ஃப்ளோரன்ஸ் புயலின் பாதிப்புகளை வி.எஃப்.எக்ஸில் காட்டி பாராட்டுப் பெற்ற சேனல்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான தொலைக்காட்சி சேனல் 'தி வெதர் சேனல்'. வானிலைக்கான சிறப்பு சேனலான இது அமெரிக்காவையே மிரட்டி வரும் ஃப்ளோரன்ஸ் புயலின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை வெறும் செய்தியாக மட்டும் சொல்லாமல், விசுவலாக எப்படி பாதிப்புகள் இருக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. 

ஃப்ளோரன்ஸ்

வைரலாகிய இந்த வீடியோ மிக்ஸடு ரியாலிட்டி கிராபிக்ஸ் (Mixed Reality) என்று அழைக்கப்படுகிறது. ஆக்மெண்டெட் ரியாலிட்டி நிறுவனமான 'தி ஃபியூச்சர் குரூப்' உடன் இணைந்து அன் ரியல் என்ஜின் என்னும் கேம் உருவாக்கும் தளத்தில் இதைச் செய்துள்ளது 'தி வெதர் சேனல்'.

 

 

இதைப் போன்று பாதிப்புகளைக் காட்டும்போது உண்மையில் எவ்வளவு அபாயகரமான விளைவுகளைப் புயல் ஏற்படுத்தும் எனப் பார்ப்பவர்கள் உணருகின்றனர். வெறும் எண்ணிக்கையில் இவ்வளவு வேகத்தில் வரும், தண்ணீர் மட்டும் இவ்வளவு அடி உயரும் என்பதைச் சொல்வதைவிட இது மக்களிடையே நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தின் வீரியம் அறியாமல் வீட்டிலேயே இருந்து சமாளித்துவிடலாம் என்று இருப்பவர்களையும் அரசு முன்னேற்பாடுகளுக்கு ஒத்துழைக்கச் செய்துள்ளது இந்த வீடியோ. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் இந்த வைரல் வீடியோவை புகழ்ந்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!