பிரீமியம் ஸ்டோரி

twitter.com/idumbaikarthi

கவலைப்படாதடா. ஒரு பொண்ணு உன்னைத் தேடி வந்து ப்ரபோஸ் பண்ணுவா!

தட் தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் மொமன்ட்.!

twitter.com/udanpirappe

எனி ஹெல்ப் ஷாலினியோட, பொலிட்டிகல் வெர்ஷன்  நம்ம வைகோதான்.

எவன் அரசியலுக்கு வரேன்னு சொன்னாலும், முதல் ஆளா போய் நிக்குறாப்ல!

twitter.com/thoatta

ஒரு எலுமிச்சை 5 ரூபாய்க்கு விக்குது. ஆனா, நூறு எலுமிச்சை சக்தி கொண்ட பாத்திரம் விளக்குற சோப்பு பத்து ரூபாய்தான்னு விற்கிறான், அதே லாஜிக்தான் ஆன்மிக அரசியலும்!

twitter.com/SairSairam

பெண்களை ஆப்பிள் ஐபோன் வாங்கிக் கொடுத்தும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் இதே ஆண்கள்தான்... அன்று வெறும் அல்வா மட்டும் கொடுத்து சமாதானம் செய்தனர்!

வலைபாயுதே

twitter.com/manivannan7402

பெண்களுக்கு நீளமான கூந்தல் இருப்பதை ஷாம்பு விளம்பரத்தில்தான் பார்க்க முடிகிறது.

facebook.com/Santhosh Narayanan

அம்மா இல்லாத நாளில் தற்காலிகத் தாயாகப் பதவியேற்ற தகப்பன், கடைசியில் ஒரு ‘நைஸ் தோசை’ வராமல் தன் சாம்ராஜ்ஜியத்தை இழக்கிறான்.

twitter.com/ArunPandiyanMJ

வடிவேலு, கவுண்டமணி எப்படி போட்டோ கமென்ட் மெட்டீரியலோ... அதே மாதிரி சீமான் ஒரு பயங்கரமான வீடியோ கமென்ட் மெட்டீரியல்!

twitter.com/SettuOfficial

ஒரு மழை இரவில் இருவரும் கை கோத்து நடக்கையில் காதல் மட்டுமே தேங்கியிருந்தது சாலையில்!

வலைபாயுதே

twitter.com/m3rcel

மக்களுக்குத் தொந்தரவு இல்லாம டிரைவருங்க போராட்டம் பண்ணணுமாம். வெள்ளம் வந்தப்ப டிரைவர்களுக்குத் தொந்தரவு தராம நீங்க நீந்திப் போனீங்களா?!

twitter.com/SettuOfficial

இந்த மீடியாவுல வேலை பாக்குறவங்க தொல்லை தாங்க முடியல. எவன் பர்த்டே வந்தாலும் அவன்கூட எடுத்த போட்டோவ தூக்கிட்டு வந்திடறாங்க ஸ்கூல் குழந்தைங்க மாதிரி!

facebook.com/Senthil Vel

நாம் பயன்படுத்தும் பல்வேறு சேவைகள் தொடர்பாக வரும் அலைபேசி அழைப்புகள் ஆங்கிலத்திலும், சில நேரம் ஹிந்தியிலும் மட்டுமே இருக்கின்றன.. நான் தொடர்ச்சியாக அவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிரித்து, தமிழ் மட்டுமே தெரியும் என்று சொல்லுவது வழக்கம். காரணம், நுகர்வோரின் தாய்மொழி என்னவென்று தெரியாமல் ஏன் நிறுவனங்கள் இவ்வாறு செயல்பட வேண்டும் என்பது. மற்றொரு காரணம், தமிழில் மட்டுமே உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே, ஏராளமான தமிழ் பேசும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்..

twitter.com/writernaayon

உன்னைப்போலவே ஒருத்தி கடந்து செல்கிறாள். இம்முறை அந்தத் தவற்றைச் செய்யமாட்டேன்!

வலைபாயுதே

twitter.com/Kannan_Twitz

தன்னை எதிர் நோக்கி வரும் பெண்ணைக் கண்டுகொள்ளாத மாதிரியும் கடக்க வேண்டும், அதே சமயம் கடப்பதற்குள் ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும். #உத்தமன்

twitter.com/CreativeTwitz

தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி இருந்தாலும் வேட்டி, சேலை ஏழைகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படுகின்றன - ஜெயக்குமார் // என்னது வேட்டியா, அப்ப அது இட்லித் துணி இல்லையா?!

twitter.com/HAJAMYDEENNKS

இன்ஜினீயரிங் காலேஜ்ல படிச்சிட்டு சும்மா இருப்பது எப்படின்னு ஒரு கோர்ஸ் சொல்லிக்கொடுக்கலாம், படித்து முடித்ததும் உதவும்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு