நிஸான் கிக்ஸ் - SUV ராஜா க்ரெட்டாவின் சிம்மாசனத்துக்குச் சரியான போட்டி! | Nissan kicks car review

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (23/09/2018)

கடைசி தொடர்பு:14:39 (23/09/2018)

நிஸான் கிக்ஸ் - SUV ராஜா க்ரெட்டாவின் சிம்மாசனத்துக்குச் சரியான போட்டி!

நிஸான் கிக்ஸ் -  SUV ராஜா க்ரெட்டாவின் சிம்மாசனத்துக்குச் சரியான போட்டி!

டெரானோ, சன்னி, மைக்ரா என ஜப்பானின் தரத்தை மையமாக வைத்து நிஸான் இந்தியாவில் இறக்கிய கார்கள் எதுவும் பலன் தரவில்லை என்பதால் கடைசியில் லாபம் பார்க்க டட்ஸனை கொண்டுவந்துவிட்டது. GTR புகழ் நிஸானுக்கு இந்தியாவில் புகழ் இல்லை என்ற பெயர் வராமல் இருக்கப் பல ஆண்டுகள் கழித்து இப்போது தனது சர்வதேச சந்தையில் இருந்து ஒரு காரை இறக்குகிறது. 11 முதல் 17 லட்சம் ரூபாய் என்கிற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிஸான் கிக்ஸின் ப்ளஸ், மைனஸ்களை பார்ப்போம். முழு ரிவ்யூ மோட்டார் விகடனில்...

டிசைன்:

நிஸான் கிக்ஸ்

எஸ்யூவி என்று வந்தால் முரானோ, ஜூக் போல டிசைனின் அடிப்படையை மாற்றி அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோகும் நிஸான் நிறுவனம் கிக்ஸின் டிசைனையும் அசத்தியுள்ளது. எஸ்யூவிக்கு தேவையான பல்க்கான பாடி, உயரமான பின்பக்கம், ஃபிளாட்டான பானெட்டு எல்லாம் இருந்தாலும், மாடர்ன் கார் என்பதைச் சொல்ல பெரிய வீல் ஆர்ச்சுகள், காரின் பக்கவாட்டில் இருக்கும் பாடி லைன், ஃப்ளோட்டிங் ரூஃப் போன்ற மாடர்ன் விஷயங்களும் உள்ளன.

கேபின்:

கிக்ஸ் கேபின்

எக்ஸ்டீரியர் மட்டுமில்லை இன்டீரியரிலும் நிஸானின் தரம் தெரிகிறது. S-cross போல குள்ளமாகவும் இல்லாமல், டஸ்டர் போல உயரமாகவும் இல்லாமல் சரியான உயரத்தில் இருக்கிறது இதன் டிரைவிங் பொசிஷன். நாங்கள் டிரைவ் செய்த பேஸ் மாடல் கிக்ஸில் இந்தியாவுக்கு வரும் என்று சொன்ன 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் இல்லை. ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் ரேஸியாக இருந்தாலும், அங்குக்கங்கு தரப்பட்டிருக்கும் மெட்டல் ஃபினிஷ் எஸ்யூவி என்பதை நினைவுபடுத்துகிறது. சென்டர் கன்சோல் 8 இன்ச் டச் ஸ்கிரீன்-ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உடன் வருகிறது. ஏசி, கிளைமேட் கன்ட்ரோல் நாப்கள் இருக்கின்றன. டாப் வேரியன்டில் டிஜிட்டல்  TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வரும் என்று எதிர்பார்க்கிறோம். லெதர் சீட் மற்றும் ஸ்டியரிங் உடன் கான்ட்ராஸ்ட் நிற ஸ்டிச்சிங் இருக்கப்போகிறது. நிஸானின் லக்ஸூரி பிராண்டான இன்ஃபினிட்டியில் இருப்பது போன்ற பிரவுன் நிற இன்டீரியர் வேலைப்பாடுகள் வரும். 

சொகுசு:

முன்பக்க சீட்டில் கிடைக்கும் சொகுசும் சப்போர்ட்டும் சொகுசு கார்களின் தரம். குஷனும் அருமை. பின்பக்க சீட்டும் சொகுசாகவே இருக்கிறது. நேரான சீட்டிங் பொசிஷனால் சீட் உயரம் அருமை. க்ரெட்டாவை விட உயரம் குறைவு, ஆனால் வீல்பேஸ் பெருசு என்பதால் க்ரெட்டாவை விட லெக்ரூம் அதிகம். 432 லிட்டர் பூட் ஸ்பேஸ் லக்கேஜ் விரும்பிகளுக்குப் பிடிக்கும். 

கிக்ஸ் பாடி

ஓட்டுதல் தரம்:

மைக்ரா, சன்னி போல  V பிளாட்ஃபார்மில் வரவில்லை கிக்ஸ். இதே பிளாட்பார்மை அடிப்படையாக வைத்து அப்டேட் செய்யப்பட்ட புதிய பிளாட்ஃபார்மில் வரவுள்ளது.  Xtronic CVT கியர்பாக்ஸில்  Rubber Band Effect இல்லவே இல்லை. டிராஃபிக்கில் ஓட்டும்போது கியர்பாக்ஸின் ரெஸ்பான்ஸ் செம. நிஸான் ஜூக்கில் இருக்கும் ஃப்ளோப் பேன் மற்றும் சஸ்பென்ஷன் இந்தியாவுக்கு வரவிருக்கும் கிக்ஸில் வரவுள்ளது. லைட்டான ஸ்டியரிங் டிரைவிங்கை சலிக்காமல் பார்த்துக்கொள்கிறது. இதன், 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தரும் 118 bhp பவரை தருகிறது. அதிகமும் இல்லை, குறைவும் இல்லை. ஃபன் டிரைவிங்குக்கு சரியான அளவு. குறுகலான கார்னரையும் சுலபமாகக் கடந்துவிடலாம். ஆனால், பாடி ரோல்தான் தாங்கவில்லை. மிட் ரேஞ்சில் இன்ஜின் செம டார்க்கி. ஆனால், இந்தியாவுக்கு 110 bhp பவர் தரும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் வரப்போகிறது. 

புது நிறங்கள்

எதிர்பார்ப்புகள் எப்படி?

வரப்போகும் கிக்ஸ் மீது அதீத நம்பிக்கையை வைத்துள்ளது நிஸான். சுறுசுறுப்பான டீசல் இன்ஜின், கேபின் தரம், எக்கச்சக்க வசதிகள், 11 முதல் 17 லட்ச ரூபாய் எனும் விலை எல்லாமே ஒன்று கூடி வருகிறது கிக்ஸ். பல ஆண்டுகள் கழித்து நிஸான் ஒரு சரியான காரை இந்திய சந்தைக்கு கொண்டு வருகிறது. இந்தியாவில் எஸ்யூவி விற்பனையில் ராஜாவாக இருக்கும் க்ரெட்டாவின் சிம்மாசனத்துக்குச் சரியான போட்டி. உஷார் க்ரெட்டா...!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close