ஆங்கிலத்தில் வெளியாகும் தமிழச்சி கவிதைகள்! | now thamizhachi thangapandian's Poems availabe in english

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (15/09/2018)

கடைசி தொடர்பு:14:15 (15/09/2018)

ஆங்கிலத்தில் வெளியாகும் தமிழச்சி கவிதைகள்!

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழ் நிலத்தின் மண் மணம் மாறாமலும், நவீன வடிவத்திலும் கவிதைகளைப் படைத்துவருபவர், தமிழச்சி தங்கபாண்டியன். சிறுகதை, கட்டுரை, கடித இலக்கியம் எனப் பல வடிவங்களில் தடம் பதிப்பவர். கவிதை இவரது சிறப்பு அடையாளம். 'எஞ்சோட்டுப் பெண்', 'வனப்பேச்சி', 'பேச்சரவம் கேட்டிலையோ', 'மஞ்சணத்தி' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரின் சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், ஒரு தொகுப்பாக வெளியானதில்லை. அதற்கு முக்கியக் காரணம், இவரது கவிதைகளில் அதிகம் இடம்பெறும் வட்டார மொழிச் சொற்கள். தற்போது, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் முன்னாள் தலைவரான முனைவர் சி.டி. இந்திரா, 'வனப்பேச்சி' தொகுப்பில் உள்ள 20 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். அவை ஒரு தொகுப்பாக விரைவில் வெளியாகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் 'நந்தனார் சரித்திரம்', கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்', எழுத்தாளர் சிவகாமியின் நாவல்... உள்ளிட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர், சி.டி.இந்திரா. தமிழ்ப் படைப்புகளை வெளியுலகம் தெரிந்துகொள்வதற்கான சிறந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.