ஹாட்ஸ்டாரின் பங்குகளை வாங்குகிறது ஃப்ளிப்கார்ட்? | Flipkart to have stakes at Hotstar

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (17/09/2018)

கடைசி தொடர்பு:14:04 (17/09/2018)

ஹாட்ஸ்டாரின் பங்குகளை வாங்குகிறது ஃப்ளிப்கார்ட்?

இந்தியாவின் பிரபல ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டாரின் பங்குகளை வாங்க ஃப்ளிப்கார்ட் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது சில நாள்களில் உறுதிப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. எந்தளவில் பங்குகள் வாங்கப்படும் என்ற தகவலும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

ஃப்ளிப்கார்ட்

ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் சேவையுடன் ஏற்கெனவே தொழில்ரீதியான உறவு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு உண்டு. சமீபத்தில் புதிய விளம்பரத்தளம் ஒன்றை ஹாட்ஸ்டாருடன் இணைந்து நிறுவியது ஃப்ளிப்கார்ட். மேலும் ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகளுக்காகவும் ஏற்கெனவே இவை இரண்டும் கை கோத்திருந்தன. தற்போது ஃப்ளிப்கார்ட் ஹாட்ஸ்டாரை குறிவைக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்தியாவில் அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளின் வளர்ச்சிதான் எனக் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனம் தனது ப்ரைம் உறுப்பினர்களுக்கு ப்ரைம் வீடியோ, ப்ரைம் மியூசிக் சேவைகளை இலவசமாகத் தருவது குறிப்பிடத்தக்கது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடனும் முன்பு பேச்சுவார்த்தைகள் நடந்து அது தோல்வியில் முடிந்ததாம்.

மேலும், பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஃப்ளிப்கார்ட் முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எவற்றில் எல்லாம் தனது வருங்காலத்துக்கான முதலீடுகளைச் செய்யவுள்ளது ஃப்ளிப்கார்ட் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க