Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

 இலங்கை அணிக்கெதிரான டி-20 தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள பி.சி.சி.ஐ, இந்த 18 வயது இளைஞரையும் டிக் அடித்துள்ளது. 2016 ஐ.பி.எல் தொடரில் பவுலிங்கில் அசத்திய வாஷிங்டன், `டி.என்.பி.எல் போட்டியின் டாப் ரன் ஸ்கோரர்’, `இரண்டாவது பெஸ்ட் பௌலர்’ என ஆல் ரவுண்டராக அசத்தித் தொடர் நாயகன் விருதையும் வென்றார். இலங்கைக்கு எதிராகக் களமிறங்கினால், டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடிய இளம் வீரர் இவர்தான்! வாஷிங்டன்னா சும்மாவா!

இன்பாக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் `சூப்பர் டீலக்ஸ்’ தனித்தனியான ஐந்து கதைகளை கொண்ட திரைப்படம். சமீபத்தில்தான் மிஷ்கின், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றை நடித்துக்கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, டி.ஆர் என்று பெரிய பட்டாளமே இருந்தாலும், இவர்களைவிட முக்கியக் கதாபாத்திரத்தில் ஒரு சிறுவன் நடிக்கிறான். `ஸீ தமிழ்’ தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றும் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான அஷ்வந்த்தான் அந்தச் சிறுவன். சூப்பர் டீமா இருக்கே!

‘மில்லியன் டாலர் பேபி’ க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படம். சிறந்த திரைப்படம் உள்ளிட்ட நான்கு ஆஸ்கர்களை வென்ற திரைப்படம். அதை ரீமேக் செய்யவிருக்கிறது பாலிவுட். க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த பாத்திரத்தில் `2.0’ வில்லன் அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கிறார். படத்தை இயக்கவிருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஹிட்டு காம்போ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முனை ஆற்றில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் `உலகக் கலை விழா’ நடத்தி அந்த நதியின் வெள்ளச் சமவெளிகளை சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது ஸ்ரீரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பு. நதியைப் பாழாக்கிய இந்தச் செயலுக்காக இப்போது வாழும் கலை அமைப்பிற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது தேசியப் பசுமை வாரியம். இது நதியின் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சரிசெய்வதற்குப் பயன்படுத்தப்படுமாம். பணம்போதவில்லை என்றால் மேலும் ஆகிற செலவையும் வசூலிக்கச் சொல்லியிருக்கிறார் நீதிபதி். தீர்ப்பு... சிறப்பு! 

இன்பாக்ஸ்

ந்தியில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு என இந்தியா முழுக்கவும், சீனாவிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் `நாகினி’. முதல் இரண்டு பாகங்கள் ஏற்கெனவே முடிந்து இப்போது மூன்றாவது பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால், மூன்றாவது பாகத்தில் நாகினியாக மௌனிராய் நடிக்கப்போவதில்லை என சீரியல் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அறிவித்துள்ளார். இந்த முறை புதுமுகம் ஒருவரை நாகினியாக அறிமுகப்படுத்தப்போகிறார்களாம். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு அகில உலக மௌனிராய் ரசிகர்களும் ஆன்லைனில் கொந்தளித்துக் கொதித்து ஏக்தா கபூரை விமர்சித்து வெளுத்துக்கட்டினர். ஆனாலும் தன் முடிவில் மாற்றமில்லை, மௌனிராய் நிச்சயமாக நாகினி 3-ல் இல்லை என அறிவித்திருக்கிறார் ஏக்தா கபூர்! மிஸ் யூ மௌனி!

இன்பாக்ஸ்

னுஷ்கா இப்போது ஆல்நியூ லுக்கில் அசத்தலாக மாறிவிட்டார். நடுவில்  கொழுகொழுவென அமுல் பேபியாக இருந்தவர், கடுமையாக உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். `விசுவாசம்’ படத்துக்காகத்தான் இந்த ஸ்லிம் ஃபிட்டாம்! `தல’யும் ஃபிட்டு, தலைவியும் ஃபிட்டு!

டம் தோல்வியடைந்தால் போராட்டம் நடத்தி நஷ்ட ஈடு கேட்கிற ட்ரெண்ட் பாலிவுட்டிலும் தொடங்கியிருக்கிறது. ஷாரூக்கான் நடித்த `ஜப் ஹாரி மெட் செஜல்’ படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் ஷாரூக்கிடம் ``எங்க காசைத் திருப்பிக்கொடுங்க’’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஃப்ளாப்பானா ஆப்புதான்!

இன்பாக்ஸ்

ஃப்சான் ஆசீக்தான் சமீபத்திய வைரல். ஜம்மு காஷ்மீர் மாநிலப் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் அஃப்சான். அவருக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது! காஷ்மீரில் நடந்த காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட போராளி இவர். ஆக்ரோஷமாகக் காவல்துறைமீது அஃப்சான் கல்லெறிகிற படம் ஒன்று சென்ற ஆண்டு இந்திய மீடியாக்களில் பரவலாக வெளியானது. அப்போது யார் இந்தப்பெண் என எல்லோருமே தேடி அலைந்தார்கள். கண்டுபிடிக்க முடியாமல் போகவே, மீடியாக்கள் அவரை மறந்துவிட்டன. இப்போது கால்பந்தாட்ட சாம்பியனாகத் திரும்பி வந்திருக்கிறார் அஃப்சான். போராளி எப்படி கால்பந்தாட்ட சாம்பியன்  ஆனார் என்கிற அவருடைய கதை இப்போது பாலிவுட்டில் படமாகவிருக்கிறது! பக்கா பயோபிக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism