வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (19/09/2018)

கடைசி தொடர்பு:12:39 (19/09/2018)

மார்வெல் சூப்பர் ஹீரோக்களுடன் களமிறங்கும் டிஸ்னி ஸ்ட்ரீமிங் தளம்!

உலகமெங்கும் ஸ்ட்ரீமிங் தளங்கள் பிரபலமாகி வரும் இந்த நேரத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற முன்னணி தளங்களுக்குப் போட்டியாக டிஸ்னியும் களம் இறங்கவுள்ளது. பொழுதுபோக்கு உலகத்தின் ஜாம்பவானான டிஸ்னி சமீபத்தில் ஃபாக்ஸ் நிறுவனத்தை இணைப்பதாக அறிவித்திருந்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட பாதி ஹாலிவுட் தற்போது டிஸ்னி வசம். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ், ஸ்டார் வார்ஸ், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் போன்றவற்றுடன் இவர்களின் அனிமேஷன் படங்களையும் சேர்த்து இவர்களுக்கென இருக்கும் லிஸ்ட் மிகப்பெரியது.

ஸ்ட்ரீமிங்

Photo Credits: Twitter/@MarvelStudios

இந்த நிலையில், தங்களுக்கென சொந்த ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றைத் தொடங்க முடிவெடுத்துள்ள டிஸ்னி தொடங்கும்போது மக்களைக் கவர மார்வெல் படங்களில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு டிவி சீரிஸ்கள் தயாரிக்கும் எனத் தகவல் வெளியாகவுள்ளன. இந்த சீரிஸ்கள் அவர்களுக்கென ஒரு தனிப்படம் இல்லாத சூப்பர் ஹீரோக்களுக்கு இருக்குமாம். அதாவது லோக்கி, ஸ்கேர்லெட் விட்ச் போன்ற கதாபாத்திரங்கள் அவெஞ்சர்ஸ் படங்களுக்கு முன் என்ன செய்தார்கள் என்ற முன்கதையை மையமாகக் கொண்டு இந்த சீரிஸ்கள் தயாரிக்கப்படவுள்ளதாம். எவ்வளவு பொருட்செலவில் இது எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ஏற்கெனவே வரும் படங்களுக்கு நிகரான செலவில்தான் இதுவும் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மார்வெல் படங்களில் நடித்துவரும் அதே நடிகர்கள்தான் சீரிஸிலும் இந்தக் கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே படத்தில் வராத டெர்டெவில், லுக் கேஜ், ஐயன் ஃப்ஸ்ட் போன்ற சில சூப்பர் ஹீரோ சீரிஸ்களை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மார்வெல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க