Published:Updated:

சபாக்களில் டிக்கெட் விலை குறையுமா?

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சபாக்களில் டிக்கெட் விலை குறையுமா?
சபாக்களில் டிக்கெட் விலை குறையுமா?

வீயெஸ்வி, படம்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

சென்னையில், இசை உலகம் சந்தோஷக் கடலில் நீச்சலடித்துக்கொண்டிருக்கிறது! காரணம், ‘க்ரியேட்டிவ் நகரம்’ பட்டியலில் சென்னைக்கும் இடமளித்து கெளரவித்திருக்கிறது யுனெஸ்கோ. வாரணாசியும், ஜெய்ப்பூரும் படைப்பாக்க முத்திரைபெற்ற மற்ற இரண்டு இந்திய நகரங்கள்.  சென்னையைப் பொறுத்தவரை, இசையின் தலைநகரமாகச் சென்னை இருப்பதற்காக இந்த அங்கீகாரம். இனி, ‘என்ன பெரிய புடலங்கா இசை விழா?’ என்று யாரும் ஏளனம் பேச மாட்டார்கள்!

சபாக்களில் டிக்கெட் விலை குறையுமா?

இசைத் துறைக்குச் சென்னை கொடுத்து வரும் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக ஒரு கோப்பு (Dossier) தயாரித்து, பரிசீலனைக்காக யுனெஸ்கோவுக்கு அனுப்ப வேண்டும் என்பது ஆரம்பப் புள்ளி.

மத்திய கலாசார அமைச்சகம் இதற்காக சங்கீத நாடக அகாடமியை முடுக்கிவிட, அவர்கள் சென்னையில் டாக்டர் பப்பு வேணுகோபாலராவைத் தொடர்பு கொண்டு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். நான்கு நாள் அவகாசத்தில் அத்தனையையும் தயார் செய்ய வேண்டும். பாரதிய வித்யா பவன் டைரக்டர் கே.என். ராமசாமியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. சபா நிர்வாகிகள் சிலரும், கலைஞர்களில் ஒரு சிலரும் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

தயாரிக்கப்பட்ட விவரங்களில், டிசம்பரில் எத்தனை சபாக்களில் எத்தனை பேர் பங்கு பெறுகிறார்கள், உள்நாடு வெளிநாடுகளிலிருந்து வந்து எத்தனை ரசிகர்கள் இசையைக் கேட்கிறார்கள், சபாக்களுக்கு வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு உள்ளிட்ட பல புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டன. கர்னாடக இசையைத் தவிர, நகர்ப்புறம், கிராமப்புறங்களிலுள்ள மற்ற இசை வடிவங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பற்றியும் கணக்கு தரப்பட்டிருக்கிறது.

சரி, இந்த அங்கீகாரம் மூலமாகக் கிடைக்கும் லாபம் என்ன? தகுதியின் அடிப்படையில் நான்கு வருடங்களுக்கு யுனெஸ்கோ மானியம் வழங்குமாம். “இதனால், சபாக்களில் டிக்கெட் விலை குறையுமா?” என்று கேட்கிறார் சாமானிய ரசிகர் ஒருவர்!

இதுமட்டும் பில்லியன் டாலர் கேள்வி!

பிராடிஜி!

ஒன்பது ராகங்களில் அமைந்த வர்ணத்தைப் பத்து வயதுச் சிறுவன் சாக்ஸபோனில் வாசித்ததைப் பார்க்கவும், கேட்கவும் பிரமிப்பாக இருந்தது. தொடர்ந்து, வாதாபி கணபதியைத் துரத்திவிட்டு, ‘எந்தரோ மகானு பாவுலு’ பாடலில் அவையோருக்கும் சேர்த்து சாக்ஸபோனில் சிறுவன் வணக்கம் சொன்னது க்யூட்! பெரிய அயிட்டமாக ஆபேரி. தியாகராஜரின் ‘நகுமோமு...’ பாடல். மாதிரிக்குக்கூட அபஸ்வரம் இல்லாமல், சாக்ஸபோனின் லிமிட் அறிந்து, தேவையான அளவு கமகங்கள் கொடுத்து அசத்திய சிறுவனின் பெயர் பிரவீண் பண்டிட்! பால் வடியும் முகம். விகல்பம் இல்லாத மெல்லிய புன்னகை.
முழு தேஜஸ்!

அப்பா குமாரசுவாமியும் சாக்ஸபோன் இசைப்பவர். கர்நாடகாவின் ஷிமோகாவைச் சேர்ந்த குடும்பம். மகனின் இசைக் காதலுக்கு உரம் சேர்க்க சென்னைக்குப் புலம் பெயர்ந்துவிட்டார்கள்.

சங்கீதக் கலாநிதி டி.வி. கோபாலகிருஷ்ணனின் ‘ஏராளமான சீடர்கள்’ பட்டியலில் நான்கு வருடங்களுக்கு முன் இணைந்திருக்கிறான் பிரவீண். வாய்ப்பாட்டுக்கு குரு சிபாரிசு செய்தும், பிடிவாதமாக சாக்ஸபோனைக் கையில் தூக்கிக்கொண்டுவிட்டான். கடந்த வெள்ளியன்று பாரதிய வித்யா பவன் அரங்கில் பிரவீண் வாசித்தது அவனுக்கு முதல் கச்சேரி. டிசம்பர் 4 அன்று பிரம்ம கான சபாவுக்காக இரண்டாவது கச்சேரி ‘புக்’ ஆகிவிட்டது!

அன்று, பிரவீணை வாழ்த்திப் பேசியவர்களில் ஒருவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா. இவர் கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வர்; இந்நாள் மேலவையில் எதிர்க்கட்சித் தலைவர். நல்லி குப்புசாமியின் தலைமையில் நந்தினி ரமணி, வி.வி.சுந்தரம், ராம் நாராயண் மற்றும் ‘டூயட்’ புகழ் கதிரி கோபால்நாத் ஆகியோர் பிரவீணை வாழ்த்த மேடையேறினார்கள்.

இதில் ஒரு பேஜாரும் உண்டு. வாழ்த்தியவர்கள் அனைவரும் தங்களை ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்துகொண்டதில்  மிஞ்சியது எரிச்சல் மட்டுமே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு