`ரெட்ரோ ஸ்டைல்’ லவ்வர்களைக் குறிவைத்துக் களமிறங்கும் க்ளிவ்லேண்ட் பைக்குகள்! | Cleveland launched its first set of bikes in India

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (20/09/2018)

கடைசி தொடர்பு:21:30 (20/09/2018)

`ரெட்ரோ ஸ்டைல்’ லவ்வர்களைக் குறிவைத்துக் களமிறங்கும் க்ளிவ்லேண்ட் பைக்குகள்!

Ace Deluxe மற்றும் Misfit பைக்கை முதல் கட்டமாக விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளார்கள். பைக்கை பற்றிய முழு விவரம் உள்ளே...

அமெரிக்க நிறுவனமான க்ளிவ்லேண்ட் சைக்கிள்வொர்க்ஸ், இந்தியாவில் தனது முதல் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் 4 பைக்குகளை காட்சிப்படுத்தியிருந்தது. முதல் கட்டமாக  Ace Deluxe மற்றும்  Misfit பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. Ace Deluxe மாடலுக்கு ரூபாய் 2.24 லட்சம் எனவும், misfit மாடலுக்கு ரூபாய் 2.49 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன (எக்ஸ் ஷோரூம்). முதல் பைக்காக Ace Deluxe தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது. Misfit அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று கூறியுள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், மும்பையின் நவி ஏரியாவில் தனது முதல் டீலர்ஷிப்பையும் தொடங்கிவிட்டது இந்நிறுவனம்.

க்ளிவ்லேண்ட் Ace deluxe

 Ace deluxe மாடல், ராயல் என்ஃபீல்டின் புல்லட் போல ரெட்ரோ ஸ்டைலிலும், Misfit கஃபோ ரேஸர் ஸ்டைலிலும் வருகிறது. இரண்டு பைக்குகளிலுமே 229cc, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் உள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வரும் இந்த இன்ஜின், 15.4 bhp பவரையும், 16 Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது.  Ace Deluxe பைக்கில்  square-section single downtube ஃபிரேமும், Misfit பைக்கில் டபுள் கிராடில் சேஸியும் வருகிறது. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை இரண்டிலுமே முன்பக்கம்  USD ஃபோர்க்கும், பின்பக்கம் அட்ஜஸ்டபில் டூயல் ஷாக் அப்சார்பர்களும் வருகின்றன.  Ace deluxe மாடலில் முன்பக்கம் 298 மி.மீ ட்வின் பிஸ்டன் டிஸ்க் பிரேக்கும், 210மி.மீ பின்பக்க டிஸ்க் பிரேக்கும் உள்ளன.  Misfit மாடலில் பெரிய 320மி.மீ, 4-பிஸ்டன் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 220 மி.மீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. 

க்ளிவ்லேண்ட் Misfit

 Ace deluxe, 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 133 கிலோ எடையிலும்,  Misfit 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 144 கிலோ எடையிலும் உள்ளது. இரண்டு பைக்கிலும் 150மி.மீ கிரவுண்டு க்ளியரன்ஸ்தான் உள்ளது. க்ளிவ்லேண்ட் பைக்குகளை விற்பனைசெய்ய தென் இந்தியாவில் மட்டும் இதுவரை 10 டீலர்கள் உடன்பட்டுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். முக்கால்வாசி பாகங்களை CKD மூலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தும், 5 முதல் 6 சதவிகித இந்திய பாகங்களை வைத்தும் புனேவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனையாகப் போகிறன இந்நிறுவனத்தின் பைக்குகள். ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Ace scrambler மற்றும் Ace cafe பைக்குகள், அடுத்த ஆண்டு விற்பகைக்கு வரும் என்று கூறியுள்ளார்கள்.