வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (19/09/2018)

கடைசி தொடர்பு:17:10 (19/09/2018)

USD ஃபோர்க், ட்வின் எக்ஸாஸ்ட், ரைடு-பை-வயர்... அப்டேட்டாகிறது டொமினார்!

பஜாஜ் தனது பவர் க்ரூஸர் டொமினார் 400 பைக்கை அப்டேட் செய்து வெளியிடப்போகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட டொமினாரின் ஸ்பை படங்கள் இணையதளத்தில் வைரலாக வலம்வருகின்றன. 

புது டொமினார்

டொமினாரில் முதன்மையான அப்டேட்டாக USD ஃபோர்க்குகள் வருகின்றன. கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே ஃபோர்க்குகள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டொமினாரின் ஹேண்ட்லிங் மற்றும் சஸ்பென்ஷனில் நடைமுறை வித்தியாசங்கள் தெரியும். குறைவான வேகங்களில் போகும்போது டொமினார் சொகுசாக இல்லை என்ற குறையையும் பஜாஜ் சரிசெய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை படத்தைப் பார்க்கும்போது, சமீபத்திய சுஸூகி பைக்குகளைப்போல பஜாஜும் double barrel எக்ஸாஸ்ட் செட்டப்பை கொண்டுவரப்போவதாகத் தெரிகிறது. புது டொமினாரில் ரீடிசைன் செய்யப்பட்ட பெரிய ரேடியயேட்டர் இருக்கிறது. 

டொமினாரின் வேகத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும்  SOHC இன்ஜின் செட்டப்புக்குப் பதிலாக DOHC செட்டப் வரப்போகிறது. டியூக் பைக்குகளில் வரும் ரைடு-பை-வயர் வசதியைக் கொண்டுவர வாய்ப்புகள் உள்ளன. கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸில் மாற்றங்கள் இல்லை. ஏபிஎஸ் பிரேக்கை ஸ்டான்டர்டாகத் தரவுள்ளார்கள். இந்தியாவில் பிஎஸ்-6 விதிமுறை கட்டாயமாக்கப்படுவதால் வரவிருக்கும் புதிய டொமினாரின் இன்ஜினை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருக்கும் என்று நம்புகிறோம். வழக்கம்போல புதிய நிறங்களும் இருக்கும். இந்த அப்டேட் செய்யப்பட்ட டொமினார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.