வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (11/09/2018)

கடைசி தொடர்பு:18:45 (11/09/2018)

ரேஸின்போது சக வீரரின் பிரேக்கைப் பிடித்த ஃபெனாட்டி! - கறுப்புக் கொடிகாட்டி வெளியேற்றம்

217 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சக ரேஸரின் பிரேக்கைப் பிடித்து ஆபத்தான முறையில் போட்டியிட்ட மோட்டோ 2 ரேஸர் ரோமானோ ஃபெனாட்டியின் ஒப்பந்தத்தை முறித்து அவரை டீமிலிருந்து வெளியேற்றியுள்ளது மாரினெல்லி ஸ்னைப்பர் ரேஸ் டீம். 

ஃபெனாட்டி

Photo Credit: Twitter/@MotoGP

இத்தாலியின் மிஸானோ ரேஸ் டிராக்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கிராண்ட் ஃப்ரீ மோட்டோ 2 ரேஸில் 4-வது வளைவில் ரோமானோ ஃபெனாட்டிக்கும் சக ரேஸர் ஸ்டெஃபேனோ மான்சிக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டன. 7-வது வளைவில் மான்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வந்து அவரின் பிரேக் லீவரை பிடித்து அவர் பைக்கின் வேகத்தைக் குறைத்தார் ஃபெனாட்டி. இந்தச் சம்பவத்தினால் எந்த விபரீதமும் நடைபெறவில்லை என்றாலும், அதிவேகத்தில் செல்லும் ஒருவரின் வாகனத்தின் பிரேக்கை பிடித்து ஆபத்தை விளைவித்ததற்காக ஃபெனாட்டிக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டு, ரேஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த தவறுக்கு பெனால்ட்டியாக 2 ரேஸில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

ஃபெனாட்டி இந்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும் பெனாட்டியின் ஸ்பான்ஸர் நிறுவனமான மாரினெல்லி ஸ்னைப்பர்கள், அவரை டீமில் இருந்து நீக்கிவிட்டது. டீம் இல்லாமல் மீதம் இருக்கும் ரேஸில் தற்போது ஃபெனாட்டியால் போட்டிபோட முடியாது. அடுத்த ஆண்டு எம்.வி.அகுஸ்டா நிறுவனம் மோட்டோ 2 போட்டியில் ஃபெனாட்டியை ரைடராக வைத்துக் களமிறங்கத் திட்டமிட்டிருந்து. தற்போது எம்.வி.அகுஸ்டா நிறுவனமும் ஃபெனாட்டியின் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டுள்ளது.