ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இனி YuppTVயில் கண்டுகளிக்கலாம்! Sponsored Content | YuppTV bags exclusive digital rights for ASIA CUP 2018 Sponsored Content

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (21/09/2018)

கடைசி தொடர்பு:16:05 (21/09/2018)

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இனி YuppTVயில் கண்டுகளிக்கலாம்! Sponsored Content

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் போட்டி செப்டெம்பர் 15 முதல்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இத்தொடரை  ஆன்லைனில் ஒளிபரப்புவதற்கான உரிமையை, புகழ்பெற்ற தென்னாசிய OTT நிறுவனமான YuppTV பெற்றுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்குபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டெம்பர் 28 வரை நடைபெறவுள்ளது. இத்தொடரை மேற்கண்ட பிராந்தியங்களில் இருக்கும் இரசிகர்கள் YuppTVக்கு சப்ஸ்கிரைப் செய்து அத்தளத்தின் மூலம் நேரலையில் கண்டு மகிழலாம்.
 

YuppTV -யின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உதய் ரெட்டி கூறியதாவது: "YuppTVயில் ஆசியக் கோப்பைத் தொடரை ஒளிபரப்புவது மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகம் முழுக்கவுள்ள கிரிக்கெட் இரசிகர்கள் கிரிக்கெட்டை கிட்டத்தட்ட ஒரு மதமாக நினைத்து அதைப் பின்பற்றிவருகின்றனர், இவ்வகை இரசிகர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் ஆசியக் கோப்பையை இனிக் கண்டு மகிழலாம்! சிரமமின்றி கிரிக்கெட் நிகழ்ச்சியை எங்களின் தளத்தில் பார்க்கும் நேயர்கள், எங்களுடைய இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்புகிறோம்."

அபுதாபி மற்றும் துபாய்-இல் நடைபெறும் ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் போட்டியைக்  காண www.yupptv.com தளத்துக்குச் சென்று இரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்து நேரலையில் காணலாம். மேலும், YuppTV ஆப் மூலம் IOS, ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் இன்டர்நெட் வசதிகொண்ட சாதனங்களிலும் இத்தொடரை மக்கள் கண்டுகளிக்கலாம்!

https://www.yupptv.com/cricket/asia-cup-2018-live-streaming எனும் லிங்கிற்குச் சென்று கிரிக்கெட்டின் உட்சபட்ச மோதலாகக் கருதப்படும் இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச்சை பார்த்து இரசியுங்கள்!

Yupp TVயைப் பற்றி...

Yupp TV தெற்காசிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடிய இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சியாகும். 300க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை 14 மொழிகளில் வழங்குகிறது. 

ஆசியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் எமரால்டு மீடியா நிறுவனம் Yupp TV-க்கு நிதி முதலீடு அளித்துள்ளது. இந்நிறுவனம், சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR-இன் சிறுபான்மைப் பங்குகள் மூலம் செயல்படுகிறது. இந்நிறுவனம், மீடியா, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கு முதலீட்டை வழங்குவதில் கவனம் செலுத்திவருகிறது. Yupp TV, அதன் முதல்கட்ட நிதித் திரட்டலை Poarch Creek Indian Tribe of Alabama மூலம் செய்தது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் இன்டர்நெட் பே டிவி-யாக விளங்குகிறது Yupp TV. அதிகமாக தரவிறக்கப்பட்ட இந்திய ஸ்மார்ட் டிவி ஆப் Yupp TV தான். 4.0 ரேட்டிங் கொண்ட இந்த ஆப், இதுவரை 14.5 மில்லியன் மொபைல் டவுன்லோடுகளைக் கண்டுள்ளது.

Press release by: Indian Clicks, LLC  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close