வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (24/09/2018)

கடைசி தொடர்பு:09:27 (26/09/2018)

'விஜய் நடக்க ஆரம்பித்துவிட்டார்!''- காதல் மனைவி ஷில்பா பூரிப்பு

ந்து மாதங்களுக்கு முன், ரயில் விபத்தொன்றில் கால்களைப் பறிகொடுத்த வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யும், அவரை மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட காதல் மனைவி ஷில்பாவும் மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு தற்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், விஜய்க்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு, அவை அவருக்கு செட்டாகி, நடக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதே அந்த நிம்மதிக்கான காரணம்.

செயற்கை கால்களுடன் விஜய்

இரண்டு தினங்களுக்கு முன்பு, விஜய்யின் ஸ்டேட்டஸில், 'கடவுளே நாங்க சீக்கிரமா வீட்டுக்குப் போகணும். எங்க அத்தையைப் பார்க்கணும்' என்ற வார்த்தைகள் கண்ணீர்த்துளிகளுடன் இடம் பெற்றிருந்தது. ஷில்பாவுக்கு போன் செய்து, என்ன பிரச்னை என்று விசாரித்தேன். ''போன வாரமே விஜய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கணும். அது கொஞ்சம் தள்ளிப் போயிடுச்சு. அதனால,  மனசு கஷ்டத்துல நான்தான் அப்படியொரு ஸ்டேட்டஸ் வெச்சிட்டேன். மத்தபடி,  இப்போ  அவர் நல்லா நடக்க ஆரம்பிச்சிட்டாரு மேடம். இதோ, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணப் போறதா டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க'' என்று பூரிப்பாகச் சொல்கிறார் ஷில்பா.

மனைவி ஷில்பாவுடன்

அவரை இடைமறித்த கணவர் விஜய், ''வீட்டுக்குப் போகணும்;  நான் படிச்ச கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஏத்த வேலை தேடணும்; அம்மா, ஷில்பா, என் தம்பி, என் தங்கச்சி எல்லாரையும் நல்லா வெச்சு பார்த்துக்கணும். இப்ப மனசு பூரா வேலை கிடைக்கணுமேங்கிற கவலை மட்டும் இருக்குங்க'' என்று மனம் நிறைய பாரத்துடன் பேசுகிறார் விஜய்!