பிரிலிம்ஸ், மெயின்ஸ், இன்டர்வியு - இப்படிச் செய்தால் யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றிபெறலாம்! Sponsored Content | Prelims, Mains and Interview - How to tackle UPSC exams Sponsored Content

வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (18/09/2018)

கடைசி தொடர்பு:16:19 (18/09/2018)

பிரிலிம்ஸ், மெயின்ஸ், இன்டர்வியு - இப்படிச் செய்தால் யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றிபெறலாம்! Sponsored Content

மக்களின் தேவையை உணர்ந்து சேவையைச் செய்யும் மகத்தான வாய்ப்பை குடியுரிமை அரசுப்பணிகள் எனப்படும் சிவில் சர்வீஸ் நமக்கு வழங்குகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற சேவைகளில் சேர UPSC போட்டித் தேர்வுகளை நடத்தி, அதில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களை பணியில் அமர்த்துகிறது நடுவணரசு. படிப்பில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே இத்தகைய தேர்வுகளில் ஜெயிக்க முடியும் அல்லது இஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகள் படித்தவர்களே தேர்வில் வெல்லமுடியும் எனப் பல்வேறான கருத்துகள் மக்களிடையே நிலவுகின்றன. இது எல்லோருக்குமானது கிடையாது, சிவில் சர்வீஸ் பயிற்சிக்காக சொந்த வாழ்வையே தியாகம் செய்யவேண்டும் எனக் கூறுபவர்களும் இங்கேயுண்டு. ஆனால், இதுவரை சிவில் சர்வீஸ் பரீட்சியை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்கள் கூறுவது இதைத்தான்: 'முயன்றால் யாரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம், அதற்குத் தேவை முயற்சி மற்றும் சரியான பயிற்சி'.

பரீட்சையை எப்படி எதிர்கொள்வது?

இலக்கு இல்லாமலேயே உங்களால் பல அன்றாட விஷயங்களைச் செய்யமுடிகிறது எனும்பட்சத்தில் இலக்கு ஒன்று வைத்து அதை நோக்கி நடைபோடும்போது, தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி மேலும் சிறப்பாக செயல்படமுடியும். நம் ஆளுமைத் திறனை, மக்களின் பிரச்னைகளை உணர்ந்து அவற்றுக்குத் தேவையான தீர்வை வழங்கும் நமது அறிவையும், துணிவான அணுகுமுறையையுமே இந்த பரீட்சை சோதனை செய்கிறது. அதனால், பாடங்களை மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு கருத்துக்களை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தவேண்டும். மேலும், ஐ.ஏ.எஸ். மெயின்ஸ் பரீட்சை, எழுத்துத் திறனையும் சோதிக்கிறது, காரணம் சிவில் சேவைக்குத் தேர்வானபின் பாதி வேலைநேரம் எழுத்து சம்பந்தப்பட்ட வேலைகளாகவே இருக்கும். எனவே, கேட்கப்பட்டதை சரியாக புரிந்துகொண்டு தேவையானதை மட்டுமே எழுதவேண்டும் என்கின்றனர் இப்பரீட்சையில் வென்ற சாதனையாளர்கள்.

பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் எழுத்துத் தேர்வு முடிந்தபின், இறுதி நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவரின் Personality, அதாவது ஆளுமை, குணநலன் ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பலரும் நேர்முகத் தேர்வு நம் அறிவை சோதிக்கும் தேர்வு என எண்ணி, கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லவேண்டும் என நினைத்தாலும், உண்மையில் நாம் இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு முடிவெடுக்கிறோம், கேள்வியை எப்படி அணுகுகிறோம் என்பதே முக்கியமாகும். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நேர்முகத் தேர்வில் சறுக்கும்போது, பிரச்னைகள் குறித்த அணுகுமுறையை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் நேர்முகத் தேர்வில், ஆங்கிலம் சிறப்பாக பேசவேண்டும் என்பதெல்லாம் கிடையாது. கேள்விக்குத் தெளிவான விடை, இதுதான் இன்டர்வியூ பேனல் எதிர்பார்க்கும் விஷயம். நாம் பதிலளிக்கும் விதத்தை வைத்தே நாம் எந்தத் துறையில் சேவை செய்வதற்கு சரியானவர்கள் என கணிக்கப்படுவோம். நேர்மையாக, அரசியல் சார்பற்ற, தன்னம்பிக்கை கொண்ட நபர்களைத்தான் அரசு எதிர்பார்க்கிறது. பரந்த மனப்பாண்மை மற்றும் சமுதாயத்தில் பலவீனமான பிரிவினர்மீது அக்கறை கொண்ட ஒரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனாக இருப்பது முக்கியம்.

கைகொடுக்கும் கோச்சிங் வகுப்புகள்

இன்று சிவில் சர்வீஸ் பரீட்சையை வெற்றிகரமாக முடித்து அரசுப் பணியாற்றிக்கொண்டிருக்கும் பலரும் கோச்சிங் வகுப்புகளில் பயின்றவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது. தரமான கோச்சிங் வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்ளும்போது, சுலபமாக இவர்கள் ஜெயிக்கமுடிவதற்கு முக்கிய காரணம் அங்கு செயல்படுத்தப் படும் சீரிய பாடத்திட்டம், பயிற்சிமுறை மற்றும் தொடர்ந்த தேர்வுகள்தான். மேலும், பலதரப்பட்ட மாணவர்களோடு இணைந்து படிக்கும்போது, நம் மனம் வேறு காரியங்களில் சிதறாமல் இருக்கிறது, இலக்கு ஒன்றே குறிக்கோளாகிறது!

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமி 

சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமி UPSC மற்றும் TNPSC தேர்வுகளுக்கு சிறந்தமுறையில் பயிற்சியளித்துவருகிறது. இதுவரை 159 நபர்களை வெற்றிகரமாக அரசு சேவைப் பணிகளில் அமர்த்தியுள்ளது கிங்மேக்கர்ஸ். இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.எப்.எஸ்.அதிகாரியான 'பெனோ ஜெஃபின்' கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, யு.பி.எஸ்.சி. - 2018: பிரிலிம்ஸ்& மெயின்ஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. க்ரூப் - 1 & க்ரூப் 2 -விற்கான பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது. வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களிலும் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

புதிய கட்டிடம் திறப்பு

கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமியின் புதிய கல்விக்கூட வளாகத்தின் திறப்பு விழா மற்றும் பாராட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. குறுகிய கால அளவில் மத்திய மாநில அரசுத்துறை பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தங்களது நுணுக்கமான பயிற்சியின் முலம் எண்ணற்ற வெற்றியாளர்களை உருவாக்கி வரும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் புதிய வெற்றி வளாகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு திரு. பிரணாப் முகர்ஜி. மேலும், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயின்று வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களை பாராட்டி விருதுகளை வழங்கி கெளரவித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராய் வருகை தந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஜி. கே. வாசன் அவர்களும் வெற்றியாளர்களை பாராட்டிப் பேசினார். 

கிங் மேக்கர்ஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற...இங்கே க்ளிக் செய்க...
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க