``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா | ”We will have both of our initials for our baby!", Sania Mirza

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (21/09/2018)

கடைசி தொடர்பு:14:40 (21/09/2018)

``பாப்பா பெயருக்குப் பின்னால் மிர்சா, மாலிக் இரண்டுமே இருக்கும்'' - நெகிழும் சானியா மிர்சா

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தன்னுடைய 9-வது மாத தாய்மைப் பூரிப்பில் இருக்கிறார். அடுத்த மாதம், தன்னுடைய பிஞ்சுப் பாப்பாவை எடுத்துக் கொஞ்சப் போகும் சானியா, தன்னுடைய மேடிட்ட வயிற்றுடன் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து தன் இன்ஸ்டாகிராமில் இனிக்க இனிக்கப் பதிவிட்டு வருகிறார். 

சானியா

முதல் மூன்று மாதங்கள் வரை, கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொன்னாலே திருஷ்டிப் பட்டு விடும்'  என்ற மூட நம்பிக்கைகளுக்கு மத்தியில், கருத்தரித்த நாளிலிருந்து தன் புகைப்படங்களைத் தொடர்ந்து வலைதளங்களில் பதிவிட்டு, தன் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார் சானியா.

மேடிட்ட வயிறுடன்

தவிர, மெட்டர்னிட்டி போட்டோஷூட், இந்துஸ்தான் டைம்ஸின் 'பிரன்ச்' (Brunch) இதழின் முகப்பு அட்டையை அலங்கரிப்பது என தன்னுடைய தாய்மையை ஒளிவு மறைவில்லாமல் கொண்டாடி வருகிறார். 

பிரன்ச் இதழின் முகப்பில்

சமீபத்திய பேட்டி ஒன்றில், ``எங்களுக்குப் பெண் குழந்தைப் பிறந்தாலும் சரி, ஆண் குழந்தைப் பிறந்தாலும் சரி, குழந்தையின் சர் நேமாக மிர்சா மாலிக் என, எங்கள் இரண்டு குடும்பங்களின் பெயரையும் சேர்த்துத்தான் வைப்போம்'' என்றிருக்கிறார்.  

உங்கள் ஆசைப்படியே ஆகட்டும் சானியா அம்மா!


[X] Close

[X] Close