`என்ன கேள்வினாலும் கேட்கலாம்' - கோவைக்கு வந்த கூகுள் நெய்பர்லி #GoogleNeighbourly

கூகுள்

கூகுள் நிறுவனம் நெய்பர்லி (Neighbourly) ஆப்பின் சேவையை இந்தியாவில் இருக்கும் ஐந்து நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. அதில் கோயம்புத்தூரும் அடக்கம். அண்மையில் மும்பையில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய ஆப் அங்கே பலத்த வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு ஜெய்ப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அகமதாபாத், கோயமுத்தூர், மைசூர், விசாகப்பட்டினம் மற்றும் கோட்டா ஆகிய நகரங்களுக்கு இந்தச் சேவையை கூகுள் விரிவுபடுத்தியுள்ளது. இந்த ஆப் மூலமாக அந்த இடத்தைச் சுற்றி குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் மற்றப் பயனாளர்களுடன் எளிதாக இணைந்திருக்க முடியும். அவர்கள் கேட்கும் கேள்விக்கோ அல்லது நமக்கு ஏதாவது பதில் தெரிய வேண்டுமென்றாலோ இந்த ஆப் உபயோகமாக இருக்கும். `உங்களிடம் கேள்வி இருக்கிறதா கேளுங்கள்: உங்களிடம் பதில் இருக்கிறதா அதை மற்றவர்களுக்குக் கூறுங்கள்'. என்பதுதான் நெய்பர்லி மூலமாகக் கூகுள் சொல்ல வரும் விஷயம். வாய்ஸ் சர்ச், விரைவாகப் பதிலளித்தல், ஒரே வகையான கேள்விகளைப் பிரிப்பது போன்ற வசதிகள் தற்பொழுது புதிதாக இந்த ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றுக்குப் போட்டியாக நெய்பர்லி ஆப்பை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!