புது நிறங்கள், வயர்லெஸ் சார்ஜிங்...! வெர்னாவின் அனிவர்சரி எடிஷன்

ஹூண்டாய் இந்தியாவுக்கு வந்து 20 ஆண்டுகள் முடிவடைந்ததைக் கொண்டாடும் விதமாக வெர்னாவின் அனிவர்சரி எடிஷனை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மொத்தம் 1000 கார்கள் மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். டாப் வேரியன்டில் மட்டுமே வெளிவரும் இந்தக் காரில் பல மாற்றங்கள் உள்ளன.

ஹூண்டாய் வெர்னா

லிமிடட் எடிஷன் வெர்னா மூன்று இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷனோடு வருகிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினோடு மேனுவல் வேரியன்ட் ரூ.11.6 லட்சத்துக்கும், ஆட்டோமேட்டிக் ரூ.12.83 லட்சத்துக்கும், 1.6 லிட்டர் டீசல் மேனுவல் ரூ.13.03 லட்சத்துக்கும் (எக்ஸ்-ஷோரூம் விலைகள்) விற்பனைக்கு வந்துள்ளன. 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் கிடையாது. 

மெரினா ப்ளூ ஹூண்டாய்

இந்த மாடல், மெரினா ப்ளூ மற்றும் போலார் ஒயிட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கும். சாதா வெர்னாவில் வரும் பீஜ் இன்டீரியருக்குப் பதிலாக இதில் முழுக் கறுப்பு இன்டீரியர் வருகிறது. அங்கங்கு நீல நிற ஸ்டைலிங் உள்ளது. டாப் வேரியன்டில் வரும் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் தவிர வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் புதிது. காரின் வெளியே பார்க்க அலுமினியம் போல இருக்கும் ஸ்கிட் பிளேட்ஸ், ரியர் ஸ்பாய்லர், கறுப்பு நிற மிரர் கேப், Shark fin antenna போன்ற புதிய மாற்றங்கள் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!