`சைடு மிரருக்குப் பதிலாக கேமரா' - கலக்கும் லெக்சஸ் கார் நிறுவனம்!

அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வரவுள்ளது லெக்சஸ் ES 2019 கார். இதில் ஒரு சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த காரில் பின்னாடி வரும் வண்டிகளைப் பார்க்க உதவும் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராக்கள் இருக்கும். இதில் இருந்து வரும் லைவ் வீடியோ காரினுள் இருக்கும் இரு 5-இன்ச் ஸ்கிரீன்களில் ஒளிபரப்பப்படும். இதனால் கார் ஓட்டும்போது திடீரென இடதுபுறமோ வலதுபுறமோ திரும்பி கண்ணாடியைப் பார்க்க வேண்டியதில்லை. மேலும், இதன்மூலம் பலத்த காற்றினால் சைடு மிரர்கள் கொடுக்கும் சத்தமும் இருக்காதாம். இந்த தொழில்நுட்பமானது வேண்டுமென்பவர்களுக்கு மட்டும் தானாம், மற்றவர்கள் சாதாரண சைடு மிரருடனே இந்தக் காரை வாங்கிக் கொள்ளலாம். 

கார்

மழை, பனியால் பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இது தற்போதைக்கு ஜப்பானில் மட்டும்தான் செயல்படுத்தவுள்ளது லெக்சஸ். ஆனால், மற்ற நாடுகளுக்கும் இது சீக்கிரம் வந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போகும் லெக்சஸ் நிறுவனம் மட்டுமல்ல. ஏற்கெனவே ஆடி நிறுவனமும் இ-ட்ரானுடன் இணைந்து தயாரிக்கவுள்ள காரில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதன் முன்மாதிரியை ஆடி இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த முயற்சி விரைவில் இந்தியாவுக்கும் வந்தடையும் என நம்பலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!