வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (21/09/2018)

கடைசி தொடர்பு:08:15 (21/09/2018)

சான்ட்ரோ, சான்யன், ஐ5... எந்த பெயர் ஜெயிச்சிருக்கும்? #NameTheHyundai

, இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மனுக்கள் வந்துசேர்ந்துவிட்டன; இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர், ஆச்சர்யமளிக்கும் விதமாக ‘சான்ட்ரோ’ எனும் பெயருக்கே வாக்களித்துள்ளனர்!

AH2 என்ற புனைப்பெயரில், ஒரு புதிய ஹேட்ச்பேக்கை ஹூண்டாய் நிறுவனம் டெஸ்ட் செய்துவந்தது தெரிந்ததே. ஒரு வித்தியாசமான முயற்சியாக, அந்த காரின் பெயரைக் கண்டறியும் வேலையை, மக்களிடமே விட்டுவிட்டது அந்த நிறுவனம்! கடந்த மாதம் 16-ம் தேதி துவங்கிய இதற்கான ‘NaamKaran’ போட்டியில், இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மனுக்கள் வந்துசேர்ந்துவிட்டன; இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர், ஆச்சர்யமளிக்கும் விதமாக ‘சான்ட்ரோ’ எனும் பெயருக்கே வாக்களித்துள்ளனர்! இதனைத் தொடர்ந்து i5 (i10 காருக்குத் தம்பி) எனும் பெயருக்கு 663 வாக்குகளும், SanEon (Santro+Eon) எனும் பெயருக்கு 443 வாக்குகளும் பதிவாகின. இதை வைத்துப் பார்க்கும்போது, முன்புபோல (Zing) எந்தவிதமான அடைமொழியும் இல்லாமல், சான்ட்ரோ என்ற பெயரிலேயே இந்தப் புதிய ஹேட்ச்பேக் வெளிவருவதற்கான சாத்தியம் அதிகம்! இதில் லேட்டஸ்ட் டிசைன் அம்சங்கள் இருக்கும்.

 

சான்ட்ரோ


 
இந்தப் பெயரில் ஏற்கெனவே ஹூண்டாய் நிறுவனம் விற்பனைசெய்த காரின் உற்பத்தி, கடந்த 2014-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது; இதன் மூலமாக, காலங்களைக் கடந்தும், இந்தியாவின் ஆட்டோமொபைல் வரலாற்றில் நீக்கமற இடம்பிடித்திருக்கும் சான்ட்ரோவை, மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது புலனாகிறது! எனவே, வாடிக்கையாளர்களிடம் ஏற்கெனவே நன்கு பரிட்சயமான பெயரைக் கொண்ட ஒரு புதிய காருக்கு, அந்த நிறுவனம் மார்க்கெட்டிங்குக்காக அதிக தொகையைச் செலவழிக்கத் தேவையிருக்காது. டாடா டியாகோ, மாருதி சுஸூகி செலெரியோ மற்றும் வேகன்-ஆர், ரெனோ க்விட் ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கப்போகும் இந்த கார், வருகின்ற அக்டோபர் 23, 2018 அன்று அறிமுகமாக உள்ளது. இது தற்போது மந்தமான விற்பனையில் இருக்கும் இயானுக்கு மாற்றாக பொசிஷன் செய்யப்படலாம். அக்டோபர் 10, 2018 முதல் சான்ட்ரோவின் புக்கிங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ளது.

 

Santro

 

பட்ஜெட் காராக இருப்பினும், தனது பாணியில் இந்தக் காரில் அதிக வசதிகளை ஹூண்டாய் வாரியிறைத்திருக்கிறது; ஆம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட், 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ் & EBD, ரிவர்ஸ் கேமரா & ரியர் பார்க்கிங் சென்சார், இண்டிகேட்டர்களுடன் கூடிய எலெக்ட்ரிக் மிரர்கள், ஆடியோ கன்ட்ரோல்களுடன் கூடிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், டூயல் டோன் டேஷ்போர்டு, கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகியவை இதனை உறுதிபடுத்துகின்றன. இதில் i10 காரில் இருந்த 1.1 லிட்டர், 4 சிலிண்டர், Epsilon IRDe பெட்ரோல் இன்ஜின்- 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களுக்குச் சமமான 70bhp பவர் - 10kgm டார்க் – 20.1கிமீ அராய் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். சான்ட்ரோவில் பெரிய கதவுகள் மற்றும் 1,560 மிமீ உயரம் இருப்பது பெரிய ப்ளஸ்.

 

Hyundai

 

ஹூண்டாய் வரலாற்றிலேயே முதன்முறையாக, AMT ஆப்ஷன் கொண்ட காராக சான்ட்ரோ இருக்கப்போகிறது! மேலும் CNG வசதியும் பின்னாளில் வரலாம். டால் பாய் டிசைன், பெரிய வீல் ஆர்ச், அகலமான கேபின், எளிதான கன்ட்ரோல்கள், போதுமான இடவசதி எனச் சான்ட்ரோவின் பலங்களுடன் புதிய கார் அசத்தக் காத்திருக்கிறது! பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்கள், காரின் ஸ்டைலிங்கை உயர்த்தும். இயானின் விலைகுறைவான PA ஃப்ளாட்ஃபார்முக்குப் பதிலாக, i10 காரின் நம்பகத்தன்மை வாய்ந்த HA ஃப்ளாட்ஃபார்மில் இந்த கார் உற்பத்தி செய்யப்படும். எனவே ஜூலை 2019-ல் அமலுக்கு வரவிருக்கும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்பவே சான்ட்ரோ இருக்கும். சீட் பெல்ட் Reminder, Speed Sensing டோர் லாக்,Impact Sensing டோர் அன்லாக், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஆகியவை இதற்கான உதாரணம். அக்டோபர் 4 அன்று, பெயர் அறிவிப்பு விழாவை நடத்த இருக்கிறது ஹூண்டாய். அன்று கார் பற்றிய தகவல் தெரிந்துவிடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்