வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (06/09/2018)

கடைசி தொடர்பு:14:59 (06/09/2018)

விற்பனைக்கு வந்துள்ளது லிமிட்டட் எடிஷன் நெக்ஸான் Kraz மற்றும் Kraz+

நெக்ஸானின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நெக்ஸான் லிமிடட் எடிஷன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

நெக்ஸான் காரின் முதலாம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக டாடா மோட்டார்ஸ் நெக்ஸானில் Kraz மற்றும் Kraz+ எனும் இரண்டு புதிய வேரியன்டுகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. நெக்ஸான் Xm மற்றும் Xt வேரியன்டுகள் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் சிறிய ஸ்டைல் மாறுதல்களுடன் சில வசதிகளும் இணைந்த லிமிடட் எடிஷன் மாடலாக விற்பனையாகப்போகிறது.

kraz

வெளிப்புறத்தில் புதிய டூயல் டோன் பெயின்ட் வருகிறது. வெள்ளி நிற ரூஃப்; கறுப்பு நிற பாடி; மிரர், அலாய் மற்றும் முன்பக்க க்ரில்லின் சில இடங்களில் நியான் பச்சை நிறத்திலும் ஸ்டைல் செய்யப்பட்டுள்ளது. காரின் உள்ளே சீட் மற்றும் ஏசி வென்டுகளிலும் நியான் பச்சை நிறம் உள்ளது. டேஷ்போர்டு, கதவு போன்ற மற்ற பாகங்கள் எல்லாம் வழக்கம்போல பியானோ பிளாக் நிறத்தில்தான் இருக்கின்றன. 

 XM வேரியன்டுடன் ஒப்பிடும்போது நியான் Kraz காரில் 4 ஸ்பீக்கர் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் கன்ட்ரோல், எலக்ட்ரிக் கன்ட்ரோல் மிரர்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகள் வருகின்றன. Kraz+ காரில் ரூஃப்  ரெயில், பவர்டு மிரர், கூல்டு கியவ் பாக்ஸ், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ரியர் ஏசி வென்டுகள் வருகின்றன. 

interior

மெக்கானிக்கலாக இரண்டு கார்களுக்கு இடையில் வித்தியாசம் எதுவும் கிடையாது. 110 bhp 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 110 bhp 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் இந்த கார்களில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கூட்டணி. ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் இல்லை. நெக்ஸான் Kraz, ரூ.7.16-7.78 லட்சம் விலையிலும், ப்ளஸ் வேரியன்ட் ரூ.8.09-8.65 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.