Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

னுஷுடன் நடித்த `எனை நோக்கி பாயும் தோட்டா’, `ஒருபக்க கதை’ என இரண்டு படங்கள் கமிட் ஆகி அதுவே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஏற்கெனவே பாலா இயக்கும் வர்மாவில் இவர்தான் ஹீரோயின் எனக் கிசுகிசுக்கிறார்கள். அதற்குள்ளாகவே இப்போது அடுத்த படத்தில் புக் ஆகியிருக்கிறார் மேகா ஆகாஷ். அதர்வா நடிக்கும் அடுத்த படத்தில் மேகாதான் ஹீரோயினாம்! மோஸ்ட் வான்டட்!

இன்பாக்ஸ்

சாய்னாவை சாம்பியனாக்கியவர் கோபிசந்த். அவர் வீட்டிலேயே ஒரு பாட்மின்டன் சாம்பியன் தயாராகிவிட்டார். அவர் மகள் காயத்ரி கோபிசந்த் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். காயத்ரிக்கு இப்போது வயது வெறும் 14தான். மகளின் வெற்றியைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவரை அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறார் கோபிசந்த்! புலிக்குப் பிறந்தது...!

ந்தியக் கப்பல்படையின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்  ஷுபாங்கி ஸ்வரூப். கப்பற்படைக் கமாண்டரின் மகளான ஷுபாங்கியைத்தவிர, அஸ்தா ஷேகல் என்ற டெல்லியைச் சேர்ந்த பெண்ணும், ரூபா என்ற பாண்டிச்சேரிப் பெண்ணும், சக்தி மாயா என்ற கேரளத்தைச் சேர்ந்தவரும் ஆபீஸர்களாகப் பயிற்சி பெற்றுப் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். வெல்கம் கேர்ள்ஸ்!

விரைவில் தமிழில் கால்பதிக்கவிருக்கிறது ‘கலர்ஸ் டிவி.’ இதற்காக ஆர்யாவை வைத்துப் புதுமையான சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தியில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் நடிகை ராக்கி சாவந்திற்கு சுயம்வரம் ஷோ நடத்தி மாப்பிள்ளை தேடியது போல. தமிழில் ஆர்யாவுக்கு மணமகள் தேடவிருக்கிறார்கள்! அப்பாடா... ஆர்யா செட்டில்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

டுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக் கால்பந்துப்போட்டியில் கலந்துகொள்ளும் 32 அணிகள் இறுதியாகிவிட்டன. இந்தமுறை கத்துக்குட்டி அணிகளான மொராக்கோ, பனாமா தகுதிபெற்றுள்ளன. 2010-ல் ரன்னர் அப், 2014-ல் மூன்றாவது இடம் பிடித்த நெதர்லாந்து தகுதிச்சுற்றின் இரண்டாம் சுற்றுக்குக்கூட முன்னேறவில்லை. ஆனால் பெரிய ஷாக், இத்தாலி தகுதி பெறமுடியாமல் வெளியேற்றப்பட்டதுதான்! இதையடுத்து அந்த அணியின் முன்னணி வீரர்கள் பலரும் அணியைவிட்டு விலகியுள்ளனர். இத்தாலிக்கே அல்வா கொடுத்துட்டாங்களே! 

வதார் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை ஒட்டுமொத்தமாக இயக்கிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். 2020-ல்தான் இரண்டாம்பாகம் ரிலீஸ். சமீபத்திய பேட்டி ஒன்றில் `ஏன் இவ்வளவு நீண்டநாள் படப்பிடிப்பு’ என கேமரூனிடம் கேட்டபோது, ``இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலுக்கடியில் நடப்பதுபோலப் படமாக்கப்படுவது பெரிய சவாலாக இருக்கிறது, இதற்காக நடிகர்களை ஆறுமாதங்கள் அன்டர்வாட்டரில் நடிப்பதற்காகப் பயிற்சி செய்யவைக்க வேண்டியிருந்தது. மோஷன் கேப்சரிலேயே புதுவிதத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் படமாக்கல் தாமதமாகிறது’’ என்று சொல்லியிருக்கிறார்! மாஸா வாங்கஜி!

இன்பாக்ஸ்

தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘பத்மாவதி’ படம் தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வெளியாகுமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சைக்குரிய கதையை 1963-லேயே தமிழில் திரைப்படமாக்கி இருக்கிறது கோடம்பாக்கம்! `சித்தூர் ராணி பத்மினி’ என்கிற இந்தப்படத்தில் ராஜா ராணாவாக சிவாஜி கணேசன் நடிக்க, ராணி பத்மினியாக வைஜெயந்தி மாலா நடித்திருந்தார். டெல்லி மன்னன் அலாவுதின் கில்ஜியாக மிரட்டியவர் எம்.என். நம்பியார். நம்ம முன்னோர்கள்னாலே கெத்துதான்!

இன்பாக்ஸ்

டிகராகிவிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன். `கோலி சோடா-2’ ல் வில்லனாக நடித்துக்கொண்டிருப்பவர், அடுத்ததாக `தீவிரம்’ என்கிற படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் அவருக்குக் காவல்துறை அதிகாரி வேடமாம். ஆல் தி பெஸ்ட் கெளதம்!