDI எனப்படும் நேரடி அந்நிய முதலீடு மன்மோகன் சிங் ஆட்சியின்போது, அதாவது 2013-ம் ஆண்டு 2,276 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது மோடியின் ஆட்சிக்காலத்தில், அதாவது 2016-ம் ஆண்டு  4,073 லட்சம் கோடியாக  உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும் ஒரு முக்கியக் காரணம். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,  காஷ்மீரில் தீவிரவாதத்தை அடக்கிவிடுவோம்’ என்றார் மோடி. ஆனால், அது இன்று வரை முடியவில்லை. அருணாசலப் பிரதேசம் துவங்கி, ஜெய்ஷே முகமது வரை சீனாவின் குடைச்சல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இந்திய மீனவர்களின் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலும் இன்றுவரை தொடர்கிறது.

வரிகளால் இழப்பா?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் கட்டுப்படுத்துவதுடன், தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று சொன்னது மோடி தலைமையிலான அரசு. ஆனால், `செல்லாது’ என்று அரசு அறிவித்த 99 சதவிகித நோட்டுகள் வங்கிகளுக்கே திரும்ப வந்துவிட்டன.

ஜிஎஸ்டியை ‘கப்பர் சிங் டேக்ஸ்’ என்று ராகுல் காந்தி அடிக்கும் கிண்டலை வெறும் அரசியல் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், கப்பர் சிங் என்பது `ஷோலே’ படத்தின் வில்லன் பெயர். நாம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லைப் பார்த்தால், கூட இன்னும் ஒருவர் சேர்ந்து சாப்பிட்டாரோ என்கிற சந்தேகம் சாமன்யனுக்கும் வருகிறது. சினிமாவுக்குப் போனாலும் அதே கதைதான்.  ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்று இருந்தால் வெளிநாட்டிலிருந்து தொழில் செய்ய வருகிறவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் ஆரம்பகாலச் சங்கடங்கள் இருந்தபோதும் தொழில் உலகம் இதை மெச்சுகின்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் `இதில் இருக்கும் சங்கடங்களைக் களைவோம்’ என்று மோடி திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துவருகிறார்.

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

`தொழில் செய்ய உகந்த நாடுகள்’ பட்டியலில் 42 நாடுகளைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு 100வது இடத்தை இப்போது பிடித்திருக்கிறது இந்தியா. இந்தப் பட்டியலைத் தயாரித்த உலக வங்கியின் அதிகாரிகளை அழைத்துவந்து மோடி ஒரு வெற்றிவிழாவே கொண்டாடிவிட்டார். ஆனால், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் இந்த 100வது இடம் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களை மட்டுமே கணக்கில் கொண்டு கொடுக்கப்பட்டவை.

ஒன் மேன் ஆர்மி?

மன்மோகன் சிங் காலத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதால்.. அமைச்சரவைக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் வரும். பிரதமரே தலையிட்டுச் சமாதானம் செய்தாலும் அமைச்சர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டார்கள். அதனால் பிரதமராக மன்மோகன் சிங் துணிச்சலாகச் செயல்படமுடியவில்லை. ஆனால், மோடியின் எதிரில் அமைச்சர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட கருத்துகளைச் சொல்வதற்கு வாய்ப்பேயில்லை. அப்படி அவர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் மோடியை சந்திக்கச் செல்வதற்கு முன்பே அவர்கள் அதைத் தங்களுக்குள் பேசித்தீர்த்துக்கொள்கிறார்கள் என்பதுதான் டெல்லி சொல்லும் உண்மை.

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?
மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

தொடரும் தேர்தல் வெற்றிகள்!

மோடி எந்த அளவுக்குத் தன்னை நம்புகிறாரோ, அதே அளவுக்கு நாட்டு மக்கள் அவர்மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த மூன்றரை ஆண்டுக் காலத்தில் நடைபெற்ற கிட்டத்தட்ட எல்லா சட்டசபைத் தேர்தல்களிலும் வாக்காளர்களின் ஆதரவை மோடி தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். பல மாநிலங்களில் அவருக்கு ஆதரவு பெருகியும் இருக்கிறது. மராட்டியம், ஹரியானா, ஜார்கண்ட், அசாம், உத்ரகாண்ட்... என அனைத்துக்கும் மேலாக உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் வெற்றிபெற்றது பா.ஜ.க. மோடி அரசின் மீதான மக்களின் நம்பிக்கை உயர்ந்திருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் வெற்றிகளே சாட்சி. நிலையான ஆட்சி இருப்பதால் உலக அரங்கில் அது நமக்குச் சாதகமான நிலையை உருவாக்கியிருக்கிறது.

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

தொகுப்பு: ச.ஸ்ரீராம்

இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

அதேநேரம், கோவா சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், காங்கிரஸ் சுதாரிப்பதற்குள் சில அரசியல் சித்துவேலைகளைக் காட்டி அங்கே ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.  காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்த அருணாசலப்பிரதேசத்தில் அந்தக் கட்சியை உடைத்து,  காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் பீகாரில் நடைபெற்றுவந்த நிதிஷ்குமார் - லாலுபிரசாத் கூட்டணியை உடைத்து நிதிஷ்குமாரைத் தன் பக்கம் இழுத்து அங்கேயும் பாஜக தன் அதிகாரத்தை நிறுவியிருக்கிறது. ஜெயலலிதா இல்லாத தமிழ்நாட்டின் அரசியலில் பா.ஜ.க தன் அதிகாரத்தை எப்படி நிலைநிறுத்தியிருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

மோடியின் முழக்கம் வளர்ச்சிதானே ஒழிய, கிளர்ச்சியல்ல. யாரும், எந்த ஒரு பிரிவினருக்கு எதிராகவும் கிளர்ச்சியில் ஈடுபட மோடி அனுமதிக்கக்கூடாது.  நாட்டின் 130 கோடி மக்களின் தலையெழுத்தை மாற்றி எழுதும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்பதை மோடி நிச்சயம் உணர்ந்திருக்கிறார் என்று நம்புவோம்.

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

Source: Ministry of Statistics and Programme Implementation

உற்பத்திக் குறியீடு:

GDP  எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்திக் குறியீடு, மன்மோகன் சிங் ஆட்சியை விட்டு இறங்கியபோது 8.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இது இப்போது 5.7 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இந்தக் குறியீட்டை அளவிடும் முறையிலும் இப்போது மாற்றம் செய்துவிட்டதால் உண்மையான ஜிடிபி அரசு சொல்லியிருப்பதைவிடக் குறைவுதான் என்று குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

மோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

மின்சாரம்

மன்மோகன் சிங் ஆட்சியை விட்டுச் சென்றபோது நாட்டில் மின் உற்பத்தித் திறன் 2,43,029 மெகா வாட்டாக இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அதாவது 2016-ம் ஆண்டு இது 3,19,606 மெகா வாட்டாக உயர்ந்திருக்கிறது. சேமிக்கும் ஒவ்வொரு மெகாவாட் மின்சாரமும் உற்பத்தியாகும் மின்சாரத்துக்குச் சமம் என்பார்கள். இந்த அடிப்படையில், மோடி தலைமையிலான அரசு செயல்படுத்திவரும் ‘உதய்’ திட்டம் மூலமாக வழங்கப்படும் எல்இடி பல்புகளும் மற்ற பிற திட்டங்களும் மின் சேமிப்புக்கு உதவிபுரிந்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism