Published:Updated:

மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் எத்தகையது?

மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் எத்தகையது?
மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் எத்தகையது?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 160 தொகுதிகளின் வெற்றி - தோல்விகளுக்கு, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும்.

மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் எத்தகையது?

மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு தொடர்பாக, ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிஷியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவில், மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும், குஜராத்தில் 17 தொகுதிகளிலும் இந்தத் தாக்கம் இருக்கலாம். தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் முறையே 12, 11 மற்றும் 10 தொகுதிகளில் தாக்கம் இருக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், முக்கியப் பிரச்னைகளில் சமூக வலைத்தளங்களும் இணைய ஆர்வலர்களும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது அண்மைக்காலமாகவே கண்கூடாகக் காணும் விஷயம். அண்ணா ஹஜாரே போராட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை, டெல்லி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் கவனத்தை ஈர்த்ததற்கு சமூக வலைத்தளவாசிகளும் மிக முக்கியக் காரணம் காரணம்.

இந்தச் சூழலில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அது எந்தவிதமான தாக்கமாக இருக்கும்?

விவாதிப்போம் வாருங்கள்.