`நிலவுக்கு ட்ரிப் அடிக்கும் முதல் நபர் இவர்தான்' - ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு! | SpaceX announces first passenger to Moon

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (18/09/2018)

கடைசி தொடர்பு:12:40 (18/09/2018)

`நிலவுக்கு ட்ரிப் அடிக்கும் முதல் நபர் இவர்தான்' - ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!

எலான் மஸ்க் உடல் யுஸகு மேஸாவா

Photo Credits: Twitter/@elonmusk

எலான் மஸ்கின் விண்வெளி போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் எக்ஸ், தங்கள் சேவையின் மூலம் நிலவுக்குச் சுற்றுலாப் பயணியாகச் செல்லும் முதல் நபர் யாரென்பதை அறிவித்துள்ளது. யுஸகு மேஸாவா என்னும் ஜப்பான் தொழிலதிபர்தான் அவர். இவர் ஆன்லைன் ஃபேஷன் நிறுவனமான ஸோஸோவின் நிறுவனர் ஆவர். இது ஸ்பைஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த விழா ஒன்றில் அறிவிக்கப்பட்டது. இவருடன் மேலும் பல பிரபலங்கள் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1972-ம் ஆண்டு முடிவடைந்த அப்போலோ மிஷன்களுக்குப் பின் நிலவுக்குச் செல்லும் முதல் நபர் இவர்தான். 2023-ம் ஆண்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணம் பிக் ஃபால்கான் ராக்கெட் என்னும் விண்கலம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், ஒரு ஆளில்லாத மிஷன் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கும் அனுப்பவுள்ளது இந்நிறுவனம். ஏற்கெனவே லியோனார்டோ டிகாப்ரியோ, ஜஸ்டின் பைபர் போன்ற பிரபலங்கள் பூமியின் சப்-ஆர்பிட்டுக்குச் செல்லும் 90 நிமிட விண்கலத்தில் சீட் புக் செய்துள்ளனர்.

விண்வெளிக்கான சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தே இந்த நிறுவனத்தின் குறிக்கோள். இந்த நிலா பயணத்துக்கான விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஒரு விஷயம் உள்ளது, இந்த மேஸாவா ஜப்பானைத் தாண்டியும் ஒரு செயலுக்காக உலகம் முழுவதும் பிரபலமடைந்திருந்தார். அது சுமார் 800 கோடி கொடுத்து ஒரு ஓவியத்தை வாங்கியதுதான். ஓவியத்துக்கே இப்படி என்றால் நிலா பயணத்துக்கெல்லாம் சொல்லவா வேண்டும்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க