‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எனக் களத்தில் குதித்துவிட்டார் சித்தார்த். `ஜிகர்தண்டா’வில் நடித்ததை நிஜமாக்கப்போகிறார். எவ்வளவு மெனக்கெட்டாலும் ஹிட் நடிகர்களின் பட்டியலில் வர முடியாத வருத்தத்தில் இருக்கும் அவர் செம ஸ்க்ரிப்ட் ஒன்று வைத்திருக்கிறாராம். தன் ‘டைரக்டர்ஸ்’ நண்பர்களுடன் கதைக்கு பாலிஷ் போடும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் சித்தார்த். ஹூம்ம்ம்... கிளப்புங்கள்!

கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் தீபிகா படுகோன். டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட `பத்மாவதி’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற எதிர்ப்புகள் வலுக்க, தீபிகாவின் `மூக்கை வெட்டுவோம்’, `தலையை வெட்டுவோம்’ எனச் சிலர் கொந்தளிக்க, தீபிகா செம அப்செட். ``படத்தில் ராணி பத்மாவதியை எந்த இடத்திலும் தவறாகச் சித்திரிக்கவில்லை. ஒரு நடிகையாக 2 ஆண்டுகள் இந்தப் படத்துக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். இதுபோன்ற அறிவற்ற எதிர்ப்புகளைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. அதே சமயம் வேடிக்கையாகவும் இருக்கிறது’’ எனப் புலம்பியிருக்கிறார் தீப்ஸ். கூல் கண்மணி!

ஆடுகளத்தைத் தாண்டியும் விளாசியிருக்கிறார் கேப்டன் விராட் கோலி. தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து விராட் கோலி ஃபவுண்டேஷன் சார்பில் முதன்முறையாக, `இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்’ விருது வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த விழாவில் பி.டி. உஷா முதல் பி.வி. சிந்து வரை அத்தனை ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களும் ஆஜர். கோபிசந்த் தலைமையிலான ஜூரி, குழு விளையாட்டின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுத்தது ரவிச்சந்திரன் அஷ்வினை! பெண்கள் பிரிவில் அந்த விருதை வென்றவர் மிதாலி ராஜ். எந்தவொரு விருதுக்கும் தன் பெயரைப் பரிந்துரைக்க வேண்டாம் என ஜென்டில் ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார் விராட். அக்ரசிவ் கோலியின் மற்றொரு முகத்தைப் பார்த்து `சூப்பர்ல’ எனப் பாராட்டுகிறது விளையாட்டு உலகம். கோலி ராக்ஸ்!

அம்பானி சகோதரர்களின் குடும்பத்தில் ஒரு பக்கம் புயலும், இன்னொரு பக்கம் தென்றலும் வீசிக்கொண்டிருக்கிறது. சந்தையில் நிலவும் கடுமையான போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் வாய்ஸ்கால் வசதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். இன்னொரு பக்கமோ, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, ஆசியாவின் பணக்காரக்குடும்பங்களின் பட்டியலில், ‘ஆசியாவின் நம்பர் 1 பணக்காரக்குடும்பம்’ என்ற அந்தஸ்தை எட்டிப்பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. காரணம், ஜியோ. கடந்த வருடம் 19 பில்லியன் டாலராக இருந்த அம்பானி குடும்பத்தின் மதிப்பு, இந்த வருடம் 44.8 பில்லியன் டாலர். அம்பானி அலப்பறைகள்!