வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (19/09/2018)

கடைசி தொடர்பு:18:34 (19/09/2018)

டூ வீலர் விற்பனையில் ஆக்டிவா ஆதிக்கம்!

பொருளாதார நெருக்கடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு  போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், வாகன விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது. அதற்குத் தகுந்தார்ப்போல வாடிக்கையாளர்களும் இருசக்கர வாகனங்களை வாங்காமல் இல்லை. 

 

ஆக்டிவா

ஆகஸ்ட் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 டூ வீலர்களின் பட்டியலில் ஹோண்டாவின் ஆக்டிவாதான் முன்னிலையில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே விற்பனையில் முன்னிலையில் இருப்பதும் ஆக்டிவாதான். இந்த மாதம், மொத்தம் 3,10,851 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மாதம் 2,86,380 என இருந்த எண்ணிக்கை இந்த மாதம் அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக, ஹீரோ ஸ்ப்ளெண்டர். HF டீலக்ஸ், ஹோண்டா சிபி ஷைன், ஹீரோ பேஷன், பஜாஜ் சிடி 100, ஹீரோ கிளாமர், பஜாஜ் பல்சர் ஆகியன உள்ளன. டாப் 10-ல் டிவிஎஸ்ஸின் XL சூப்பர் மற்றும் ஜூபிட்டர் ஸ்கூட்டரும் உள்ளன. 

இதில், கடந்த மாதம் 86,160 டூ வீலர்கள் மட்டுமே, விற்பனையான ஹோண்டா சிபி ஷைன் மாடலில், இந்த மாதம் 1,08,790 டூ வீலர்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 

ஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 டூ-வீலர்கள்!

மாடல்  யூனிட்
ஹோண்டா ஆக்டிவா 3,10,851
ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,47,116
ஹீரோ HF டீலக்ஸ் 1,83,716
ஹோண்டா சிபி ஷைன் 1,08,790
ஹீரோ பேஷன் 82,681
பஜாஜ் சிடி 100 82,424
டிவிஎஸ் ஜூபிட்டர் 79,223
ஹீரோ கிளாமர் 74,097
டிவிஎஸ் XL சூப்பர் 70,883
பஜாஜ் பல்சர் 70,051

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க